மழை காலத்தில் மண் வாசனை பிடிக்காதவர்கள் யார் உண்டு? இல்லை அல்லவா? என்னைப் போலவே பலர் மழைத்துளிகளை ரசிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
மழை காலம் வந்துவிட்டால் போதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு குஷியோ குஷி. ஏனென்றால் மாதத்தில் பாதி நாட்கள் விடுமுறையாகவே கழிந்துவிடும்.
இருப்பினும், மக்கள் மழைக்காலத்தை வெறுப்பதற்கு சில காரணங்கள் உள்ளன: மின்தடை, போக்குவரத்து நெரிசல், நோய் பரப்பும் பூச்சிகள் மற்றும் பல.
இந்த நேரத்தை நீங்கள் முழுமையாக அனுபவிக்க விரும்பினால், மழைக்காலத்தில் நீங்கள் பின்பற்ற வேண்டிய 10 அத்தியாவசிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் (Safety Tips during rainy season).

அத்தியாவசிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள்
- மழை புயல் காலங்களில் கடைகளுக்கு செல்வதில் மற்றும் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும் அதனால் நமக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களை முன்பே வாங்கி வைத்துக் கொள்ளலாம் (Malai kalam safety tips).
- புயல் நேரங்களில் அதிக காற்று அடிக்கும் பட்சத்தில் நாம் வெளியே செல்வது ஆபத்தாகும், ஆகையால் அச்சமயத்தில் வீட்டில் இருப்பதே நல்லது.
- மழைக்காலங்களில் மின்தடை அதிகமாக ஏற்படும். ஆகையால் நமக்குத் தேவையான தண்ணீரை நீர் சேமிப்பு தொட்டியில் எச்சரிக்கையாக சேமித்துக் கொள்வது அவசியம். அப்படி சேமிக்கப்பட்ட நீரை நாம் அருந்துவதற்கு முன்பு நன்கு காய்த்து பருகவும்.
- புயல் ஏற்படும் சமயத்தில் மின்சார தடை அதிகமாகவே காணப்படுகிறது எனவே செல்போன்களுக்கு சார்ஜ் போட்டு வைத்துக் கொள்வது அவசியம் மற்றும் *எமர்ஜென்சி விளக்குகளை தவறாமல் எடுத்து வைத்துக் கொள்ளவும் அப்படி இல்லாத பட்சத்தில் மெழுகுவர்த்திகளை பயன்படுத்துவது நல்லது.
Also Read–> புதிய போக்குவரத்து விதிகள் | Traffic Rules and Fines in Tamil Nadu
- மழை பெய்யும் போது குழந்தைகளை வெளியே விளையாட விடாதீர்கள் மற்றும் தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களுக்கு விடாதீர்கள். தண்ணீர் தேங்கி நிற்கும் இடங்களில் அதிகமாக கொசுக்கள் உருவாகும் ஆகையால் பல நோய்கள் வரும்.
- நம் வீட்டை சுற்றியுள்ள இடங்களில் தண்ணீர் தேங்க விடாமல் பாதுகாப்பது நல்லது (rainy season safety tips in Tamil).
- மழை நேரங்களில் நம்மையும் நாம் இருக்கும் இடத்தையும் சுத்தமாக வைத்திருப்போம்.
- மழை நேரங்களில் வெளியில் செல்வதற்கு இருசக்கர வாகனத்தையோ கார்களையோ பயன்படுத்த வேண்டாம்.
- அப்படி பயன்படுத்தும் பட்சத்தில் மரத்திற்கு அடியிலோ , மின் கம்பங்களுக்கு அடியிலோ மற்றும் சாலை ஓரங்களிலோ நிறுத்துதல் கூடாது.
- மழை நேரங்களில் முக்கியமான ஆவணங்களை பத்திரப்படுத்துதல் அவசியம். ஆதார் அட்டை , ஓட்டுனர் உரிமம் ,குடும்ப அட்டை மற்றும் முக்கிய சான்றிதழ்கள் போன்றவற்றை பத்திரமாக வைக்கவும்.
- மழை காலங்களில் இடி மின்னல் ஏற்படும் நேரத்தில் அலைபேசியை பயன்படுத்துதல் ஆபத்து. செல்போனை பயன்படுத்தி போட்டோ எடுப்பது , வீடியோ எடுப்பது கூடாது.
- மழை நேரங்களில் வெளியே செல்லும்போது மரங்களுக்கு அடியிலோ பழைய கட்டிடங்களுக்கு அடியிலோ ஒதுங்குதல் கூடாது.
- இவ்வாறு நாம் இருக்கும் பட்சத்தில் மழை,புயல், வெள்ளம் அனைத்தையும் கடந்து செல்லலாம்.
Also Read–> தமிழ்நாட்டில் அவசர உதவி எண்கள் – Emergency Numbers in Tamil Nadu
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.
FAQ’s For Safety Tips for the Rainy Season
ஜன்னல்கள், கதவுகள் மற்றும் மின்சாதனங்களில் இருந்து விலகி, உறுதியான கட்டிடத்திற்குள் உடனடியாக பாதுகாப்பான தங்குமிடம் எடுங்கள். மின்சாரம், உபகரணங்கள், உலோகப் பொருள்கள் மற்றும் நீர் கடத்திகளுடன் தொடர்பைத் தவிர்க்கவும். படகுகளில் இருந்து வெளியேறவும், தண்ணீரிலிருந்து விலகிச் செல்லவும்.
தொடர் மழையின் மற்றொரு விளைவு, நாம் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜனின் கடுமையான பற்றாக்குறையாகும். ஆரோக்கியமான மண்ணில் ஆக்ஸிஜன் உள்ளது. ஆனால் அதில் அதிக தண்ணீர் இருப்பதால், ஆக்ஸிஜனுக்கான இடம் மிகவும் குறைவாக இருக்கும். நீர் அரிப்பு வேர்களை வெளிப்படுத்தி, மரங்களையும் தாவரங்களையும் நிலையற்றதாக மாற்றும்.
‘பெட்ரிச்சோர் விளைவு’ உங்கள் மனதை அமைதிப்படுத்துகிறது மற்றும் மனநிலையை பாதிக்கும் மூளை இரசாயனங்களை ஒழுங்குபடுத்துகிறது. மழையின் சத்தம் மிகவும் இனிமையானது. மழையின் சத்தம் வெள்ளை சத்தமாக கருதப்படுகிறது. நிதானமான மற்றும் அமைதியான தியானமாக மழைப்பொழிவை உள்ளடக்கிய பல பிரபலமான பயன்பாடுகள் உள்ளன.
கடலில் உள்ள வெதுவெதுப்பான நீர் ஆவியாகி காற்றில் கலக்கிறது. இதனால் இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் காற்று திசை மாறி நிலத்தை நோக்கி ஈரப்பதம் வீசுகிறது. சூடான, ஈரமான காற்று பின்னர் ஒடுங்கி மழையாக மாறும். இதன் விளைவாக ஈரப்பதம் மற்றும் பல மாதங்கள் நீடிக்கும்.
கனமழையின் போது நீங்கள் மனச்சோர்வடைந்தால், அது உங்கள் கற்பனையல்ல: மோசமான வானிலை உண்மையில் உங்கள் உணர்ச்சிகளில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும். ஒரு ஆய்வின்படி, ஏறக்குறைய 9 சதவிகித மக்கள் “மழையை வெறுப்பவர்கள்” வகைக்குள் வருகிறார்கள். அதிக மழைப்பொழிவு உள்ள நாட்களில் இந்த குழு கோபமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறது.
ஈரமான, குளிர்ந்த காலநிலை தசை வலிகள் மற்றும் உடல் வலிகளை மோசமாக்கும், குறிப்பாக உள்வரும் புயல்களுடன் தொடர்புடைய பாரோமெட்ரிக் அழுத்தத்தில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஆளாகக்கூடியவர்களுக்கு வலிகளை உண்டாக்கும். இரத்த நாள சுருக்கங்கள் மார்பு அல்லது உடல் வலி மற்றும் மூட்டுகள் மற்றும் மூட்டுகளில் வலியை ஏற்படுத்தும்.
மழை நாட்கள் பெரும்பாலும் மனச்சோர்வு மற்றும் சோகத்திற்கு பங்களிக்கின்றன. சூரிய ஒளியின் பற்றாக்குறையால் செரோடோனின் அளவு குறைவதே இதற்குக் காரணம். செரோடோனின் அளவு குறைவது ஆறுதல் உணவுகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுக்கான உணவு பசிக்கு பங்களிக்கிறது, ஏனெனில் அவை செரோடோனின் அளவை அதிகரிக்கின்றன.