Thursday, June 8, 2023
Homeசெய்திகள்வாடகைக்கு வீடு தேடுபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்காக!

வாடகைக்கு வீடு தேடுபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்காக!

Things should know before rent a house in Tamil

இந்த உலகத்தில் மனிதர்கள் 50 சதவீதம் பேர் வாடகை மற்றும் வீடு குத்தகையில் தான் வாழ்ந்து வருகின்றனர். இதில் 10 சதவீத மக்கள் வீடுகள் இருந்தும் சந்தர்ப்ப சூழ்நிலைகள், கம்பெனிக்கு செல்பவர்கள் மற்றும் வியாபார நோக்கத்திற்காக இருப்பவர்கள் இருக்கிறார்கள். மற்ற 40 சதவீதம் பேர் சொந்த வீடு கட்ட முடியாமல் சூழ்நிலையால் வாடகை வீட்டிற்கு செல்லப்பட்டவர்கள் ஆவர் (Govt Rules for Rental house).

Things should know before rent a house in Tamil
Things should know before rent a house in Tamil

இதில் வாடகைக்குச் செல்பவர்கள் அல்லது வாடகைக்குக் விடுபவர்கள், தமிழ்நாடு வாடகை சட்டம் பற்றி தெரியாமல் இருப்பதால் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனை சரிகட்டவே இருதரப்பினர்களும் வீடு வாடகை சட்டத்தை பற்றி தெரிந்து கொள்வது அவசியமாகும் (Rental house rules in Tamil Nadu).

இருதரப்பினருக்கும் அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள்

  1. வீடு வாடகைக்கு கொடுக்கபோகிறவர்கள் கண்டிப்பாக ஒப்பந்தத்தை தயார் செய்து கொள்ள வேண்டும். அதில் அனைத்து விவரங்களையும் விதிமுறைகளையும் தெள்ள தெளிவாக குறிப்பிட்டால் நல்லது.
  2. 60 நாட்களுக்குள் ரெஜிஸ்டர் (0.25 % ஸ்டாம்ப் பீஸ்) செய்தல்.

குறிப்பு

வாடகைக்கு வீடு விதிமுறைகள்: வாய்மொழியாக வீட்டினை வாடகைக்கு விடக்கூடாது. பின் நாட்களில் அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவதும் மற்றும் வாடகை வசூல் செய்வதும் கஷ்டமாகும். எந்த வித எழுத்துபூர்வமான ஆதாரங்கள் இல்லை என்றால் வீட்டை காலி செய்ய மிகவும் சிரமம் ஏற்படும்.

வாடகைக்கு வீடு விதிமுறைகள்
வாடகைக்கு வீடு விதிமுறைகள்

முதலில் ஒப்பந்த படிவம் ஒன்றை வீட்டின் உரிமையாளர் வைத்திருப்பார். அதில் வீட்டின் உரிமையாளர்கள் என்னென்ன விவரங்கள் போட்ருப்பார்கள் என்று கீழே பார்ப்போம்.

Also Read–> புதிய போக்குவரத்து விதிகள் | Traffic Rules and Fines in Tamil Nadu

  1. வாடகை குடியிருப்பவர் பெயர், வயது, அவருடன் எத்தனை பேர் குடியிருக்க போவார்கள், அவர்களுடைய முகவரி, ஏதாவது ஒரு proof.
  2. எத்தனை மாதம் இருப்பார்கள்!
  3. அட்வான்ஸ் தொகை
  4. மாத வாடகை தொகை
  5. கையொப்பம்

இது எல்லாமே அதில் அவர் தெள்ள தெளிவாக அந்த ஒப்பந்தத்தில் போட்டு இருப்பார் அதனை வாடகை பெறுபவர்கள் படித்து விட்டு கையொப்பம் இட வேண்டும், மேலும் 11 மாதங்களுக்கு மட்டுமே அந்த ஒப்பந்தம் இருக்கும். ஒருவேளை நீங்கள் அதிகமாக அந்த இடத்தில வசிக்க நேர்ந்தால் மறுபடியும் அந்த இடத்தில் இருக்கலாம்.

  • மாத மாதம் வீடு வாடகை ரசீது ( இதனை கட்டாயம் வீட்டில் குடியிருப்பவர் வாங்கியே ஆக வேண்டும் அப்படி கொடுக்கமுடியாத நேரத்தில் வங்கி மூலமோ செலுத்துங்கள்).
  • வீட்டினை காலி செய்ய வேண்டுமென்றால் முன்கூட்டியே அறிவித்தல் வேண்டும்.
  • முன்பணமாக இரண்டு மாத வாடகை பணம் செலுத்த வேண்டும்.
  • ஒப்பந்தம் முடிந்த உடனே மறு ஒப்பந்தம் போடுதல் (வாடகை குறியிருப்பவர்கள் தங்கும் பட்சத்தில்) அவசியம் (Rules for Rental House in Tamil).
  • வீட்டினை சேதப்படுத்துதல், வாடகை 15 நாட்களில் இருந்து 30 நாட்கள் வரையும் கட்டாமல் இருப்பது மற்றும் இதர காரணங்கள் எல்லாம்’ ஒப்பந்தத்தில் எழுதினால் பின்னாளில் யூஸ் ஆகும்.
  • ஒப்பந்தம் முடிந்த பின்பும் காலி செய்யவில்லை என்றால் இரண்டு மடங்கு மாத வாடகை பணம் வசூல் செய்யலாம் ( மாதிரி சட்டம் ஜூன் 02, 2021).

இது போன்ற அணைத்து விதமான தகவல்களையும் ஒவொருவரும் வாடகையுக்கு வீடு பார்ப்பதற்கு முன் கவனமாக படித்து அல்லது கேட்டு தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

Must Read–> குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் தெரிந்து கொள்ள

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments