Sunday, December 3, 2023
Homeசெய்திகள்ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Online Tamil

ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Online Tamil

முன்னெல்லாம் பட்டா மாற்றம் (patta transfer) என்பது அவ்வளவு எளிதல்ல. பிறகு e சேவை (e sevai) மூலம் சற்று எளிதாக செய்து கொண்டிருந்தனர். அதையும் எளிதாக்கும் விதமாக இப்பொழுது தமிழ்நாடு அரசு அனைவரும் online மூலமாக பட்டா transfer செய்யும் வகையில் செய்துள்ளது. ஒரு இடம் வாங்கும் பொழுது பத்திர பதிவு செய்வதோடு விட்டு விடாமல் பட்டா பெயர் மாற்றம் செய்தால் தான் அதன் முழு உரிமையும் நமக்கு கிடைக்கும். இப்பொழுது அந்த செயல்முறை (process) மிகவும் எளிதாக உள்ளது. (How to transfer patta online easy in tamil) https://tamilnilam.tn.gov.in/citizen/login.html இதுதான் website.

How to Apply Patta Name Transfer Online in Tamil Nadu
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| How to Apply Patta Name Transfer Online in Tamil Nadu

தெரிந்து கொள்ள வேண்டியவை? (Need to Know)

இந்த வலைத்தளத்தில் பதிவு செய்ய தேவையான விவரங்கள்

  • பெயர்
  • கைப்பேசி எண்
  • முகவரி

Patta Name Transfer – யார் விண்ணப்பிக்கலாம்?

பட்டா மாறுதல் கோரும் எந்த ஒருகுடிமகனும் விண்ணப்பிக்கலாம்

Online Patta Name Transfer தேவைப்படும் ஆவணங்களின் விவரம்

  • இணைப்பின் அளவு 3 MB க்கு மிகாமல் (file does not exceed 3 MB)
  • கிரையப் பத்திரம் (sale deed)
  • செட்டில்மென்ட் பத்திரம் (settlement seed)
  • பாகப்பிரிவினை பத்திரம் (partition deed)
  • தானப் பத்திரம் (gift deed)
  • பரிவர்தனை பத்திரம் (exchange deed)
  • அக்கு விடுதலைப் பத்திரம் (release deed)

பட்டா மாறுதல் வகைகள் (Patta Name Transfer Types)

  1. உட்பிரிவுள்ள இனங்கள் (Involving Subdivision Patta Transfer)
  2. உட்பிரிவு அல்லாத இனங்கள் (Non Involving Subdivision Patta Transfer)

பட்டா மாற்றம் – உட்பிரிவு அல்லாத இனங்கள் (Patta Transfer Through Non Involving Subdivision )

ஒரு முழு சர்வே எண் (survey no) உள்ள இடத்தையோ அல்லது கூட்டு பட்டாவில் இருந்து ஒரு முழு சர்வே எண் உள்ள இடத்தையோ பட்டா மாற்றம் பட்டா transfer) செய்யும்பொழுது இந்த வகையை நாம் பயன்படுத்துகிறோம்.

உட்பிரிவு அல்லாத இனங்களில் பட்டா மாற்றம் என்பது இரண்டு முறைகளில் நடைபெறுகிறது.

  • முழு புலம் (Full Survey No)
  • கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்டா மாற்றம் செய்தல்

ஒருவர் தன் பெயரில் உள்ள இடத்தின் பட்டாவை வேறொருவருக்கு மாற்ற வேண்டுமெனில் (full survey no) இம்முறையில் மாற்றலாம். மற்றும் கூட்டு பட்டாவில் இருந்து தனிப்பட்ட நபருக்கு பட்டா மாற்றம் செய்யும்பொழுது இம்முறையில் மாற்றலாம் அப்படி மாற்றும் பொழுது மாற்றப்பட வேண்டிய இடத்தின் பட்டா வில் உள்ள சர்வே எண் கீழ்வரும் முழுமிடத்தையும் மாற்றம் செய்யுமாறு இருக்க வேண்டும்.

Clubbing Patta Transfer

உட்பிரிவு அல்லாத இனத்தில் Clubbing patta transfer என்பது ஒரு முறையாகும் இதில் ஒரு பட்டா எண்ணின் கீழ் 10 சர்வே நம்பர்கள் உள்ளது எனில் அதனை ஒரு சர்வே எண்ணிற்கு கீழ் மாற்றி பட்டா மாற்றம் செய்வது.

Also Apply –> ஆன்லைனில் உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி?

Patta Transfer தேவைப்படும் மற்ற ஆவணங்கள்: (Certificates)

ID PROOF:

  • ஆதார் கார்டு(aadhar card)
  • பான் கார்டு (PAN card)
  • ஓட்டுனர் உரிமம் (Driving license)
  • பாஸ்போர்ட் ( passport)
  • வாக்காளர் அடையாள அட்டை(voter id)
  • ஸ்மார்ட் கார்டு (smart card)
Note: இவற்றுள் ஏதேனும் ஒன்றினை அடையாள (ID proof) கொடுக்க வேண்டும்

RESIDENCY PROOF: (குடியிருப்புச் சான்று)

  • ஆதார் கார்டு(Aadhar card)
  • தொலைபேசி கட்டண ரசீது (telephone bill)
  • மின் கட்டண ரசீது (electricity bill)
  • கேஸ் சிலிண்டர் ரசீது (
  • பாஸ்போர்ட்(passport)
  • வாக்காளர் அடையாள அட்டை (voter ID)

இவற்றில் ஏதேனும் ஒன்றினை குடியிருப்பு சான்றாக (residency proof) அளித்தல் வேண்டும்.

Note: பெற்றோர் இருவரில் யாரேனும் இறந்திருந்தால் இறப்புச் சான்றிதழும் (death certificate) வாரிசு சான்றிதழும் (heir certificate) வைத்திருக்க வேண்டும்.

Steps to Transfer Patta in Online in Tamil:

இப்பொழுது https://tamilnilam.tn.gov.in/citizen/login.html வலைதளத்திற்கு செல்லவும்.

  1. User registration (பயனர் பதிவு)
  2. தமிழ் நிலம் வலைதளத்திற்கு புதியவரா? என்பதை தேர்வு செய்யவும்
  3. பின் பட்டா மாற்றம் செய்யப்படும் நபரின் பெயர் (name), மின்னஞ்சல் (email id), தொலைபேசி எண் (mobile no) ஆகியவற்றை உள்ளீடு செய்யவும். பின் ‘தொடர்க’ என்பதை click செய்யவும்
  • Captcha enter செய்யவும். Then click verify (சரிபார்க்க)
  • பிறகு தொலைபேசி எண்ணிற்கு otp அனுப்பப்படும்
  • Otp ஐ enter செய்யவும். அடுத்து Click register.
  1. பிறகு Mobile no use செய்து login செய்து கொள்ளவும்
  2. பயனர் சுயவிவரத்தை பூர்த்தி செய்யவும் (personal details)
  • Father name
  • Mother name
  • Mail ID (optional)
  • Permanent address
  • Temporary address
  • date of birth
  • Gender

Click continue, Profile updated என திரையில் வரும். பிறகு மீண்டும் Mobile No பயன்படுத்தி Log in செய்து கொள்ளவும்.

Select Type of Transfer:

  • உட்பிரிவுள்ள இனங்கள் (involving subdivision patta transfer) or
  • உட்பிரிவு அல்லாத இனங்கள் (non involving subdivision patta transfer) ஏதேனும் ஒன்றை click செய்யவும்.

இப்பொழுது இதில் உட்பிரிவு அல்லாத இனத்தில் எவ்வாறு பட்டா மாற்றம் செய்வது என்பதை பார்ப்போம்

  1. உட்பிரிவற்ற பட்டா மாற்றம் (Non Involving Subdivision Patta Transfer) click செய்யவும்.
    பிறகு திரையில்
  • பெயர்
  • கைபேசி எண்
  • சேவையின் வகை
  • கட்டணம்
  • Display செய்யப்படும்.
  • Click ‘அடுத்து'(next)
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் | Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் | Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
  1. Applicant details (விண்ணப்பதாரர் விபரம்)
    நாம் ஏற்கனவே கொடுத்த விவரங்கள் display ஆகும். பிறகு ‘அடுத்து’ (next) என்பதை கிளிக் செய்யவும்
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் | Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
  1. Land details (நில விவரம்)
  • மாவட்டம் (district)
  • வட்டம் (taluk)
  • கிராமம் (Village)
  • காரணம் (reason)
    (Apply செய்யும் பொழுது விண்ணப்பதாரரிடம் கேட்டு பூர்த்தி செய்யவும்)
  • சார்பதிவாளர் அலுவலகம் (SRO) (பத்திர பதிவு செய்யப்பட்ட இடம்)
  • ஆவணம் பதிவு செய்யப்பட்ட பதிவு தேதி (registration date) ( பத்திரத்தில் இருக்கும்)
  • ஆவணப் பதிவு எண் (registration number) பத்திரம் அல்லது EC இருக்கும்
  • புல எண் (survey number)
  • உட்பிரிவு எண் (subdivision number)
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil

போன்றவற்றை, உள்ளீடு செய்யவும். பிறகு நிலவகை என்பதை தேர்வு செய்யவும். பிறகு “நில விவரங்களை சேர்க்கவும்” (add land details) click செய்யவும்.

  1. இணைப்பு விவரங்கள்
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்| Patta Name Transfer Tamil
  • அடையாள அட்டை
  • pdf.png.jpg/400KB **
  • முகவரிக்கான ஆதாரம்
  • pdf.png.jpg/400KB **
  • பதிவு பத்திரம்
  • pdf / 3MB **
  • இறப்பு சான்றிதழ்
  • pdf/500KB (optional)
  • வாரிசு சான்றிதழ்
  • pdf/500KB (optional)
Note: கட்டாயம் இணைக்கப்பட வேண்டும்.

இங்கு தேர்ந்தெடுத்த நிலங்களின் முழுமையான உரிமையாளர் நான் என்பதையும், இந்த நிலங்கள் (கள்) நில உச்சவரம்பு பணி / பஞ்சமி தகராறுகள் / நீதிமன்ற வழக்குகளின் கீழ் இல்லை என்பதையும் இதன்மூலம் அறிவிக்கிறேன் என்று declaration checkbox click செய்துவிட்டு பிறகு (submit) சமர்ப்பிக்கவும்.
Application id குறித்து வைத்து கொள்ளவும். Acknowledgement 2 copy print செய்து கொள்ளவும்.

கட்டணம்

Non-Involving Patta Transfer கட்டணம் என்பது கிடையாது. முற்றிலும் இலவசம். E sevai மையத்தில் விண்ணப்பித்தால் ரூ.60 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பட்டா மாற்றம் – உட்பிரிவு உள்ள இனங்கள் (Patta Transfer Through Involving Subdivision)

எடுத்துக்காட்டாக பட்டா எண் 485 survey no 98/6 கொண்ட ஒரு இடம் 20 சென்ட் அளவு கொண்டுள்ளது எனில் அதிலிருந்து ஒரு 10 சென்ட் மட்டும் பட்டா பெயர் மாற்றம் செய்தால் இம்முறை பயன்படுத்தப்படுகிறது.

இதில் முதலில் surveyor க்கு விண்ணப்பிக்க வேண்டும். சர்வேயர் நிலத்தினை அளந்து அதற்கான வரைபடத்தை இணையத்தில் பதிவேற்றம் செய்வார்.

இதில் நில விவரங்களில் மட்டும் சில மாற்றங்கள் இருக்கும். மற்றபடி அனைத்து செயல்முறைகளும் உட்பிரிவற்ற இன பட்டா மாற்றத்தில் உள்ளது போலவே தான்.

கட்டணம்

Application Fee [Rs. 60] + Sub Division Fee (Rs. 400 per subdivision) + taxes applicable.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் ஆனது VAO LOGIN க்கு சென்ற பிறகு தாசில்தார் LOGIN சென்று பிறகு approve செய்யப்படும்.

விண்ணப்பித்த பிறகு விண்ணப்பத்தின் நிலையை (application status) ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம்.
https://tamilnilam.tn.gov.in/citizen Tamil Nilam Citizen Portal Login செய்து application number மற்றும் captcha enter செய்து submit செய்தால் Application Status Display செய்யப்படும்.

மேலும் பட்டா சிட்டா பற்றிய அணைத்து தகவல்களையும் pattachitta.co.in எனும் வலைத்தளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Also Read –> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி? How to Apply Pan Card Online in Tamil

மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

FAQ’s for ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல்

தமிழ்நாட்டில் பட்டா பரிமாற்றக் கட்டணம் எவ்வளவு?

பட்டா பரிமாற்றத்திற்கான விண்ணப்பத்தை மாநிலம் முழுவதும் உள்ள எந்த பொது சேவை மையங்களிலும் (CSC) தாக்கல் செய்யலாம். CSC களில் ஒரு விண்ணப்பத்திற்கு Application Fee [Rs. 60] + Sub Division Fee (Rs. 400 per subdivision) + taxes applicable.

பட்டா எண் தானாக மாறுமா?

இதுபோன்ற சந்தர்ப்பங்களில், நில உரிமையாளர் ஏற்கனவே ஆன்லைனில் பட்டா பெற்றிருந்தால், பட்டா வழங்கும்போது, பட்டாவின் உண்மைத்தன்மையை வருவாய்த்துறை அதிகாரிகள் (VAO & ZDT) ஏற்கனவே சரிபார்த்திருப்பார்கள். எனவே, அதே சொத்தை அடுத்தடுத்து விற்கும் பட்சத்தில், தானியங்கு மாற்றம் செயல்படுத்தப்படும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments