Marriage Registration Rules in Tamil Nadu
திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதிகள் தங்களின் திருமணத்திற்கான அடையாளமாக திருமணத்தை பதிவு செய்து கொள்வது 2009-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது (How To Register Marriage in Tamil). திருமணத்தைப் பதிவு செய்தால் மட்டுமே அரசின் திருமண உதவித்தொகைகளையும் பெறமுடியும் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.

திருமணத்தை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்ய என்னென்ன ஆவணங்கள் தேவை?
- Marriage Registration Documents in Tamil: திருமணம் முடிந்த தம்பதிகள் 90 நாட்கள் முதல் 150 நாட்களுக்குள் தங்கள் திருமணத்தை பதிவுசெய்ய வேண்டும். திருமணத்தைப் பதிவு செய்யாதவர்கள் அரசின் திருமண உதவித் திட்டங்களுக்கு விண்ணப்பிக்கமுடியாது.
- திருமணம் முடிந்த தம்பதிகள் https://tnreginet.gov.in/portal/ என்ற இணையதள பக்கத்தில் உள்ள திருமணப்பதிவு என்ற பகுதிக்குச் சென்று, அதில் உள்ள விண்ணப்பத்தை இணையத்திலேயே பூர்த்தி செய்யவேண்டும்.
- விண்ணப்பித்து முடித்தவுடன் உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்தின் இணையதள பக்கத்திற்கு உங்கள் விண்ணப்பம் அனுப்பிவைக்கப்படும்.
- அதன்பின், சிலமணி நேரங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு ஒரு Message அனுப்பி வைக்கப்படும். அதில் உங்கள் திருமணத்தை பதிவுசெய்துகொள்ள, நீங்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரவேண்டிய தேதி மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
- குறிப்பிடப்பட்ட தேதியில் உங்களின் ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, ஒரிஜினல் ஆவணங்களுடன் உங்களின் இணையர் மற்றும் சாட்சி கையொப்பமிட மூன்று நபர்களுடன் சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் செல்லவேண்டும்.
- குறிப்பிட்ட தேதிக்குள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை என்றால், சட்டப்படி குற்றம். அதுமட்டும் இல்லாமல் தண்டனையும் உண்டு. அதற்கான தண்டனை 1000 ரூபாய் அபராதம் ஆகும் .

இணைக்க வேண்டியவை :
- Marriage Registration Seiya Thevaiyana Aavanam:ஆன்லைன் விண்ணப்பம் திருமணம் நடந்ததற்கான ஆதாரங்கள் ( திருமண அழைப்பிதழ், கோவில், பள்ளிவாசல், சர்ச் என எங்கு திருமணம் நடந்ததோ அதற்கான ரசீது )
- முகவரிச் சான்றுக்காக வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை, இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் வயதுச் சான்றுக்காக பிறப்புச் சான்றிதழ் ,கல்விச் சான்றிதழ் ஓட்டுநர் உரிமம் அல்லது குடும்ப அட்டை
- இவற்றில் ஏதேனும் ஒன்றின் நகல் சாட்சி கையொப்பம் இடும் மூன்று நபர்களின் அடையாள அட்டை மணமக்களின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் எடுத்து கொள்ள வேண்டும்.
Apply Now–> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி?
இணைக்க வேண்டிய சான்றிதழ் விவரங்கள்:
- பள்ளி/கல்லூரி மாற்று சான்றிதழ் (Transfer Certificate), நீங்கள் படிக்காதவர்களாக இருந்தால் உங்களுடைய பிறப்பு சான்றிதழ் சமர்பிக்கலாம்.
- ஆதார் அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை சப்மிட் செய்யலாம்.
- ரேஷன் கார்டு அல்லது ஸ்மார்ட் கார்ட் இணைக்கலாம்.
- திருமனத் தம்பதிகளின் நான்கு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ சமர்ப்பிக்கவும்.
- திருமணத்தை பதிவு செய்யும் பொழுது சாட்சி கையப்பம் போடுவதற்கு இரண்டு நபர்கள் வேண்டும். அப்படி போடுபவர்களின் அடையாள அட்டை சேர்த்து எடுத்து வரவும்.
- திருமணம் பத்திரிக்கை இரண்டு சேர்த்து இணைக்க வேண்டும்.
Read–> வாடகைக்கு வீடு தேடுபவரா நீங்கள்? இந்த பதிவு உங்களுக்காக!
செலுத்த வேண்டிய கட்டணம் :
- கட்டண தொகை 90 நாள்களுக்குள் பதிவு செய்தால் –> 100 ரூபாய் கட்டணமாகச் செலுத்தவேண்டும்.
- கட்டண தொகை 91 முதல் 150 நாள்களுக்குள் பதிவு செய்தால் –> அபராதக் கட்டணம் 50 ரூபாயுடன் 150 ரூபாய் செலுத்தவேண்டும்.
Must Read–> ஆதார் அட்டை தொலைந்தால் என்ன செய்ய வேண்டும்?
மேலும் விபரங்களுக்கு:
மேலும் தகவல்களுக்கு இணையத்தள பக்கம் https://tnreginet.gov.in/portal/ சென்றோ அல்லது 044-24640160 என்ற தொடர்பு எண்ணையோ அணுகி பயன்பெறலாம். பின்பு உங்கள் பகுதியில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேராக சென்று உங்களின் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.