Sunday, December 3, 2023
Homeபயனுள்ள தகவல்How to Link Voter ID with Aadhaar Card Online in Tamil| வாக்காளர்...

How to Link Voter ID with Aadhaar Card Online in Tamil| வாக்காளர் அட்டையை ஆதாருடன் லிங்க் செய்வது எப்படி?

உங்களின் Voter ID கார்ட்-ஐ வீட்டில் இருந்தவாறே ஆதார் நம்பருடன் இணைக்க முடியும். ஆன்லைன் மூலம் Voter ID கார்டை Aadhaar Number உடன் Link செய்வதற்கான முழு செயல்முறையையும் தகுந்த படங்களுடன் உங்களுக்கு விளக்குகிறேன்.

உங்க வோட்டர் ஐடீ ஆதார் கார்டுடன் லிங்க் செய்வதற்கு, voter portal என்ற இணையதளத்திற்கு சென்று உங்க மொபைல் அல்லது e-mail ஐடீ மூலம் அக்கௌன்ட் ஐ திறக்கலாம். Voter portalல் ஏற்கனவே அக்கௌன்ட் இருந்தால் login செய்யலாம் (voter id aadhaar link online).

Also Read –> Link Mobile Number with Voter ID Online in Tamil | வாக்காளர் அட்டையுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி?

Also Read–> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி? 

Create an Account in Voter Portal to Link Link Voter ID with Aadhaar

Step 1: https://voterportal.eci.gov.in என்ற இணைய பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

Step 2: அதில் Create an Account என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

Step 3: உங்க Email Id அல்லது Mobile Numberஐ Enter செய்து Send OTP என்பதை அழுத்தவும்.

Step 4: இப்போது நீங்க Enter செய்த மொபைல் நம்பர் க்கு 6 இலக்க OTP Number வரும். அதை கொடுத்து Verify என்பதை கிளிக் செய்யவும்.

Step 5: இப்போது Password-ஐ உருவாக்கும் பக்கம் திறக்கும். அதில் புதிய Passwordஐ Enter செய்ய வேண்டும். நீங்கள் உருவாக்கும் password (பெரிய மற்றும் சிறிய எழுத்து, சிறப்பு எழுத்துக்கள் மற்றும் எண்கள்) ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும். உதாரணம் , PRaveen@7869 என்றவாறு இருக்க வேண்டும். பிறகு Terms of Services என்ற Check Boxஐ டிக் செய்து Create Account என்ற பட்டனை அழுத்தவும் (voter id aadhaar link online).

Step 6: இப்போது நீங்கள் Voter Portalகான அக்கௌன்ட்ஐ வெற்றிகரமாக உருவாக்கிவிட்டீர்கள். அதற்கான செய்தி screen ல் தோன்றும். தற்போது Welcome என்பதை கிளிக் செய்யவும் (aadhaar voter id link status).

Step 7: கிளிக் செய்த சிறிது நேரத்தில் Profile டீடெயில்ஸ் ஐ Enter செய்வதற்கான பக்கம் திறக்கும். அதில் உங்க பெயர், மாநிலம் மற்றும் பாலினம் ஆகியவற்றை உள்ளிட்டு Submit என்பதை அழுத்தவும். தற்போது அக்கௌன்ட் ஐ உருவாக்கும் அனைத்து செயல்முறைகளும் முடிந்தது.

Step 8: கடைசியில் உள்ள Aadhaar Linkage என்பதை தேர்வு செய்யவும்.

Step 9: Let’s Start என்ற பட்டனை கிளிக் செய்யவும்.

Voter id

Step 10: இப்போது உங்களுக்கு இரண்டு options தோன்றும். அதில் இரண்டாவதாக உள்ள YES I Have Voter ID Number என்பதை தேர்வு செய்யவும்.

Step 11: உங்களின் 10 digit Voter ID Number யை Enter செய்யவும். இந்த Voter ID எண்ணை EPIC நம்பர் என்றும் கூறுவார்கள். Enter செய்த பிறகு Fetch Details என்பதை அழுத்தவும். நீங்கள் Enter செய்த வாக்காளர் எண், வாக்காளர் பட்டியலில் இருந்தால் Proceed என்ற பட்டன் தோன்றும். அந்த பட்டனை கிளிக் செய்யவும்.

Step 12: தற்போது உங்களின் வோட்டர் பட்டியலில் உள்ள அனைத்து தகவல்களும் தோன்றும். அதில் கீழே உள்ள Save &Continue என்பதை அழுத்தவும்.

Step 13: உங்க 10 digit மொபைல் நம்பர் ஐ உள்ளிட்டு Send OTP என்பதை கிளிக் செய்க.

Step 14: மொபைல் நம்பர் க்கு வரும் OTP Numberஐ உள்ளிட்டு Verify என்பதை அழுத்துக.

Step 15: Details of Person for Form -6B என்ற பக்கம் தோன்றும். அதில் Yes, I Have Aadhaar Number என்பதை டிக் செய்யவும்.

தற்போது உங்களின் Aadhaar Number மற்றும் ஆதாரில் இருப்பதை போன்று பெயர் ஆகியவற்றை Enter செய்யவும். இதில் நீங்கள் பெயரை ஆங்கிலத்தில் Type செய்யும் போது, தமிழில் பெயர் தானாகவே தோன்றும். அது சரியாக இருந்தால் அப்படியே விட்டுவிடலாம்.

ஒருவேளை தமிழில் பெயர் தவறாக இருந்தால், அதை நீக்கிவிட்டு நீங்களே தமிழில் Type செய்ய வேண்டும். பெயரை தமிழில் Type செய்வதற்கு Google Inuput Tool அல்லது பிற Tools களை பயன்படுத்தலாம்.

பிறகு கடைசியாக இருக்கும் Save & Continue என்பதை அழுத்தவும்.

Step 16: இப்போது Declaration பக்கம் திறக்கும். அதில் தேதி மற்றும் பெயர் ஆகியவை ஏற்கனவே fill செய்யப்பட்டிருக்கும். Place என்ற இடத்தில் உங்க ஊரின் பெயரை Enter செய்யவும். பிறகு Save & Continue ஐ கிளிக் செய்யவும்.

Step 17: பின் கடைசியாக Form 6B ன் படிவம் தோன்றும். அதில் அனைத்து டீடெயில்ஸ் ம் fill செய்யப்பட்டிருக்கும். அதை நீங்கள் ஒருமுறை சரிபார்த்துவிட்டு Submit என்பதை அழுத்தவும்.

Step 18: இப்போது Congratulations! You have submitted your application for form-6B in electoral roll என்ற செய்தி தோன்றும். அவ்வளவு தான் நீங்க ஆதார் மற்றும் வோட்டர்ஐடீ யின் லிங்க் ஐ வெற்றிகரமாக விண்ணப்பித்துவிட்டீர்கள்.

How to Check Voter to AADHAAR Link Status

சகிரீன்ல் ஒரு Referance ID தோன்றும். மேலும் அது உங்க மொபைல் நம்பர் கும் SMS வழியாக அனுப்பி வைக்கப்படும். அந்த நம்பர் ஐ கொண்டு விண்ணப்பத்தை Track செய்யலாம்.

அந்த விண்ணப்பத்தின் நிலையை எப்படி தெரிந்துகொள்வது என்று பார்ப்போம்.

Step 1: https://voterportal.eci.gov.in என்ற வெப்சைடில் உங்களின் அக்கௌன்ட்-ஐ Login செய்யவும்.

Step 2: Track Status >> Application என்பதை தேர்வு செய்க.

Step 3: அதில் Reference Number யை உள்ளிட்டு Track Your Status என்பதை கிளிக் செய்யவும்.

Step 4: தற்போது உங்களின் விண்ணப்பத்தின் நிலையை காணலாம்.

இதே போன்று உங்களின் குடும்ப உறுப்பினர்களின் வோட்டர் ஐடீ ன் நம்பர் ஐ அவர்களின் ஆதார் நம்பருடன் இணைக்க முடியும். இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால், உங்கள் கருத்துகளை comments ல் பதிவிடவும்.

FAQ’s for Voter ID Aadhaar Link Online

வாக்காளர் அட்டையை ஏன் ஆதாருடன் இணைக்க வேண்டும்?

Voter ID-ஐ ஆதார் நம்பருடன் இணைப்பதன் மூலம் போலி வாக்காளர்களை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களே mobile அல்லது computer மூலம் இணைக்க முடியுமா?

நிச்சயமாக இணைக்கலாம்.

அருகில் உள்ள நெட் சென்டரில் இணைக்க முடியுமா?

முடியும்.

மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments