Friday, June 9, 2023
Homeபயனுள்ள தகவல்மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? | How to Link Aadhar Number...

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி? | How to Link Aadhar Number With EB Number ?

எளிய வழிமுறைகள்:

தமிழகத்தில் ஆதார் எண்ணுடன் EB எண்ணை இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் தற்போது ஆதார் எண்ணையும் EB எண்ணையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

Link Aadhar Number With EB Number
How to Link Aadhar Number With EB Number ?

தமிழக அரசு அதிரடியாக இந்த சட்டத்தை கொண்டுவர காரணம் என்னவென்றால், எவ்வளவு பேர் சொந்த வீட்டில் உள்ளனர்? எவ்வளவு பேர் வாடகை வீட்டில் உள்ளனர்? ஒருவர் பெயரில் எத்தனை இணைப்புகள் உள்ளன? என்பது குறித்து எந்த ஒரு கணக்கும் மின்வாரியத்திடம் இல்லை!
அதுமட்டும் இல்லாமல் மின்சார வாரியத்தை மேம்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் தமிழக அரசு இவ்வித முடிவை எடுத்துள்ளது. புதிய தொழில் நுட்பத்திற்கு ஏற்ப தமிழக மின்சார வாரியத்தை நவீனமயமாக்க வேண்டும் என்பதற்காக ஆதார் எண் இணைக்கப்பட வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இது குறித்த பொதுவான சந்தேகங்கள்:

  • தமிழக அரசின் இந்த அதிரடி முடிவால் மக்களுக்கு பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது இந்நிலையில் இப்பதிவினை ஆதார் எண்ணையும் விதி எண்ணையும் இணைப்பதற்கான சந்தேகங்களை இப்பதிவில் காண்போம்.
  • மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் அரசு வழங்கும் இலவச மின்சாரமும் மானியமும் நிறுத்தப்படும் என்ற ஒரு தவறான தகவல் பரவி வருகிறது. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. குழந்தைகளுக்கான மானியம், கைத்தறி, விசைத்தறி நெசவாளர்கள், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
  • ஆதாருடன் ஈபி எண்ணை இணைப்பதன்மூலம் அரசால் ஏற்கனவே வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படும். பழைய நடைமுறையில் எவ்வித மாற்றமும் இல்லை.
  • ஒருவர் தனது பெயரில் எத்னை இணைப்பு வைத்திருந்தாலும் அவருக்கு பழையபடி வழங்கப்பட்ட 100 யூனிட் இலவச மின்சார வசதி தொடரும் இதில் எவ்வித மாற்றமும் இருக்காது.
  • மின் இணைப்பு எண் உள்ளவர் இறந்து போயிருந்தாள், EB பெயர் மாற்றத்தை இந்த வாய்ப்பின் மூலம் எளிதாக மாற்றிக் கொள்ளலாம்.
  • ஆதார் எண்ணை இணைத்த பின்புதான் மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று மின்சார வாரியம் கூறியுள்ளது. இதற்காக மின் கட்டணம் செலுத்த கூடுதலாக இரண்டு நாட்களுக்கு அவகாசம் கொடுத்துள்ளது.
  • வீட்டில் உரிமையாளர் அனுமதியோடு வாடகை வீட்டில் உள்ளவர்கள், அவரது ஆதார் எண்ணை அவர் குடியிருக்கும் வீட்டின் மின் நினைப்போடு இணைத்துக்கொள்ளலாம். வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய முடியும். ஆதார் எண் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே இதனால் எவ்வித பிரச்சனையும் எதிர்காலத்தில் வராது.
  • வாடகைக்கு குடியிருப்போர் ஆதார் எண்ணை இணைக்கும் போது சம்பந்தப்பட்ட நபர் தங்களது வீட்டில்தான் வாடகைக்கு குடியிருக்கிறாரா என வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி மூலம் உறுதி செய்யப்படும்

EB எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் வழிமுறைகள்:

EB எண்ணுடன் ஆதார் எண்களை இணைக்க 3 வழிகளை அரசு ஏற்பாடு செய்துள்ளது.

முகாம் மூலம்: ஈபி இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான பல முகாம்கள் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 31-ஆம் தேதி வரை பண்டிகை நாட்களில் தவிர ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து நாட்களிலும் இந்த முகாம் செயல்படும் என்று அரசு கூறியுள்ளது.

மின் நிலையம் மூலம்: காலை முதலே நுகர்வோர்கள் மின் இணைப்பில் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தனது ஆதார் கார்டுடன் சென்று எளிதாக இணைத்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் மூலம்: இது மட்டும் இல்லாமல் பத்து நிமிடத்தில் எளிதாக ஆன்லைன் மூலம் ஈபியாக EB எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைப்பதற்கான வசதி உள்ளது.

இப்பதிவில் ஆன்லைன் மூலம் 10 நிமிடத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி என விரிவாக பார்க்கலாம்.

How to Link an Aadhar Number With EB Number in Tamil?

Step 1–> ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைப்பதற்கு முன்பாக தங்களது ஆதார் மற்றும் மின் இணைப்பு அட்டையை தயாராக எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Step 2–> ஆதார் அட்டை புகைப்படத்தையும் பதிவேற்றம் (upload) செய்ய வேண்டி இருப்பதால் 500 KB அளவுக்கு குறையாமல் அதனை எடுத்து வைத்திருக்க வேண்டும்.

Also Read –> ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி ? How to Apply Ration Card Online in Tamil Nadu

Step 3–> முதலில் மின்சார வாரியத்தின் இணையதளமான https://www.tangedco.gov.in அல்லது https://adhar.tnebltd.org/adharupload/ என்ற இணையதளத்தில் சென்று ஆரம்பிக்கலாம்.

link your service connection number with aadhar
link your service connection number with aadhar

Step 4–> இந்த லிங்க்கை கிளிக் செய்தபின், இங்கு முகப்பு பகுதி ஓபன் ஆகும், அதில் link your service connection number with aadhar– என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்பொழுது ஒரு பேஜ் திறக்கப்படும். அதில் Information to consumers என்று இருக்கும். (domestic, power loom, agriculture and hut services மட்டும் தன் லிங்க் செய்ய முடியும்)

Information to consumers
Information to consumers

Step 5–> இவற்றில் டொமஸ்டிக் கர்னல் அனைத்து குடியிருப்புகள் உள்ளவர்களும் EB எண்ணுடன் ஆதார் எண்ணை link செய்து கொள்ளலாம்.

also Read–> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி? 

Step 6–> Please Click here to view the formats என்ற லிங்கை கிளிக் செய்யுங்கள். அதில் உங்களுடைய சர்வீஸ் கனெக்சன் நம்பரை உள்ளிட வேண்டும். சர்வீஸ் கனெக்சன் நம்பர் என்றால் வேறொன்றுமில்லை உங்கள் EB நம்பர் ஆகும்.

EB நம்பர்
EB நம்பர்

Step 7–> பின்பு என்டர் button என்பதை கிளிக் செய்யுங்கள். அதன்பின் EB பில் உங்கள் எந்த மொபைலில் நம்பரில் ரெஜிஸ்டர் ஆகி இருக்கிறதோ அந்த நம்பருக்கு OTP அனுப்பப்படும். அந்த OTP எண்ணை என்டர் செய்து என்டர் பட்டனை அமுக்கவும்.

Step 8–> பின்பு, மற்றொரு பேஜ் ஓபன் செய்யப்படும். அதில் service connection number, name of the consumer, supply address, occupant details, name as per Aadhaar, upload Aadhaar ID போன்ற விபரங்கள் கேட்கப்படும்.

Also Read –>ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?| How to Download Birth and Death Certificate Online in Tamil Nadu?

Step 9–> occupant details: இணைக்கப் போகும் ஆதார் எண் உரிமையாளருடையதா அல்லது வாடகைதாரரின் (Tenet) ஆதார் எண்ணா என்று விவரமும் கேட்கப்பட்டிருக்கும்.

Step 10–> இதில் கேட்கப்பட்டிருக்கும் தகவலை அளித்த பின்னர், ஆதார் எண்ணை இடைவெளி இல்லாமல் பதிவு செய்து, ஆதார் எண்ணில் இருக்கும் பெயரை அப்படியே பதிவிட வேண்டும்.

Step 11–> பின்பு ஏற்கனவே பயனாளிகள் தயாராக வைத்திருக்கும் 500 KB அளவுள்ள ஆதார் அட்டையின் புகைப்படத்தை பதிவேற்றம் (upload) செய்ய வேண்டும்.

Service Details
Service Details

Step 12–> பின், கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் உண்மையானவை என சான்றளித்து (டிக் செய்து) SUBMIT பொத்தானை கொடுக்க வேண்டும்.

Step 13–> அவ்வளவு தான் மக்களே, இதை தொடர்ந்து ஆதார் எண் சமர்ப்பிக்கப்பட்டதற்கும் எண்ணிற்கு விரைவில் இணைப்பு உறுதி செய்யப்படுவதற்குமான பதில் வரும். இதோடு ஆதாரை மின் இணைப்புடன் இணைக்கும் ஸ்டெப்ஸ் நிறைவடையும்

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

FAQs Link an Aadhar Number With EB Number in Tamil

ஒருவர் வாடகைக்கு இருக்கும் நபரின் ஆதார் எண்ணை இணைத்தால், மின் இணைப்பு அவரது பெயருக்கு மாறிவிடுமா?

இல்லவே இல்லை. ஆதார் இணைப்பு என்பது ஒரு விவரம் மட்டுமே. வீட்டின் உரிமையாளர் மட்டுமே மின் இணைப்பின் பெயரில் மாற்றம் செய்ய முடியும். வீட்டில் குடியிருப்போர் தனது ஆதார் எண்ணை இணைத்தால் வீட்டின் உரிமையாளருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.

TANGEDCO TNEB ஆதார் இணைப்பு 2022 இன் கடைசி தேதி என்ன?

நவம்பர் 2022 வரை ஆதார் அட்டையுடன் EB எண்ணை இணைக்கலாம்.

ஆதார் அட்டை 2022 உடன் TNEB எண்ணை இணைப்பது எப்படி?

nsc.tnebltd.gov.in இல் உங்கள் ஆதார் எண்ணுடன் TANGEDCO ஐ நேரடியாக இணைக்கலாம்.

நான் வாடகை வீட்டில் இருக்கிறேன். என் ஆதாரை நான் குடியிருக்கும் வீட்டின் மின் இணைப்போடு கட்டாயமாக இணைக்க வேண்டுமா?

குடியிருக்கும் வீட்டின் உரிமையர் அனுமதி தந்தால் வாடகைக்கு இருப்பவர் தன் ஆதார் எண்ணை EB எண்ணோடு இணைக்கமுடியும்.

வீட்டில் வாடகைக்கு இருப்போர் மாறும் பட்சத்தில் என்ன செய்ய வேண்டும்?

வீட்டில் வாடகைக்கு இருப்போர் மாறும் பட்சத்தில், புதிதாக குடியிருக்க வருவோரின் ஆதார் எண்ணை இணைக்கலாம்.

ஒருவர் 5 வீடுகளை வாடகைக்கு விட்டு இருந்தால், ஒவ்வொரு வீட்டுக்கும் தனித் தனி மீட்டர்கள் உள்ளன என்றால், எப்படி ஆதாரை இணைப்பது?

ஒருவரது ஆதார் எண்ணையே அனைத்து இணைப்புகளுக்கும் வழங்க முடியும். அதனால், எந்தப் பாதிப்பும் ஒருபோதும் இல்லை.

ஆதார் எண்ணை இணைத்தால் தான் நான் மின் கட்டணத்தை செலுத்த முடியுமா?

ஆதார் எண்ணை இணைக்காவிட்டாலும், மின் வாரிய அலுவலகங்களில் மின் கட்டணம் செலுத்தலாம். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே, ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments