Monday, September 25, 2023
Homeசெய்திகள்How to Change Photo in PAN Card Online in Tamil | ஆன்லைனில்...

How to Change Photo in PAN Card Online in Tamil | ஆன்லைனில் பான் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி?

PAN card என்றால் என்ன?

pan card number என்பது 10-இலக்க தனிபட்ட அடையாள எண் (combination of numbers & letters ). இது நம் இந்தியாவில் வரி செலுத்துவோர்களை அடையாளம் காணும் விதமாக அமைந்துள்ளது இந்த PAN card (Change Photo in PAN Card Online in Tamil).

 ஒவ்வொரு இந்திய வரி செலுத்தும் நிறுவனத்திற்கும் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்கப்படுது. ஒரு நபரின் அனைத்து வரி தொடர்பான தகவல்களையும் ஒற்றை PAN எண்ணில் பதிவு செய்யப் படுது. இந்த PAN card நமது தகவல்களை சேமிப்பதற்கான முதன்மை கருவியா செயல்படுது. இது நாடு முழுவதும் பகிரப்படுது, எனவே வரி செலுத்தும் நிறுவனத்தில் உள்ள இருவர் ஒரே பான் எண்ணைக் வைத்திருக்க முடியாது.

 ஒரு நிறுவனத்திற்கு PAN number ஒதுக்கப்படும் போது, pan கார்டு-ம் வருமான வரித்துறையால் வழங்கப்படுது. , PAN card ல் பெயர், பிறந்த தேதி (DoB), தந்தை அல்லது மனைவியின் பெயர் மற்றும் photo ஆகியவை இருக்கும். இந்த PAN cardன் copy யை அடையாளச் சான்றாகவோ அல்லது DoB ஆகவோ பயன்படுத்தலாம்.

Also Read–> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி? 

Changing your PAN Card Photo Online

PAN card விண்ணப்பிக்க என்னென்ன அடையாளச் சான்று தேவை?

பான் கார்டு புகைப்படம் மாற்ற தேவையான ஆவணங்கள் (Documents Needed for changing the photo in PAN Card)

Note:

 • வயது, அடையாளம் மற்றும் முகவரிக்கான சான்றாக கீழே குறிப்பிடப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலை நீங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
 • பெற்றோர் அல்லது மைனர் இருவரின் மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சிறார்களுக்காக (Minors) சமர்ப்பிக்கலாம்.

அடையாளச் சான்று (Id proof)

 1. வாக்காளர் அடையாள அட்டை
 2. ஆதார் அட்டை
 3. விண்ணப்பதாரரின் புகைப்படத்துடன் கூடிய ரேஷன் கார்டு
 4. கடவுச்சீட்டு
 5. ஓட்டுனர் உரிமம்
 6. மத்திய அரசு, மாநில அரசு அல்லது பிற பொதுத்துறை நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டை.
 7. மத்திய அரசின் சுகாதார திட்ட அட்டை
 8. வங்கி சான்றிதழில் விண்ணப்பதாரரின் சான்றளிக்கப்பட்ட புகைப்படம் மற்றும் வங்கி கணக்கு எண் உள்ளது.
 9. விண்ணப்பதாரரின் புகைப்படம் கொண்ட ஓய்வூதிய அட்டை
 10. பாராளுமன்ற உறுப்பினர் அல்லது சட்டமன்ற உறுப்பினர் அல்லது முனிசிபல் கவுன்சிலரால் கையொப்பமிடப்பட்ட அசல் அடையாளச் சான்றிதழ்.

Also Read –> ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி ? How to Apply Ration Card Online in Tamil Nadu

முகவரி ஆதாரம் (Address proof)

 1. வாக்காளர் அடையாள அட்டை
 2. ஆதார் அட்டை
 3. சமீபத்திய மின் கட்டணம்
 4. கடவுச்சீட்டு (Passport)
 5. ஓட்டுனர் உரிமம்
 6. சமீபத்திய லேண்ட்லைன் தொலைபேசி அல்லது பிராட்பேண்ட் இணைப்பு பில்
 7. விண்ணப்பதாரரின் முகவரியைக் கொண்ட தபால் அலுவலக பாஸ்புக்
 8. வங்கி கணக்கு அறிக்கை
 9. கடன் அட்டை அறிக்கை
 10. ஒதுக்கீடு கடிதம்
 11. சொத்து வரி மதிப்பீட்டிற்கான சமீபத்திய உத்தரவு

DOB ஆதாரம் (DOB Proof)

 1. பிறப்புச் சான்றிதழ் (நகராட்சி ஆணையம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பதிவாளரால் வழங்கப்பட்டது)
 2. ஓய்வூதியம் செலுத்துவதற்கான உத்தரவு
 3. திருமண சான்றிதழ்
 4. கடவுச்சீட்டு
 5. ஓட்டுனர் உரிமம்

ஆன்லைனில் பான் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்ற

Step 1: Protean eGov Technologies Limited அதிகாரப்பூர்வ தளத்தைப் visit செய்யவும் https://www.protean-tinpan.com/ (Change Photo in PAN Card Online in Tamil).

Step 2: மெனுவில்–> ‘Services’ என்பதைத் தேர்ந்தெடுத்து, PAN ஐக் கிளிக் செய்யவும்.

Step 3: பின்பு, PAN இன்டெக்ஸ் பக்கம் ஓபன் ஆகும். கீழே ஸ்க்ரோல் செய்து, Change/Correction பான் டேட்டா பிரிவில் இருப்பதைப் படிக்கவும்.

Step 4: செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை (Dos and Don’ts) என்ற இணைப்பிற்கு கீழே உள்ள ‘apply ’ லின்க் கிளிக் செய்யவும்.

PAN ஆன்லைன் படிவத்துடன் புதிதாக பக்கம் ஓபன் ஆகும். ‘Application Type’ என்பதைக் கிளிக் செய்து, ட்ராப்டௌனில் இருந்து PAN இல் மாற்றங்கள் அல்லது திருத்தம் என்பதைத் தேர்ந்தெடுக்கவும் (select Changes or Correction in the PAN ).

Step 5: செலக்ட் Category as ‘Individual’

Step 6: உங்களின் விவரங்கள் surname, mobile number, PAN number, email address and date of birthஐ போன்றவை enter செய்யவும் .

Step 7: கொடுக்கப்பட்டுள்ள captcha codeஐ Enter செய்து பின் ‘Submit’ கிளிக் செய்யவும் .

Step 8: ஒரு தர்காலிக token number உங்களுக்கு வழங்கப்படும் .பின் உங்களுக்கு documentஐ எப்படி submit செய்ய விரும்புகிறீர்கள் என்பதை select செய்யவும் .

Step 9: அடுத்தது , ‘Photo doesn’t match’ என்ற sectionக்கு கீழ் , select the checkbox in the left-hand columnல் இருக்கும் செக்பாக்ஸ்ஐ select செய்யவும் . இந்த checkbox ஐ கிளிக் செய்தால் மட்டுமே நம்மால் photos ஐ change / update செய்யமுடியும் .

Step 10: உங்களின் இப்போதைய pan card ன் விவரங்களையும், ஒதுக்கப்பட்ட pan அட்டையின் ஆதாரத்தையும் வழங்க மறக்காதீர்கள் (Change Photo in PAN Card Online in Tamil).

Step 11: பின் உங்கள் photoவை வழங்க வேண்டும். நீங்கள் விரும்பினால் இதை டிஜிட்டல் முறையில் செய்யலாம்.photo வை உங்களது computerல் இருந்து upload செய்யலாம் அல்லது DigiLockerல் இருந்தும் அவற்றைப் பெறலாம்.

உங்களிடம் அனைத்து documents ம் விவரங்களும் கிடைத்தவுடன், application form submit செய்யவும்.

Step 12: நீங்கள் ரூ.101 செலுத்த வேண்டும். இதை நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் செய்யலாம்.

நீங்கள் நெட் பேங்கிங்கைப் பயன்படுத்தினால், கட்டண நுழைவாயிலுக்கு ரூ.4+ சேவை வரி கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.

பேமெண்ட் முடிந்ததும், 15 இலக்க acknowledge number உங்களுக்கு அனுப்பிவைக்கப்படும், விண்ணப்பத்தை print out எடுத்து வருமான வரித் துறையின் பான் சேவை பிரிவுக்கு (PAN Service Unit) அனுப்பிவைக்க வேண்டும்.

இதன்பின் பான் கார்டில் உங்கள் போட்டோ மாற்றப்படும் (Change Photo in PAN Card Online in Tamil).

FAQ’s on Change Photo in PAN Card Online in Tamil

மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்கான பான் கார்டின் விண்ணப்பப் படிவத்தை நான் எப்போது அனுப்ப வேண்டும்?

உங்கள் தற்போதைய புகைப்படம் பழையது, பழமையானது, அடையாளம் காண முடியாதது PAN கார்டில் பிறந்த தேதி அல்லது தந்தையின் பெயர் அச்சிடப்பட்டதில் பிழை இருந்தால் கையொப்பம் பொருந்தவில்லை என்றால் மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்கான பான் கார்டின் விண்ணப்பப் படிவத்தை அனுப்பலாம்.

புதிய பான் கார்டு மற்றும்/ பான் கார்டில் மாற்றங்கள் அல்லது திருத்தங்களைக் கோரும்போது நான் ஏதேனும் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா?

ஆம், புதிய பான் கார்டைக் கோருவதற்கு அல்லது பான் கார்டில் மாற்றங்கள்/திருத்தங்கள் செய்ய நீங்கள் ₹96 செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ₹85 மற்றும் சேவை வரியாக மீதமுள்ள தொகை இதில் அடங்கும்.

எனது திருத்தப்பட்ட பான் கார்டைப் பெற எவ்வளவு நேரம் ஆகும்?

தேவையான மாற்றங்களைக் கோரிய பிறகு, 2-3 வாரங்களுக்குள் திருத்தப்பட்ட PAN கார்டைப் பெறுவீர்கள். உங்களின் ஒப்புகை எண்ணைப் பயன்படுத்தி புதுப்பிக்கப்பட்ட பான் கார்டின் நிலையைக் கண்காணிக்கலாம்.

மாற்றங்கள் அல்லது திருத்தங்களுக்குப் பிறகு எனது பான் கார்டு எண் மாறுமா?

இல்லை, உங்கள் பான் கார்டு எண் அப்படியே இருக்கும். பான் எண் மாறாமல் இருக்கும் நீங்கள் மாற்றக் கோரும் விவரங்கள் மட்டுமே மாற்றப்படும்.

மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments