Sunday, December 3, 2023
Homeபயனுள்ள தகவல்வாக்காளர் அடையாள அட்டையில் பெயரை மாற்றுவது எப்படி?| How to Change Name in Voter...

வாக்காளர் அடையாள அட்டையில் பெயரை மாற்றுவது எப்படி?| How to Change Name in Voter id Card Online in Tamil

Voter ID Card என்றால் என்ன?

இந்திய குடிமகன் வாக்களிக்க voter id card அவசியமான ஆவணமாகும். இது ஒரு வகையான அடையாளச் சான்றாகவும் செயல்படுகிறது. வாக்காளர்கள் வாக்களிக்கும்போது அடையாளம் காணும் சரிபார்ப்பாகவும் இது செயல்படுகிறது. election card, voter card, voter id card போன்றவை இந்த அட்டைக்கான பிற ஒத்த சொற்களாகும்.

How to Change Name in Voter id Card Online in Tamil

Voter ID cardல் உங்கள் பெயரை மாற்ற முடியுமா?

ஆம், ஒருவர் தனது Voter ID cardல் பெயரை மாற்றிக்கொள்ளலாம். Voter listல் எழுத்துப் பிழை அல்லது தவறாகப் பட்டியலிடப்பட்டுள்ள வாக்காளர்கள், எளிய நடைமுறையைப் பின்பற்றி அதைத் திருத்திக் கொள்ளலாம் (Voter ID Name change Online).

உண்மையில், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் application form மற்றும் செயல்முறைகள் இரண்டிற்கும் இடையூறு இல்லாத வழிமுறை உள்ளது. அதன் வழிமுறைகளை இப்போது நாம் பார்க்கலாம் .

Documents needed For Voter ID Name Correction

இவற்றுள் ஏதேனும் ஒன்று இருந்தால் போதுமானது :

  • ஆதார் கார்டு (Aadhaar Card)
  • ஓட்டுநர் உரிமம் (Driving License)
  • பான் அட்டை (Pan Card)
  • மதிப்பெண் சான்றிதழ் ( Marksheet)

How to Change Name in Voter ID Card Online

Step 1: nvsp.in என்ற website செல்ல வேண்டும்.
Step 2: அதில் Login/Register என்பதை கிளிக் செய்யவும்.
Step 3: உங்க User Name மற்றும் Password யை உள்ளிட்டு Login என்பதை அழுத்தவும்.

Voter Id Name Change: நீங்கள் இன்னும் கணக்கை Register செய்யவில்லை என்றால், Don’t have account, Register as a new user என்பதை கிளிக் செய்து கணக்கை உருவாக்கவும்.

Also read –> Link Mobile Number with Voter ID Online in Tamil | வாக்காளர் அட்டையுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி?

Step 4: Accountஐ Login செய்தவுடன் Correction in personal details என்பதை கிளிக் செய்க.
Step 5: ஏற்கனவே Self என்று தேர்வாகி இருக்கும். இப்போது Next என்பதை அழுத்தவும்.
Step 6: மொழியை தேர்வு செய்யும் இடத்தில் தமிழ் / Tamil என்பதை தேர்வு செய்க.
Step 7: இப்போது அனைத்தும் தமிழ் மொழியில் மாறியிருக்கும். உங்களின் மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி போன்றவற்றை சரியாக தேர்வு செய்யவும்.
Step 8: உங்களின் பெயர் ஏற்கனவே ஆங்கிலத்தில் இருக்கும். அதற்க்கு நேராக உள்ள இடத்தில் தமிழில் Type செய்யவும்.
Step 9: voter cardல் நீங்கள் எதை Correction செய்ய வேண்டுமோ அதை டிக் செய்யவும்.

How to Change Name in Voter id Card Online in Tamil

Tick Correction Option – Name Change Voter ID
தற்போது நாம் Voter ID Cardன் Name Change செய்வதால் பெயர் என்பதை மட்டும் டிக் செய்ய வேண்டும் . நீங்கள் இன்னும் வேறு ஏதேனும் மாற்ற விரும்பினால் அதையும் டிக் செய்யலாம்.

Step 10: இப்பொழுது நீங்க voter cardல் திருத்தப்பட வேண்டிய தகவல்களை உள்ளிடவும்.
Step 11: இதில் பெயர் மாற்றத்திற்கான formஐ upload செய்யவும்.
Step 12: கடைசியாக இடம், Captcha போன்றவற்றை Type செய்து Submit என்பதை அழுத்தவும்.
Step 13: பின் இறுதியாக ஒரு Reference Number வரும். அதை குறித்துக்கொள்ள வேண்டும்.

இந்த எண்ணை கொண்டு உங்களின் விண்ணப்பத்தின் நிலையை (Status) அறியலாம் (Name change in voter id).

Also read –> Link Mobile Number with Voter ID Online in Tamil | வாக்காளர் அட்டையுடன் மொபைல் நம்பரை இணைப்பது எப்படி?

நீங்கள் voter cardல் எதை மாற்ற வேண்டும் என்றாலும் இந்த வழிமுறையை பயன்படுத்தலாம். இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று நம்புகிறேன்.

Frequently Asked Questions (FAQ):

Voter cardல் இருக்கும் பெயர் மாற்றத்தை எந்த படிவத்தின்  மூலம் செய்ய முடியும்  ?

இதற்கு Form 8 ஐ  பதிவிறக்கம் செய்து செய்ய வேண்டும்.

ஒரே படிவத்தில் எத்தனை தகவல்களை  திருத்தலாம்?

ஒரு நேரத்தில் அதிகபட்சம் மூன்று தகவல்களை  திருத்த  முடியும் .

எனது voter id cardன் விவரங்களை மாற்ற விண்ணப்பிக்கும் போது கட்டணம் செலுத்த வேண்டுமா?

 ஆம் , இது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் போது செலுத்த வேண்டும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments