PAN card பெயர் ஆதார்கார்டுடன் match ஆகவில்லை என்றால்:

உங்க ஆதார் கார்ட் ஐ பான் கார்டுடன் லிங்க் பண்ணும்போது அது நடக்கவில்லை என்றால், PAN மற்றும் ஆதார் கார்டுகளில் பதிவு செய்த நம்முடைய விவரங்களைச் சரிபார்க்கனும். நீங்க PAN number டன் ஆதார் அட்டையை லிங்க் செய்ய விரும்பினா, இரண்டு ஆவணங்களிலும் உங்களுடைய பிறந்த தேதி, பெயர் மற்றும் gender போன்ற மக்கள்தொகை விவரங்கள் பொருந்துதா என்கிறத உறுதி செஞ்சிக்கனும் . Unique Identification Authority of India (UIDAI) ஆதார் அட்டை, சரிபார்க்கக்கூடிய 12 digit அடையாள எண்ணை வழங்குகிறது. இது இலவசமாக வழங்கப்படுகிறது. permanent account number (PAN) எனப்படும் 10 digit alphanumeric identifierஐ வருமான வரித்துறை வெளியிடுகிறது (Change Name in PAN Card as per Aadhaar Online).
PAN பெயரையும் ஆதார் அட்டை பெயரையும் எவ்வாறு பொருத்துவது?
PAN மற்றும் ஆதார் அட்டையில் உள்ள பெயர் பொருந்தல அப்படினா எப்படி change பண்றது, என்பதை பலபேர் கூகுளில் அடிக்கடி தேடுறாங்க. PAN மற்றும் ஆதார் அட்டையில் உங்கள் பெயர் வித்தியாசமாக இருந்தால், உங்கள் PAN மற்றும் ஆதார் அட்டையை லிங்க் பண்றதுல ரிஸ்க் ஆயிடும். பான் நம்பர் ஆதார் அட்டையுடன் பதிவுசெய்யப்பட்ட பெயரில் கொஞ்சம் மாற்றம் இருந்தால், ஆதார் அட்டையுடன் பதிவுசெய்யப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் ஆதார் one time password (OTP) கிடைக்கும். இருந்தாலும், அந்த OTP ஐப் பெற, ஆதார் மற்றும் PAN எண்ணில் உள்ள gender மற்றும் பிறந்த தேதி விவரங்கள் அப்படியே இருப்பதை pan card தாரர்கள் உறுதி செஞ்சிக்கணும். ஆதார் மற்றும் PAN number ல் உள்ள பெயர்கள் முழுசா மேட்ச் ஆகலனா, connection தோல்வியடையும். அந்த சூழ்நிலையில, சம்பந்தப்பட்ட நபர் PAN database அல்லது ஆதாரிலோ தேவையான மாற்றங்களைச் செய்யணும் (Change Name in PAN Card in Tamil).
Also Read–> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி?
PAN card-ல் எனது பெயரை எப்படி மாற்றுவது?
Change Name in PAN Card 1: PAN இல் உங்கள் பெயரைப் update செய்ய விரும்பினால், நீங்கள் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html ஐப் visit செய்யணும் .
Change Name in PAN Card 2: நீங்க type of application செலக்ட் செய்யனும் – ஏற்கனவே உள்ள PAN டேட்டாவில் மாற்றங்கள் அல்லது திருத்தம்/pan card reprint (தற்போதுள்ள PAN டேட்டாவில் எந்த மாற்றமும் இல்லை).
Change Name in PAN Card 3: தலைப்பு, கடைசி பெயர், முதல் பெயர், பிறந்த தேதி, e-mail id, PAN number போன்ற பிற application details நீங்கள் நிரப்ப வேண்டும்.
Change Name in PAN Card 4: அதன் பிறகு நீங்கள் இந்திய குடிமகனா இல்லையா என்பதை உறுதிசெய்து captcha code ஐ சமர்ப்பிக்கவும்.
Change Name in PAN Card 5: அதன் பிறகு, ஒரு டோக்கன் எண் உருவாக்கப்படும், மேலும் நீங்கள் PAN விண்ணப்பப் படிவத்தைத் தொடர வேண்டும்.
நீங்கள் PAN correction form ஆன்லைனில் பெறலாம் https://tin.tin.nsdl.com/pan/correctiondsc.html.

Change Name in PAN Card 6: இப்பொழுது நீங்கள் எந்த வழியாக ஆவணங்களை (Documents) சப்மிட் செய்ய விரும்புகிறீர்களோ அந்த Option யை தேர்வு செய்யவும்.
இங்கு நான் இரண்டாவதாக உள்ள Submit scanned images through e-Sign என்பதை செலக்ட் பண்ணியுள்ளேன்.
Change Name in PAN Card 7: உங்களின் ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்க நம்பர் (4 digit) மற்றும் ஆதார் கார்டில் உள்ளபடி பெயர் போன்றவற்றை Type செய்யவும் (Name as per AADHAAR).
Change Name in PAN Card 8: Full Name of Applicant என்பதை tick செய்யவும். பிறகு Name that you would like printed on PAN card என்ற இடத்தில் உங்களின் AADHAAR கார்டில் இருக்கும் பெயரை Enter செய்யவும். பின்பு Gender என்னும் இடத்தில் உங்களின் Gender யை தேர்வு செய்க.
Change Name in PAN Card 9: Father Name யை Enter செய்து Next என்பதை அழுத்துக.
Change Name in PAN Card 10: Personal Details –>Residence என்பதை செலக்ட் செய்து உங்களின் முழு அட்ரசை Enter செய்க.
Change Name in PAN Card 11: Country Code யை Select செய்து Next என்பதை click செய்யவும்.
Change Name in PAN Card 12: பின்பு Proof of identity, address, date of birth என்ற இடத்தில் ஆதார் என்பதை செலக்ட் செய்க. Proof of PAN என்பதில் Copy of PAN Card என்பதை செலக்ட் செய்யவும்.
Declaration இல் உங்களின் பெயர், இணைக்கப்பட்ட டாக்குமெண்ட்ஸ் எண்ணிக்கை மற்றும் Place போன்றவற்றை நிரப்பவும்.
Change Name in PAN Card 13: உங்களின் Photo, Signature மற்றும் ஆவணங்கள் போன்றவற்றை Upload செய்து Submit செய்யவும்.
Change Name in PAN Card 14: Documents Details–>Next என்பதை கிளிக் செய்யவும்.
Change Name in PAN Card 15: உங்களின் முதல் 8 டிஜிட் ஆதார் எண்ணை Enter செய்யவும்.
Change Name in PAN Card 16: நீங்கள் Type செய்த அனைத்து தகவல்களையும் ஒருமுறை சரிபார்த்த பின்பு Proceed என்பதை கிளிக் செய்யவும்.
Change Name in PAN Card 17: இந்த பக்கத்தில் நீங்கள் பேமன்ட் செலுத்துவதற்கான Option வரும். இதில் நீங்கள் எதன் மூலம் பேமன்ட் செலுத்த விரும்புகிறீர்களோ அந்த Option யை செலக்ட் செய்யவும்.
Change Name in PAN Card 18: PAN Correction செய்வதற்கு Rs.107 ரூபாயை செலுத்த வேண்டும். I Agree என்பதை டிக் செய்து சப்மிட் செய்யவும்.
Change Name in PAN Card 19: பின் Pay Confirm என்ற button கிளிக் செய்யவும்.
Change Name in PAN Card 20: இப்பொழுது பணத்தை செலுத்துவதற்கான பேஜ் திறக்கும். அதில் கொடுக்கப்பட்டுள்ள Option களில் ஏதாவது ஒன்றை செலக்ட் செய்து பணத்தை செலுத்தலாம்.
Also Read –> ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி ? How to Apply Ration Card Online in Tamil Nadu
Payment செலுத்திய பின்பு உங்களின் PAN Correction/ Update Form வெற்றிகரமாக Submit செய்யப்பட்டுவிடும்.
Token எண்ணை கொண்டு உங்களின் விண்ணப்பத்தின் Status-ஐ எளிதில் அறியலாம்.
மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.
FAQ’s on How to Change Name in PAN Card as per Aadhaar Online in Tamil
ஆம் ,வருமான வரி செலுத்துவதற்கு pan card மிகவும் தேவையானது .
ஒன்றுக்கு மேற்பட்ட pan cards ஐ பெறுவது/ வைத்திருப்பது சட்டத்திற்கு எதிரானது மற்றும் ருபாய் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். எனவே, ஒன்றுக்கு மேற்பட்ட pan number ஐ பெறாமல் இருப்பது நல்லது.
தற்போதுள்ள அனைத்து மதிப்பீட்டாளர்கள் அல்லது வரி செலுத்துவோர் அல்லது மற்றவர்கள் சார்பாக வருமான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டிய நபர்கள் pan வைத்திருக்க வேண்டும். pan எண்ணை மேற்கோள் காட்டுவது கட்டாயமான பொருளாதார அல்லது நிதி பரிவர்த்தனைகளில் ஈடுபட விரும்பும் எந்தவொரு நபரும், pan நம்பர்ஐ கொண்டிருக்க வேண்டும்.