இந்திய நாட்டில், ரேஷன் கார்டு என்பது ஒவொரு குடிமனுக்கும் தேவையான ஒன்றாகும், தற்போது ரேஷன் கார்டு (Smart Card) என்பது ஸ்மார்ட் கார்டு என அழைக்கப்படுகிறது. ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பதன் மூலம் அரசு வழங்கு மாத வணிக பொருட்கள் எக்லியா விலையில் வாங்கலாம். ரேஷன் கார்டு என்பது ஒவொரு குடும்பத்திற்கும் மிக அவசியமாக அமைகிறது (How to Apply Smart Card Online).

இக்குடும்ப அட்டையை (Smart Card) முன்பெல்லாம் புதிதாக வாங்க வேண்டுமென்றால், எங்கேய சென்று பதிய வேண்டும், எவ்வாறு பதிய வேண்டும், யாரை சென்று பார்க்க வேண்டும் போன்ற பல குழப்பங்கள் இருக்கும். ஆனால் இனி அந்த கவலை இனி வேண்டாம், ஏனெனில் இனி எளிதாக ஆன்லைன் மூலமாகவே குடும்ப அட்டையை எளிதில் பதிவு செய்து பெறமுடியும்.
இந்த பதிவில் ரேஷன் கார்டை எவ்வாறு ஆன்லைனில் பதிவு செய்து, என்னென்ன ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் விரிவாக தெரிந்து கொள்ளுவோம். எளிமையான முறையில் பதிவு செய்து எவ்வாறு ஸ்மார்ட் கார்டை பெறமுடியும் என்பதை காணலாம் (Apply Smart Card Online).
ஸ்மார்ட் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்
ID proof to apply smart card
குடும்ப அட்டை விண்ணப்பிக்க, கீழ்காணும் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்
- வருமான சான்றிதழ்
- பான் கார்டு
- ஆதார் அட்டை
- மின் ரசீது
- பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
- சாதி சான்றிதழ்
- வங்கி பாஸ்புக்
ஆன்லைன் விண்ணப்பத்தில் நிரப்பக்கூடியவை
ஆன்லைன் விண்ணப்பத்தில் சில விவரங்கள் கோரப்பட்டிருக்கும். அவற்றைத் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ளீடு செய்ய வேண்டும்.
- குடும்பத் தலைவர் பெயர்
- தந்தை அல்லது கணவர் பெயர்
- முகவரி
- எந்த மாவட்டம்
- எந்த மண்டலம் அல்லது வட்டம்
- எந்தக் கிராமம்
- அஞ்சல் குறியீடு
- தொலைபேசி எண்
- கிராமம்
- கைப்பேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
ஆன்லைனில் ரேஷன் கார்டுக்கு அப்ளை செய்வது எப்படி?
- புதிதாக குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்க, முதலில் https://www.tnpds.gov.in என்ற வெப் சைட்டிற்கு செல்லவும்.
- முகப்புப் (home page) பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு ஆப்ஷனைக் கிளிக் செய்யவும்.
- பின்பு, ஒரு படிவம் திரையில் தோன்றுவதைக் காணலாம். அந்த படிவத்தை நிரப்ப வேண்டும்.
- அனைத்து விவரங்களையும் நிரப்பிய பின்னர், அதனுடன் சேர்த்து அனைத்து ஆவணங்களையும் (ID Proof) இணைக்க வேண்டும்.
- நீங்கள் இணைக்கும் ID Proof-ன் அளவு 1.0 MB அளவில் இறுக்கவேண்டும்
- இணைக்கும் ID Proof-ஆனது png, gif, jpeg, pdf ஆகியவற்றில் ஏதாவது ஒரு format-இல் இருத்தல் வேண்டும்
- பின் உங்கள் (Family Details) குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், எரிவாயு இணைப்புகள் (Gas Cylinder Details) எத்தனை உள்ளது போன்ற தகவல்களை பதிவு செய்யவேண்டும்
- பின் நீங்கள் “confirm” ‘உறுதிபடுத்து’ எனும் பட்டனை கிளிக் செய்ய வேண்டும்.
- பிறகு உங்களுக்கு ஒரு reference எண் காட்டப்படும், அதை பத்திரமாகக் குறித்து அல்லது பதிவு செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
Also Read –> ஆன்லைனில் உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி?
அப்ளை செய்த பின்னர், நீங்கள் விண்ணப்பித்த படிவத்தில் இருக்கும் விவரங்கள் மற்றும் ஆவணங்களை துறை சார்ந்த அலுவலர்களால் சரிபார்க்கப்பட்டு, உங்களுக்கான ரேஷன் கார்டு வீட்டிற்கே தபால்மூலம் அனுப்பிவைக்கப்படும். ரேஷன் கார்டு படிவம் சரிபார்ப்பு பூர்த்தியடைய வில்லை என்றால், அதற்கு தேவையான ஆவணங்கள் மற்றும் விவரத்தை சரியாக கேட்டறிந்து சமர்பிக்க வேண்டும்.
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.