மொபைல் மூலம் தங்கள் குழந்தைகளை நோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள்..!
- உங்கள் குழந்தையின் ஆரோக்கியமான வாழ்க்கையில் அனைத்து விதமான தீமைகளையும் ஏற்படுத்தக்கூடிய திறன் கொண்ட பொருளாக ஸ்மார்ட்ஃபோன் உள்ளது.தொலைபேசிகளில் அதிக நேரம் செலவழிக்கும் குழந்தைகள், தங்கள் நினைவாற்றல் மற்றும் பிற திறன்களில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் (Effects of Mobile phone on child).
- 15 முதல் 17 வயதுடைய 90 சதவிகிதத்திற்கும் அதிகமான குழந்தைகளிடம் ஸ்மார்ட்ஃபோன்கள் இருப்பதாக கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் உளவியல் அறிவியல் பேராசிரியர் கேண்டிஸ் ஓட்ஜெர்ஸ் கூறுகிறார்

ஸ்மார்ட்ஃபோன்களால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்:
புற்றுநோய்:
- செல்போன் கதிர்வீச்சுகள் மனிதர்களுக்கு புற்றுநோயை ஏற்படுத்துவதாக WHO கூறுகிறது. இதில் குழந்தைகள் பெரியவர்களை விட 60% அதிகளவு கதிர்வீச்சை உள்வாங்குகின்றனர் என்றும் அவர்களின் மூளையில் உள்ள மெல்லிய தோல், திசுக்கள் மற்றும் எலும்புகள் பெரியவர்களை விட 2 மடங்கு அதிக கதிர்வீச்சை உள்வாங்க தூண்டுவதாகவும் கூறப்படுகிறது (Mobile phone Effects on children).
- இதன் காரணமாக அவர்களின் வளரும் நரம்பு மண்டலம் எளிதில் புற்றுநோயால் பாதிப்படைகிறது.மொபைல் போன்களைப் பயன்படுத்தும் குழந்தைகளளின் மூளை மற்றும் காதுகளில் புற்றுநோய் கட்டிகள் உருவாவதற்கான சாத்தியக்கூறு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
கல்வி பாதிப்பு:
- இளம் வயதினரைப் போலவே குழந்தைகளும் மொபைல் போன்களுக்கு அடிமையாகி வருகின்றனர். அவர்கள் விளையாடும் மற்றும் உணவு உண்ணும் வேளையில் கூட செல்போனை உபயோகிப்பதால் அவர்களுக்கு படிப்பின் மீது உள்ள ஆர்வம் குறைந்துவிடுவதாக ஆய்வுகள் தெரிவிகின்றனர் (Effect of mobile phones).
பிற பிரச்சனைகள்:
- ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் மற்றவர்களுடன் பழகுவது குறைவதாகவும், தனிமை விரும்பியாக மாறுவதாகவும் பல ஆய்வுகள் கூறுகிறது.
- ஸ்மார்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுகள் கண்களுக்கு மட்டுமல்லாமல், மூளை செல்களுக்கும் தீங்கு விளைவிக்கும். நீல ஒளி மூளையின் நினைவு திறனை பாதிக்கிறது. இதனால் குழந்தைகள் ஏதேனும் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது கடினமாகும்.
Must Read –> மழை புயல் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?
பெற்றோர்கள் செய்யவேண்டியவை:
- உங்கள் குழந்தைகள் தொலைபேசியை எவ்வளவு நேரம் உபயோகிக்கிறார்கள் என்பதை ஆராய வேண்டும். அவர்கள் போனில் எவ்வளவு நேரம் சாட் செய்கிறார்கள் உள்ளிட்ட விஷயங்களை அவசியம் ஆராய வேண்டும்.

- தொலைபேசிகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து உங்கள் குழந்தைகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.
- ஆன்லைன் வகுப்புகள் தவிர மற்ற நேரங்களில் விளையாட்டுக்கள் அல்லது வீட்டு வேலைகளில் தங்களை ஈடுபடுத்துகிறார்கள் என்பதை ஆராய வேண்டும்.
- செல்போனை ஸ்பீக்கரில் போட்டு பேசும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். காதுகளுக்கு அருகில் தொலைபேசியை வைத்து பேசுவதை தவிர்ப்பது அல்லது இயர்போன் பயன்பாட்டைத் தவிர்ப்பது உங்கள் குழந்தைகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனால் கதிர்வீச்சுகளில் இருந்து அவர்கள் பாதுகாக்கப்படுவார்கள்.
- தூங்கும் நேரத்தில் செல்போன் மற்றும் மடிக்கணினிகளை பயன்படுத்த கட்டாயம் அனுமதிக்கக்கூடாது.
Also Read –> ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.