ஆதார் அட்டை என்பது அனைத்து பயன்பாடுகளுக்கும் இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. முக்கியமாக அரசின் பல்வேறு திட்டங்கள், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும், வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கும், வருமான வரி தாக்கல் செய்வது போன்ற பலவற்றிற்கு ஆதார் அட்டை அவசியமாக உள்ளது.

உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதனை மீண்டும் விண்ணப்பிக்க எளிமையான வழிகள் பல உள்ளன. இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.
அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் அல்லது விண்ணப்பிக்கும்போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை மீண்டும் எடுத்துக் கொள்ளலாம்.
தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது எப்படி?
- E-ஆதார் (uidai.gov.in) ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும்.
- உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால் “I have” தேர்வில் உள்ள “Aadhaar” என்ற ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும்.
- ஆதார் ஒப்புகை சீட்டு இருந்தால் “I have” தேர்வில் உள்ள “Enrolment Id” என்ற ரேடியோ பட்டனை கிளிக் செய்யவும்.
- ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை அதாவது பதிவு எண் மற்றும் தேதி நேரம், குடியிருப்பவரின் பெயர், மற்றும் பின்கோட் ஆகியவற்றை நிரப்ப வேண்டும்.

- பின்பு நீங்கள் பதிந்துள்ள தொலைபேசி எண்ணில் ஓ.டி.பி. (OTP – One Time Password) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள்.
- கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் பெறலாம். அதனை நீங்கள் பிரிண்ட் செய்யும் ஆப்ஷன் “Download Aadhaar” மூலம் அச்சிட்டு கொள்ளலாம்.
- அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.
Apply Now–> ஆன்லைனில் பான் கார்டு அப்ளை செய்வது எப்படி?
“Download Aadhaar”- எப்படி செய்வது?
- Download Aadhaar லிங்க்கை கிளிக் செய்யவேண்டும். அதில் ஆதார் எண் (Aadhar No), பதிவு எண் (Enrollment number), முழுப் பெயர் (Full name), பின் கோடு (PIN code), மொபைல் எண் (Mobile Number) போன்றவற்றை உள்ளிடவும்.

- பின்பு, மீண்டும் ஒரு OTP எண்ணை மொபைல் நம்பருக்கு அனுப்பப்படும். அதையும் உள்ளிட்டால், டவுன்லோடு லிங்க் கிடைக்கும்.
- டவுன்லோடு ஆதார் கார்டு, password-ஆள் பாதுகாக்கப்பட்ட PDF வடிவில் இருக்கும். உங்களின் பின்கோடுதான் அதன் password-ஆக செட் செய்திருப்பார்கள்.
- மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவை சிலருக்குத் தவறு என மெஸெஜ் மூலம் தெரிவிக்கலாம். அப்பொழுது அவர்கள் ”Verify Email/ Mobile Number” என்ற லிங்கிற்கு சென்று அதனை சரிசெய்து க் கொள்ளலாம்.
- இப்பொழுது டவுன்லோட் செய்த ஆதார் கார்டை டூப்ளிகேட் என்ன சொன்னாலும், அது டூப்ளிகேட் ஆகாது. இங்கே ஆதார் எண் தான் முக்கிய பங்கு வகுக்கிறது. எனவே எத்தனைமுறை அச்சிட்டாலும் அது ஒரிஜினல் ஆதார் கார்டாகவே கருத்தில் கொள்ளப்படும்.
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.