Friday, June 9, 2023
Homeசெய்திகள்குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் | Child Marriage Act in India - Tamil

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் | Child Marriage Act in India – Tamil

இளம் வயது திருமணங்களின் காரணங்கள் மற்றும் விளைவுகள் 

இந்தியாவில் ஆரம்ப காலங்களில் இருந்தே சில மூடநம்பிக்கைகள் காணப்பட்டன. அதில் ஒன்றுதான் இந்த “இளம் வயது திருமணங்களாகும்”.

இளம் வயதில்லையே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து, அவர்களை பல்வேறு கொடுமைகளுக்கும் ஆளாக்கி இருந்தார்கள். இதனை பலர் எதிர்த்தாலும், சில அறிவற்ற பொருளாதாரம் உயராத, வெளியுலகம் தெரியாத சில சமூகங்களில் இத்திருமணங்கள் இன்றைக்கும் காணப்பட்டுதான் வருகின்றன (Child marriage act).

Child Marriage Act in India - Tamil
Child Marriage Act in India – Tamil

இத்திருமணங்களுக்கு காரணமாக கூறப்படுவது

1. தங்களது குடும்ப வறுமை போன்றவற்றை காரணம் காட்டி குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கண்டுகொள்ளாத பெற்றோர்கள்.

2. சிலர் சம்பிரதாயமாகவும் இதை காண்கிறார்கள்.

இதன் விளைவாக வன்கொடுமைகள், குடும்ப பிரச்சனைகள், வன்முறை கலாச்சாரம் போன்ற நிகழ்வுகளும் அதிகளவில் காணப்பட்டது, மேலும் பல தற்கொலைகளும் பெரியளவில் காணப்பட்டது.

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம்

குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் இந்தியாவில் குழந்தைத் திருமணத்தைத் தடுக்கும் சட்டமாகும். இது ஜனவரி 1891 இல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஒரு வரைவுச் சட்டமாக முன்மொழியப்பட்டது மற்றும் 28 செப்டம்பர் 1929 இல் சட்டமாக ஆக்கப்பட்டது. இது சர்தா சட்டம் என்று அறியப்பட்டது.

Child Marriage Act in India - Tamil
Child Marriage Act in India – Tamil

இதன்படி, திருமணத்திற்கு முன் பெண்ணுக்கு 14 வயதும், ஆணுக்கு 18 வயதும் இருக்க வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில், பிரிட்டிஷ் அரசாங்கம் அத்தகைய சட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சித்தது.

1880 PM குஜராத்தில் இருந்து மலபாரி பிரிட்டிஷ் அரசுக்கு ஒரு கடிதம் எழுதினார். ஐந்து வயது சிறுமிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை அரசு தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்று மலபாரி கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். இது லண்டன் வரை சென்றது, பல விவாதங்களுக்கு உட்பட்டது.

இதன்விளைவாக ஜனவரி 1891 ஆண்டில் ஒரு வரைவு சட்டமாக அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது. சட்டம் 1 ஏப்ரல் 1930 இல் நடைமுறைக்கு வந்தது.

இனி ​​பெண்களுக்கான திருமண வயது 18 மற்றும் ஆண்களுக்கு திருமண வயது 21 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. இயற்றப்பட்ட இச்சட்டத்தின் மூலம் குழந்தைத் திருமணங்களை அளவு தடுக்க முடியும் என்று நம்பப்படுகிறது.

–> மொபைல் மூலம் தங்கள் குழந்தைகளை நோயாளிகளாக மாற்றும் பெற்றோர்கள்..!

திருமணத்தடுப்பு சட்டம்

இத்திருமணத்தை எதிர்த்து பலரும் அதிகளவில் போராடி, இறுதியில் 2006 ம் ஆண்டு “திருமணத்தடுப்பு சட்டம்” நிறுவி, இத்தகைய குற்றத்துக்கு காரணமாக இருப்பவர்களுக்கு இரண்டு ஆண்டு கால சிறைத்தண்டனையும் கொடுக்கப்பட வேண்டுமென சட்டமும் நிறுவினார்கள்.

அதன்பிறகு, இவ்வகையான திருமணங்களும் குறைய ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் இன்னும் சில சமூகங்கள் இன்றைக்கும் இதை பொருட்படுத்தாமல் இத்தவறை செய்து கொண்டுதான் இருக்கின்றனர்.

ஆகவே, பெற்றோர்கள் தங்களது குழந்தைகளது அடிப்படை உரிமைகள் மற்றும் கனவுகள் தொடர்பாக மிகவும் விழிப்பாக இருப்பது இவ்வகையான பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

Must Read–> தெரிந்து கொள்ள வேண்டிய போக்குவரத்து விதிகள்

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments