WhatsApp, யூஸ் பண்ணாதவங்களே இருக்கமுடியாதுனு கூட சொல்லலாம். WhatsApp யூஸ் பண்ணுகிற அனைவருக்கும் இந்த பதிவில் சூப்பரான டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ், ஒரு சில புது அம்சங்கள், என்னென்ன இருக்கிறது, அதுமட்டும் இல்லாமல் வரக்கூடிய updates-களில் என்ன என்ன அம்சங்கள் இருக்கப்போகிறது என்று விரிவாக காணலாம். ஆற்றல் நிரம்பிய WhatsApp யூசர்க்கு இது ஒரு அருமையா பதிவாக இருக்கும்.

WhatsApp டிப்ஸ் மற்றும் ட்ரிக்ஸ் (WhatsApp new Updates in Tamil)
ஆண்ட்ராய்திலிருந்து iOSக்கு டேட்டா பரிமாற்றம் (Android to iOS WhatsApp data Transfer in Tamil):

- முன்பெல்லாம் ஆண்ட்ராய்டு மொபைலில் வாட்சப்பை யூஸ் செய்துவிட்டு iOS மொபைல் வாங்கியபின், ஆண்ட்ராய்டு மொபைலில் இருக்கும் ச்சாட் (Chat) மற்றும் அணைத்து டேட்டாக்களையும் iOS மொபைலுக்கு,மாற்றும் வசதி இல்லை. இதனால் பல டேட்டா இழப்புகள் யூசேர்களுக்கு ஏற்படும் .
- ஆனால் இனி அந்த கவலை இல்லை, புது அப்டேடில் அதற்கான தீர்வை வாட்ஸாப்ப் கொண்டுவந்துருக்காங்க. அதாவது என்னவென்றால் நீங்க android-இல் இருந்து iOS மாறவேண்டும் என்று பிளான் செய்து கொண்திருந்தால், உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் இருந்து “Move to iOS” என்ற ஆப் மூலம் உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள WhatsApp-இல் இருக்கும் அணைத்து டேட்டாக்களையும் iOS மொபைலுக்கு எளிதாக மாற்றிக்கொள்ளலாம்.
வீடியோ அழைப்பில் மேலும் பலரைச் சேர்க்கலாம் (Add more people to a video call in WhatsApp):

- WhatsApp-இல் வீடியோ கால் செய்பவரா நீங்கள், அப்போ உங்களுக்கான சூப்பரான அப்டேட் தாங்க இது. அதாவது WhatsApp-இல் இருக்கும் வீடியோ காலில் இனிமே 32-யூசர்ஸ் (32 users) வரைக்கும் ஆட் செய்து கொள்ளலாம். அதாவது இனிமேல் Google Meet, Zoom போன்ற ஆப்கலை யூஸ் செய்வதற்கு பதிலாக WhatsApp வீடியோ கால் (WhatsApp Video Call) வசதியையே யூஸ் செய்துக்கொள்ளலாம் போலவே..
WhatsApp குரூப்களுக்கான அப்டேட்ஸ் (Updates for WhatsApp Groups in Tamil):
- அடுத்ததா நீங்க குரூப்ஸ் வைத்துயிருக்கிங்க என்றால், உங்களுக்கான ஏகப்பட்ட அப்டேட்ஸ்களை கொண்டு வந்துள்ளனர். அதாவது என்னனு பார்த்தால் இதுவரை கிரூப்களில் மிகவும் குறைந்த ஆட்களை மட்டும் Add செய்யும் வசதிதான் இருந்தது. ஆனால் இனி 512-பேர் (512 peoples) வரைக்கும் உங்களால் சேர்க்க முடியும். அடேடே சூப்பரான விஷயமா இருக்கேபா!..
- அதுமட்டும் இல்லாமல் உங்களுக்கான இன்னொரு அப்டேடும் இருக்குங்க. நீங்க ஒருவேளை அட்மினாக இருந்தால், உங்கள் குரூப்பில் மற்றவர்கள் அனுப்பும் மெசேஜ்கலை டெலீட் செய்யும் வசதி இப்போது whatsApp-இல் கொண்டுவந்துள்ளனர்.
- அடுத்த குரூபிக்கான அப்டேட் என்னவென்று பார்த்தோமென்றால், ஒருவேளை உங்கள் குரூப்பில் யாராவது லிங்க் மூலம் add ஆனார்கள் என்றல், அட்மின் அக்ஸப்ட் செய்தால் மட்டுமே add ஆகும் வசதியை கொண்டு வந்துள்ளனர். ஆமாம் இது ஒரு நல்ல விஷயம் தானப்பா..
- அதேபோல குரூப் அட்மின் கிரியேட் பண்ணின லின்கை யூஸ்பண்ணி அவங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து குரூப்பில் add-ஆக செய்யும் பொழுதுகு தேவையில்லாத நபர்கள் குரூப்பில் add-ஆகிறார்கள் என்றால், அந்த நபர்களை குரூப்பில் இருந்து நீக்கி விட்டு, புதிதாக வேறொரு லிங்க்கை கிரியேட் செய்து கொள்ளலாம். இப்படி செய்வதன் மூலம் முன்பு செய்த லிங்க் மூலம் தேவை இல்லாத நபர்கள் இனி add ஆவதை தடுக்கலாம்.
- குரூப்புனு சொல்றப்போ அட்மினிஸ்கு மட்டும் அப்டேட்ஸ் இருந்தா
எப்படி? நமக்கும் சில பிரைவசி அப்டேட்ஸ் WhatsApp தரப்பில் இருந்து கொண்டு வந்துருக்காங்க. பொதுவா நம்ப நம்பரை தெரிந்தவர்கள் கிட்ட குடுத்தாச்சுன்னா கண்ணாபின்னானு பல குரூப்பில் add செய்து விடுவார்கள் சிலர். அவர்களை நம்மால் ப்ளாக் செய்யவும் முடியாது. அதற்காக அற்புதமான ஒரு பிரைவசியை கொண்டு வந்துருகிறார்கள். அதுக்காக நீங்க என்ன பண்ணவேண்டும் என்றால் நீங்க உங்க WhatsApp-இல் privacy settings –> Groups –> Select My Contacts Except option-ஐ கிளிக் செய்து யார் நம்மை எந்த குரூப்பிலும் Add செய்யகூடாமல் இருக்க வேண்டுமோ அவர்களை தேர்வு செய்துகொள்ளலாம். இதன் மூலம் அவர்களால் நம்மை குரூப்பில் add செய்வதை தடுக்க இயலும்.
WhatsApp ரியாக்ஷன்ஸ் (WhatsApp Reactions):

இனி WhatsApp-யிலும் மற்ற appகளில் இருப்பதுபோல் reactions ஆப்ஷன் கொண்டுவந்துட்டாங்க. WhatsApp-பில் வரக்கூடிய மெசேஜிற்கு எல்லாம் இனிமேல் ரிப்ளை பண்ணிதான் புரியவைக்க வேண்டுமென்று அவசியம் இல்லை. இனி ரியாக்ஷன்ஸ் யூஸ் செய்தே ரிப்ளை செய்யலாம். ஒருவேளை நம்ப குடுத்த ரியாக்ஷன் மாற்றி கூடுதாள் கூட திரும்பவும் மாற்றி கொள்ளும் வசதியும் இருக்கிறது. குரூப்பில் வரும் ரீக்ஷன்களையும் யாரெல்லாம் செய்தார்கள் என்று தனியாக பார்த்துக்கொள்ளலாம். அதுமட்டுமின்றி நாம் அனுப்பிய மெசேஜிற்கு யாரேனும் ரியாக்ட் செய்தால் அதற்கான Notification-னும் நமக்கு வருகிறது.
வாய்ஸ் நோட் அப்டேட்ஸ் (Voice Note Updates):
வாய்ஸ் நோட் அதிகம் அனுப்புபவரா நீங்கள், அப்போ இந்த அப்டேட் உங்களுக்கானது. வாட்ஸாப்பில் முன்பு வாய்ஸ் நாட்டினை பாஸ் (Pause) செய்யும் வசதி இல்லை. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம், நீங்க வாய்ஸ் நோட் அனுப்பும்பொழுது ஏதேனும் வேலை வந்தால் உங்கள் வாய்ஸ் நோட்டை பாஸ் செய்து விட்டு திரும்பவும் ரெசுயும் (Resume) செய்துகொள்ளும் வசதி வந்துவிட்டது. அது மட்டும் இல்லாமல் நீங்க பாஸ் பண்ணியவரை இருக்கும் ஆடியோவை பிலே (play) செய்து பார்த்து கொள்ளலாம் மற்றும் ரெகார்டிங்கை பிலே செய்யும்பொழுதே வேறொரு app-ஐ யூஸ் செய்யும் வசதியும் வந்துள்ளது.
பிரைவசி அப்டேட் (WhatsApp privacy Updates):

இந்த அப்டேட் பிரைவசியை விரும்புவர்களுக்கான அப்டேட் குறிப்பாக பெண்களுக்கு என்றும் கூட சொல்லலாம். என்னடா அப்டினு பார்த்தா நீங்க உங்களோட ப்ரொபைல் பிக்ச்சர் (Profile Picture), ஸ்டேட்டஸ் (Status), லாஸ்ட் சீன் (Last Seen) போன்ற எல்லாவற்றையும் யாருக்கெல்லாம் காட்ட வேண்டும் என்று நாம் செட் செய்யும் வசதி வந்துள்ளது. இதனை Except my Contact-இல் செட் செய்து கொள்ளலாம்.
பைல் ஜிபி கணக்கில் அனுப்பவும் (WhatsApp 2GB File sharing):

WhatsApp-இல் இருந்து Telegram போலவே இனி GB கணக்கில் file-களை அனுப்ப இயலும். ஆமாங்க, இனிமேல் 2GB வரையமான பைல்களை அனுப்பும் வசதியை WhatsApp நிறுவனம் Telegram-க்கு போட்டியாக கொண்டுவந்து இருக்கிறார்கள். இனி 2GB வரையிலான விடீயோக்கள், ஆடியோக்கள் போன்ற எந்த வகையிலான file- களையும் document-டாக அனுப்பலாம்.
இதுவரை நாம் பார்த்தது அனைத்தும் இதுவரை வந்த features, இப்போது நாம் இந்த பதிவில் இனி வரவிருக்கும் feature-களை பார்க்கலாம்.
வாட்ஸ்அப்பில் வரவிருக்கும் அம்சங்கள் (Upcoming features in WhatsApp) :
பேக்கப் Export ஆப்ஷன் (Backup Export option in WhatsApp):
ஆமாங்க இனி உங்கள் WhatsApp-இல் இருக்கும் பேக்கப் Export option இன்னும் மேம்படுத்தி வெளியிடப்போவதாக கூறுகிறார்கள்.
ஸ்டேட்டஸ் ஆப்ஷன் (Enhancing status option in WhatsApp):
இனி வரும் அப்டேடில் ச்சாட் செய்பவரின் ப்ரொபைல் பிக்சரை கிளிக் செய்தே அவருடைய ஸ்டேட்டஸை பார்க்கும் வசதி கொண்டுவரப் போவதாக கூறியிருக்கிறார்கள். அதாவது Instagram-இல் இருக்கும் வசதி போலவே WhatsApp-யிலும் நான் இனி வரவிருக்கும் அப்டேட்ஸ்களில் காணலாம்.
கேப்ட் மெசேஜ் ஆப்ஷன் (Kept Message in WhatsApp):
கேப்ட் மெசேஜ் (Kept Message), அதாவது இனி ஒரு சில முக்கியமான மெசேஜ்களை கேப்ட் அப்டினு சொல்ற ஆப்ஷன் மூலமா நம்ப சேவ் செய்துக்கொல்லம். இந்த மெசேஜ், நாம் அந்த chat -ஐ டெலீட் செய்தாலும் டெலீட் ஆகாதென்று WhatsApp தரப்பில் இருந்து சொல்கிறார்கள்.
அவ்வளவு தான் நன்பர்களே, இந்த பதிவில் 2022-ன் WhatsApp-இல் வந்து இருக்கும் மற்றும் வரவிருக்கும் அணைத்து அப்டேட்டுகளையும் இந்த பதிவில் கொண்டுவந்துள்ளேன். கண்டிப்பாக இப்பதிவு உங்களுக்கு உதவும் என்று நம்புகிறேன்.