
தமிழ்நாடு அரசாங்க பள்ளிகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை நாட்கள்
லீவு என்று சொன்னாலே சின்ன பசங்க முதல் பெரியவங்க வரைக்கும் அவ்வளவு சந்தோஷம். எப்ப விடுமுறை விடுவாங்க எப்ப வெளில போலாம், பிரண்ட்ஸ் பார்க்கலாம், வெளியே போய் சாப்பிடலாம், வேலைக்கு போறவங்களுக்கு ஃபேமிலியோட டைம் ஸ்பென்ட் பண்ணலாம், எப்ப ரெஸ்ட் கிடைக்கும்னு எல்லாருக்கும் ஒரு பெரிய லிஸ்டே இருக்கும்.
அடுத்த 2023 ஆம் ஆண்டுக்கான அரசு விடுமுறை அறிவிச்சிருக்காங்க. ஒரு வருஷம் பிறந்ததும் காலண்டர் கைல கிடைச்சதும் எல்லாரும் முதல்ல பாக்குறது இந்த வருஷம் தீபாவளி எப்ப வரும்? பொங்கல் எப்ப வரும்? இந்த வருஷத்துக்கான விடுமுறை நாட்கள சின்ன பசங்க எல்லாம் கணக்கு போட்டு வச்சிருப்பாங்க. இந்த ஆண்டிற்கான ஆங்கில புத்தாண்டு, பொங்கல், தைப்பூசம், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி அப்படின்னு முக்கிய அரசு விடுமுறை நாட்கள் எல்லாமே ஞாயிற்றுக்கிழமையிலே வருது. ரம்ஜான், முகரம் பண்டிகைகள் சனிக்கிழமையில வருது. இதுபோக காந்தி ஜெயந்தி, விஜயதசமி, ஆயுத பூஜை எல்லாம் வார நாட்கள வருது.
பரவாலப்பா இந்த விடுமுறையாவது வார நாட்கள வருதே இதுபோக மழைக்காலங்களில் கொஞ்ச நாள் அரசு விடுமுறை விடும் அத வச்சு கொஞ்சம் என்ஜாய் பண்ணிக்கோங்க நண்பர்களே!
தமிழக அரசு 2023 ஆம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. இதில் அனைத்து விடுமுறை நாட்களும் கீழே அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது (Tamil Nadu Government Public Holidays 2023)
தேதி | தினம் | விடுமுறை |
---|---|---|
1 ஜனவரி | ஞாயிற்றுக்கிழமை | ஆங்கிலப் புத்தாண்டு |
15 ஜனவரி | ஞாயிற்றுக்கிழமை | தைப்பொங்கல் |
16 ஜனவரி | திங்கட்கிழமை | திருவள்ளுவர் தினம் |
17 ஜனவரி | செவ்வாய்கிழமை | உழவர் திருநாள் |
26 ஜனவரி | வியாழக்கிழமை | குடியரசு தினம் |
22 மார்ச் | புதன்கிழமை | தெலுங்கு வருடப்பிறப்பு |
4 ஏப்ரல் | செவ்வாய்கிழமை | மகாவீரர் ஜெயந்தி |
7 ஏப்ரல் | வெள்ளிக்கிழமை | புனித வெள்ளி |
14 ஏப்ரல் | வெள்ளிக்கிழமை | அம்பேத்கர் ஜெயந்தி |
14 ஏப்ரல் | வெள்ளிக்கிழமை | தமிழ் புத்தாண்டு |
22 ஏப்ரல் | சனிக்கிழமை | ரம்ஜான் |
1 மே | திங்கட்கிழமை | மே தினம் |
29 ஜூன் | வியாழக்கிழமை | பக்ரீத் |
29 ஜூலை | சனிக்கிழமை | மொகரம் பண்டிகை |
15 ஆகஸ்ட் | செவ்வாய்கிழமை | சுதந்திர தினம் |
7 செப்டம்பர் | வியாழக்கிழமை | கிருஷ்ண ஜெயந்தி |
19 செப்டம்பர் | செவ்வாய்கிழமை | விநாயக சதுர்த்தி |
28 செப்டம்பர் | வியாழக்கிழமை | மீலாதுன் நபி |
2 அக்டோபர் | திங்கட்கிழமை | காந்தி ஜெயந்தி |
23 அக்டோபர் | திங்கட்கிழமை | ஆயுத பூஜை |
24 அக்டோபர் | செவ்வாய்கிழமை | விஜய தசமி |
12 நவம்பர் | ஞாயிற்றுக்கிழமை | தீபாவளி |
25 டிசம்பர் | திங்கட்கிழமை | கிருஸ்துமஸ் |
FAQs for Tamil Nadu Government Public Holidays 2023
அரசு பொது விடுமுறை நாட்களாக 2023-ம் ஆண்டில் 24 நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.
5 நாட்கள் ஞாயிற்றுக்கிழமையாக அமைகின்றன
ஜனவரி 15,16 தேதிகளில் மட்டுமே விடுமுறை
12 நவம்பர், ஞாயிற்றுக்கிழமை (தீபாவளி)