
பொன்னியின் செல்வனின் கதை சுருக்கம்:
பாகம் 1: கல்கியின் படைப்புகளுள் அற்புதமான ஒரு காவியம் பொன்னியின் செல்வன். இது சோழப் பேரரசின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவானது. தன் நண்பனும் சோழப் பேரரசின் பட்டத்து இளவரசனுமான ஆதித்த கரிகாலனிடமிருந்து ஓலை வாங்கி பேரரசர் சுந்தர சோழர் மற்றும் குந்தவையைச் சந்திக்க தஞ்சை வருகிறான் வந்தியத் தேவன். அவன் தன் முயற்சியில் வெற்றி பெற்றானா? என்பதை நோக்கியே நகருகிறது.
பாகம் 2: பொன்னியின் செல்வனின் இரண்டாவது பாகம் சுழற்காற்று. பூங்குழலியின் அறிமுகத்தில் ஆரம்பித்து பல திடுக்கிடும் அரசியல் நிகழ்வுகளுடன் கதைக்களம் நகர்கிறது. இந்த பகுதியின் முடிவில் வந்தியத்தேவனைக் காப்பாற்றச் சென்ற இளவரசர் அருள்மொழி வர்மன் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார். அவர் சுழற்காற்றிலிருந்து எப்படித் தப்பித்தார்? அரசியல் எனும் சுழற்காற்றில் சிக்கிக்கொண்ட சோழ நாட்டைக் காப்பது யார்?
பாகம் 3: பொன்னியின் செல்வனின் மூன்றாவது பாகம் கொலைவாள். அரசியல் பரபரப்பு மிகுந்த சூழலில் பேரரசர் சுந்தர சோழர் நோய்வாய்ப் படுகிறார். அதே நேரம் இளவல் அருமொழி வர்மரும் புயலில் சிக்கிக் கொள்கிறார். இந்த அபாயகரமான சூழலில் பாண்டிய ஆபத்துதவிகள் சோழ நாட்டை சீர்குலைக்கு முயற்சிக்கிறார்கள். என்ன நடந்தது?
பாகம் 4: நான்காவது பாகம் மணிமகுடம். சோழப் பேரரசர் நோய் வாய்ப்பட்டுள்ள சூழலில் அரியணையைக் கைப்பற்ற மிகப்பெரிய சதி நடக்கிறது. அதற்கு இதைக் கேள்விப்பட்ட ஆதித்த கரிகாலன் வெகுண்டெழுகிறான். சதியாலோசனை நடைபெறும் கடம்பூர் மாளிகைக்கு ஆதித்த கரிகாலனை செல்லவிடக் கூடாது என்று பலர் தடுக்கிறார்கள். ஆனால், விதி யாரை விட்டது?
பாகம் 5: ஐந்தாவது பாகம், தியாகச் சிகரம். பாண்டிய ஆபத்துதவிகள் சோழப் பேரரசர் சுந்தர சோழர், பட்டத்து இளவரசர் ஆதித்த கரிகாலர், இளவரசர் அருள்மொழி வர்மர் ஆகியோரைக் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டுகிறார்கள். இவர்களின் சதித் திட்டத்துக்கு பலியானது யார்? தப்பியது யார்? தனக்கு நடைபெற்ற பட்டாபிஷேகத்தை அருள்மொழிவர்மன்
ஏற்றுக்கொண்டானா?
Ponniyin Selvan 1 Review:
PS-1 Movie Review: கல்கியின் படைப்புகளுள் அற்புதமான ஒரு காவியம் பொன்னியின் செல்வன். இது சோழப் பேரரசின் வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவானது. தன் நண்பனும் சோழப் பேரரசின் பட்டத்து இளவரசனுமான ஆதித்த கரிகாலனிடமிருந்து (விக்ரம்) ஓலை வாங்கி பேரரசர் சுந்தர சோழர் (பிரகாஷ் ராஜ்) குந்தவையைச் (த்ரிஷா) சந்திக்க தஞ்சை வருகிறான் வந்தியத் தேவன் (கார்த்தி). வரும் வழியில் நம்பியை (ஜெயராம்) சந்திக்கிறான். அவனுடன் விவாதத்தில் ஈடுபடுகிறான். குந்தவை வந்தியத் தேவனிடம் ஓலை கொடுத்து அதனை தன் தம்பி அருள்மொழி வர்மனிடம் (ஜெயம் ரவி) கொடுக்கும்படி சொல்கிறாள். இதற்கிடையே சோழ பேரரசை வீழ்த்த பெரிய பழுேட்டரையர் (சரத்குமார்) தலைமையில் நந்தினியின் (ஐஸ்வர்யா ராய்) ஆலோசனயுடன் சதி திட்டம் தீட்டபடுகிறது. சோழம் மீண்டதா? வந்தியத்தேவன் தன் பணியை சரியாக செய்தானா ? என்பதை நோக்கியே காவியம் பிரயாணிகிறது.

பலரால் முயன்றும் திரைக்கு கொண்டு வர இயலாமல் போன இக்கதையினை இயக்குனர் மணிரத்னம் மிகவும் அழகாக தனக்கே உரிய பாணியில் திரையாக் கம் செய்து இருக்கிறார்.
இதற்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக இளங்கோ குமரவேல் மற்றும் ஜெயமோகன் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
பொன்னியின் செல்வன் வாசகர்கள் திரைப்படத்தை அணு அணுவாய் ரசித்து மிகவும் களிப்புடன் பார்ப்பார்கள். புத்தகம் படிக்காதவர்களுக்கு அந்த களிப்பு கிடைப்பது சற்று சிரமமாக தான் இருக்கும்.
ஆதித்தகரிகாலனாக தன் நடிப்பில் நம்மை அனைவரையும் மிரள வைத்துள்ளார் விக்ரம். அந்த கம்பீரமான நடை, பேச்சு அசத்தோலோ அசத்தல்.

புத்தகத்தை படிக்கும் போது சில கதாபாத்திரம் நம்மை அறியாமலே சிலரை பார்க்கும் போது இது இவர்களாக இருக்க கூடும் என்று தோன்றும்…. அப்படி தோன்றிய கதாபாத்திரங்கள் தான் வந்திய தேவனான கார்த்தியும் ஆழ்வார்க்கடியான் ஆன ஜெயராம்… அவர்கள் நம் மனதில் அந்த கதாபாத்திரத்தை பிரதிபலித்தனர்.
நந்தினி ஆதித்த கரிகாலனை கலங்கடித்த்தவள். கல்கியின் மிக தலைச்சிறந்த கற்பனை கதாபாத்திரம். இக்காவியத் தில் ஒப்பற்ற பேரழகி யாகவே நந்தினியை செதுக்கி இருப்பார் கல்கி. அதற்கேற்றார் போல் ஐஸ்வர்யா ராயை தேர்வு செய்தது மிகவும் பொருத்தம்.

குந்தவை,சோழ குல இளவரசி,பேராற்றல் மிக்கவள், அருள்மொழி வர்ம னின் அன்பு அக்கா, அக்காவின் பேச்சிற்கு மறுபேச்சு பேசாத தம்பி. த்ரிஷா இக்கதாபாத்திரத்தில் நடித்தார் என்று சொல்வதை விட வாழ்ந்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். குந்தவை மற்றும் நந்தினி எதிர் எதிராக பார்த்துக்கொள்ளும் காட்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
அருள்மொழிவர்மன் சோழ குல இளவரசன், சோழ நாட்டின் செல்லப்பிள்ளை, மிகவும் வசிகரமானவன். ஜெயம் ரவி இக் கதாபாத்திரத்தில் ஒன்றி மிகவும் நன்றாக நடித்துள்ளார்.

பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் தங்களது மிரட்டலான நடிப்பை கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் தந்துள்ளனர்.
இவர்களை தவிர பிரபு, விக்ரம் பிரபு, ரஹ்மான், கிஷோர், ஷோபிதா, ஐஸ்வர்யா லட்சுமி, அஸ்வின், அர்ஜுன் சிதம்பரம், வினோதினி ஆகியோர் தங்கள் அசத்தலான நடிப்பால் கவனம் பெறுகிறார்கள்.
Also See–> தங்க விலை இன்றைய நிலவரம்| Today Gold Rate in Tamilnadu
இவை அனைத்தையும் தவிர அழகிற்கு அழகு சேர்ப்பது போல் அமைந்திருப்பது ரஹ்மானின் இசை மற்றும் ரவி வர்மனின் ஒளி பதிவு.
மணிரத்னம் படைப்பில் சிறந்தபடைப்பு மிகவும் அதிகமான கிராபிக்ஸ் இல்லாமலும்..
கதாபாத்திரங்களின் தமிழ் உச்சரிப்புகளை அனைவரும் புரியும் படியான எடுத்திருப்பது
சிறப்பு….
அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு படைப்பு தான் பொன்னியின் செல்வன் திரைப்படம்.. பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆஃபீஸ் லைவ் கலெக்ஷன் (Ponniyin Selvan Box Office Live Collection)
மேலும் இது போன்ற சுவாரசியமான தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யுங்கள்.