Monday, September 25, 2023
Homeசமையல் குறிப்புமாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்- Mappillai Samba Rice Benefits in Tamil

மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்- Mappillai Samba Rice Benefits in Tamil

முந்தைய காலத்தில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்தன. ஆனால் பல ரகங்கள் மறைந்து விட்டன. நமக்கு தெரிந்த நெல் வகைகள் பொன்னி, பாஸ்மதி பெரும்பாலும் இந்த இரண்டு அரிசி வகைகளையே பயன்படுத்துகிறோம்.

Mappillai Samba Rice Benefits in Tamil

ஆனால், நம் முன்னோர்கள் பயன்படுத்திய அரிசி வகைகள் சீரக சம்பா, கிச்சிலி சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, காட்டுயானம், கருடன் சம்பா, அதிசய பொன்னி போன்ற பல அரிசி ரகங்களை பயன்படுத்தினர்.

Mappillai samba in English – Groom Samba

இந்த பதிவில் நாம் மாப்பிள்ளை சம்பா அரிசியில் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம்.

மாப்பிள்ளை சம்பா (Bride groom rice):

இந்த அரிசி சிவப்பு நிறத்தில் இருக்கும். இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளும் ஒன்று.

Mappillai samba மருத்துவ குணங்கள்

  • அயன்(iron)
  • ஜின்க் (zinc)
  • பாஸ்பரஸ் (phosphorus)
  • மெக்னீசியம்(magnesium)

ஆகிய சத்துக்கள் இருப்பதால் நம் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும்.

முந்தைய காலத்தில் ஆண்களுக்கு மாப்பிள்ளை சம்பா அரிசியை உணவில் சேர்த்துக்கொண்டால் மாப்பிள்ளை போல் இளமையாகவே இருப்பார்கள் என முன்னோர்களால் கருதப்பட்டது.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவ நன்மைகள்

Mappillai Samba Rice Nutrition Facts: உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவுகிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியின் மருத்துவ நன்மைகள்
  • ஆகையால், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் காக்கும்.
  • பெரும்பாலான குடும்பங்களில் தலைமுறை தலைமுறையாக வரும் உடல் பருமன் நோய் வராமல் தடுக்கிறது.
  • வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்பந்தப்பட்ட குறைபாடுகளை நீக்கும்.
  • ஹீமோகுளோபின் (இரத்த அளவை) அதிகரிக்க உதவுகின்றது.
  • ரத்த அழுத்தத்தை( high BP level ) குறைக்கிறது.

மாப்பிள்ளை சம்பா அரிசியை கொண்டு என்னவளாம் செய்து சாப்பிடலாம் என்பதை காண்போம்

Mappillai samba rice recipes

  • கஞ்சி
  • இட்லி
  • தோசை
  • உப்புமா
  • இடியாப்பம்
  • கொழுக்கட்டை
  • மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்.

மாப்பிள்ளை சம்பா அரிசி பாயசம்

மாப்பிள்ளை சம்பா அரிசியை கொண்டு புதிதாக அனைவர்க்கும் பிடிக்கும் பாயசம் எப்படி செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.

Mapillai Samba Rice Payasam Recipe

தேவையானவை/Ingredients

  • இரவே ஊறவைத்த மாப்பிளை சம்பா அரிசி – 1/2 கப்
  • வெல்லம் – 1/2 கப்
  • தேங்காய் பால் – 1 கப்
  • நெய் – 2 டீஸ்பூன்
  • உலர் திராட்சை – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1/2 கப்
  • உப்பு – சிட்டிகை
Mapillai Samba Rice Payasam
Mapillai Samba Rice Payasam

பாயசம் செய்முறை

  • How to cook Mappillai samba rice Payasam: மாப்பிளை சம்பா அரிசியை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் தண்ணீரை வடித்துவிட்டு, ஊறவைத்த அரிசியை மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
  • இப்போது இந்த அரைத்த அரிசியை ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீர் மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலந்து 10 நிமிடம் அடுப்பில் வைத்து சமைக்கவும்.
  • மற்றொரு கடாயில் தண்ணீர் சேர்த்து அரைத்த வெல்லம் சேர்த்து கரையும் வரை கொதிக்க விடவும். மற்றும் வெல்லம் சாற்றை வடிகட்டவும்
    அரிசி வெந்ததும் வெல்லம் சாறு சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் வேகவிடவும். சுடர் அணைக்க.
  • தீ அணைந்ததும், தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாகக் கலந்து, தேங்காய்ப்பால் சேர்த்த பிறகு பாயாசத்தை வேகவைக்க வேண்டாம், இது பால் பிளவுபடச் செய்யும்.
    மற்றொரு கடாயில் நெய் சேர்த்து உலர் திராட்சை மற்றும் முந்திரி சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.
    சூடாக பரிமாறவும் !!

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments