Sunday, December 3, 2023
Homeசெய்திகள்ஆன்லைனில் உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி?

ஆன்லைனில் உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பதை தெரிந்துகொள்வது எப்படி?

ஹாய் மக்களே! தமிழக மக்களுக்கு ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்ற கவலை இனி வேண்டாம். ஏனெனில், இனி எளிதாக வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் ரேஷன் கடை திறந்துள்ளதா உங்கள் ஊரில் ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பைதை அறியலாம் (How to know if ration shop is open today in Tamil Nadu).

ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பைதை அறிய
How to check the ration shop status in Tamil Nadu

ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பைதை அறிய வழிமுறைகள்

  • ரேஷன் கடை இன்று திறந்துள்ளதா என்பைதை அறிந்துகொள்ள முதலில் https://www.tnpds.gov.in/ என்ற வெப் சைட்டிற்கு செல்லவும்.
  • பின்பு, அதில் “பொது விநியோகத் திட்ட அறிக்கைகள்” என்பதை கிளிக் செய்யவும்.
  • அதன்பின், நீங்கள் எந்த மாவட்டத்தை சேர்ந்தவர் என்ற விவரத்தையும், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதையும் தேர்வு செய்ய வேண்டும்.
  • பின்னர் உங்கள் ஊர் ரேஷன் கடை குறித்த விவரங்கள் அங்கு காண்பிக்கப்படும். அதில் ரேஷன் கடை திறந்து உள்ளது என்றால் ஆன்லைன் (Online) மற்றும் பச்சை நிறத்தில் குறியீட்டுடன் இருக்கும், கடை திறக்கவில்லை என்றால் ஆப்லைன் (Offline)என்று சிவப்பு (Red) நிறத்திலும் குறியீடு இருக்கும்.

உங்கள் ரேஷன் கடை இருப்பு நிலையை அறியவேண்டுமா?

  • உங்கள் ரேஷன் கடை இருப்பு நிலையையும் இதய இணைய பக்கத்தில் (https://www.tnpds.gov.in/) தெரிந்துகொள்ளலாம்.
  • அதற்கு பொருட்கள் “இருப்பு நிலை” என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால், எந்த பொருட்கள் இருக்கிறது என்றும் எவ்வளவு இருக்கிறது என்ற விவரங்களை தெரிந்துகொள்ள முடியும். அதை பொருட்டு நாம் எப்போது ரேஷன் கடை சென்று பொருட்களை வாங்குவது என முடிவு செய்துகொள்ளலாம்.

Also Read –> ஆன்லைனில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிப்பது எப்படி ? How to Apply Ration Card Online in Tamil Nadu

புகார்களை பார்ப்பது எப்படி?

மேலும் இந்த இணைய பக்கத்தில் பகுதி மக்களின் புகார் என்பதை தேர்வு செய்யும் போது, அப்பகுதி மக்கள் செய்த புகார்கள் குறித்த அணைத்து விவரங்கள் தெரியவரும். மேலும் அது தீர்க்கப்பட்டதா என்பதையும் தெரிந்துள்ள முடியும்.

மேலும் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பது, புதிய பயனரை சேர்ப்பது, கார்டு டிரான்ஸ்பர் செய்வது போன்றவற்றையும் www.tnpds.gov.in இணையதளத்தில் செய்ய முடியும்.

Also Read –>ஆன்லைன் மூலமாக பிறப்பு, இறப்பு சான்றிதழை பதிவிறக்கம் செய்வது எப்படி?| How to Download Birth and Death Certificate Online in Tamil Nadu?

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments