Friday, June 9, 2023
Homeசமையல் குறிப்புகருப்பு கவுனி அரிசி பயன்கள் - Karuppu Kavuni Rice Benefits in Tamil

கருப்பு கவுனி அரிசி பயன்கள் – Karuppu Kavuni Rice Benefits in Tamil

அரிசிகளின் ராஜா கருப்பு கவுனி அரிசி என கூறப்படுகிறது. கருப்பு கவுனி அரிசியை (Karuppu Kavuni Rice in English) Forbidden rice, Emperor’s rice, Black rice என பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

கருப்பு கவுனி அரிசி பயன்கள்
கருப்பு கவுனி அரிசி பயன்கள்

இதில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவ குணங்கள் அதிகமாக இருக்கும். ஒரு காலகட்டத்தில் அரசர்களும் அரச குடும்பத்தினர் மட்டுமே பயன்படுத்திய ஒரு அற்புதமான அரிசி கருப்பு கவுனி.

சைனீஸ் மெடிசன் (Chinese medicine)ல இந்த அரிசியை பயன்படுத்தி blood tonic தயாரிக்கிறாங்க. இன்றைய காலகட்டத்தில் எல்லா உணவுகளிலும் கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்துகின்றனர்.

கருப்பு கவுனி அரிசியின் சத்துக்கள்:

  • புரதம்
  • நார்ச்சத்து
  • ஊட்டச்சத்து
  • கால்சியம்
  • மெக்னீசியம்
  • இரும்புச்சத்து
  • வைட்டமின் E

ஆகிய சத்துக்களை அளவில்லாத வகையில் கொண்டுள்ளது.

கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்:

  • Karuppu kavuni rice benefits: கருப்பு கவுனி அரிசியில்(ANTHOCYANIN) இருப்பதால் கேன்சர்(cancer) வராமல் தடுக்கும்.
  • 100 கிராம் கருப்பு கவுனி அரிசியில் 4.9g Fiber உள்ளது.
  • செரிமானம் சீராக உதவுகிறது.
  • அதிகளவு அரிசி உண்ணுவதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. ஆனால் கருப்பு கவுனி அரிசியில் நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.
  • கருப்பு கவுனி அரிசி பெயருக்கு ஏற்ப கருப்பு நிறத்தில் இருக்கும் இதில் நார்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கிறது.
  • கருப்பு கவுனி அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால் கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.
  • இதனால் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை குறைக்கிறது.
  • நம் ஆரோக்கியத்தை மேம்படுத்த தினமும் ஒரு வேலை கருப்பு கவுனி அரிசியை பயன்படுத்தலாம்.
  • மேலும் உடல் எடையை குறைக்க விரும்புவோர் கருப்பு கவுனி அரிசியை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.
  • கருப்பு கவுனி அரிசி சேர்த்துக் கொள்வதன் மூலம் பசியை குறைத்து உடல் எடை ஏறாமல் காக்கும்.
  • அரை கப் கருப்பு கவுனி அரிசி எடுத்துக் கொண்டால்
    2g – ஃபைபர்(fiber)
    5g – புரோட்டின்(proteins)
    4% – இரும்புச்சத்து(iron)
  • மேலும் ரத்த சோகை வராமல் தடுக்கும்.
  • நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை அரிசிக்கு பதிலாக இதனை பயன்படுத்தலாம்.

கருப்பு கவுனி அரிசியை தினமும் சாப்பிடலாமா?

கருப்பு கவுனி அரிசியின் நன்மைகள்
கருப்பு கவுனி அரிசி

கருப்பு கவுனி அரிசியை தினம் ஒரு வேலை உணவில் எடுத்திகித்துக்கொண்டாள், இந்த அரிசியில் உள்ள நார்ச்சத்து, LDL கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இருதய நோய் வராமல் தடுக்கவும், இருதய நோய் இருப்பவர்களுக்கு மேலும் பாதிப்பு அடையாமல் இருக்க பெரிதும் உதவுகிறது.

Also Read –> மாப்பிள்ளை சம்பா அரிசி பயன்கள்- Mappillai Samba Rice Benefits in Tamil

கருப்பு கவுனி அரிசி சமைப்பது எப்படி?

கருப்பு கவுனி பாயசம் தேவையானவை:

  • கருப்பு அரிசி / கவுனி அரிசி – 2 டீஸ்பூன்
  • நெய் – 1 டீஸ்பூன்
  • சர்க்கரை – 1/4 கப்
  • பால் – 1/2 முதல் 3/4 கப்
  • ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
  • தேங்காய் துருவல் – 1 டீஸ்பூன்
  • முந்திரி – 1 டீஸ்பூன்
  • தண்ணீர் – 1/2 கப்
கருப்பு கவுனி பாயசம்
கருப்பு கவுனி பாயசம்

கருப்பு கவுனி பாயசம் செய்முறை:

  • Karuppu Kavuni Rice Recipe in Tamil: 1/2 டீஸ்பூன் நெய்யுடன் ஒரு கடாயை சூடாக்கி, அரிசியைச் சேர்த்து, நெய்யில் ஓரிரு நிமிடங்கள் அல்லது வாசனை வரும் வரை வதக்கவும்.
  • மிக்ஸி ஜாரில் மாற்றி சில முறை அல்லது சிறு தானியங்கள் போல் இருக்கும் வரை துருவி எடுக்கவும். பிரஷர் குக்கரில் தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
  • கறுப்பு அரிசியைச் சேர்த்து, வேகவைத்து, 3 விசில் வரும் வரை சமைக்கவும்.
  • பிரஷர் குக்கரில் இருந்து அழுத்தம் தானாக வெளியானதும், மூடியை அகற்றவும். அரிசி நன்கு வேகவைக்கப்பட வேண்டும் மற்றும் அரிசியின் தரத்தைப் பொறுத்து,
  • பின்பு, அனைத்து தண்ணீரும் உறிஞ்சப்பட்டு அல்லது மேலே சிறிது தண்ணீரைக் காணும்பொழுது அருசி வெந்துவிட்டது என்பதை உறுதி படுத்திக்கொள்ளலாம்.
  • பின்பு, ஒரு கரண்டியுடன் நன்கு கலந்து சர்க்கரை சேர்க்கவும். சர்க்கரை உருகினால், அரிசியில் மீண்டும் சிறிது தண்ணீர் அளவு கூடும்.
  • பாலை தனித்தனியாக சூடாக்கி அரிசியுடன் சேர்த்து சில நிமிடங்கள் கொதிக்க விடவும். இதற்கிடையில், மீதமுள்ள அரை தேக்கரண்டி நெய்யுடன் மற்றொரு கடாயை சூடாக்கி, முந்திரி மற்றும் தேங்காய் துண்டுகளை பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
  • இறுதியாக ஏலக்காய் தூள் மற்றும் வறுத்த முந்திரி மற்றும் தேங்காய் சேர்க்கவும். நன்றாக கலக்கவும்.
  • சூப்பர்! சுவையான கவுனி அரிசி பாயாசம்/கருப்பு சாதம் கீர் தயார்.

Also Read –> முருங்கை கீரை சூப் பயன்கள் – Murungai Keerai Soup Recipe in Tamil

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்❤️

RELATED ARTICLES

Most Popular

Recent Comments