Monday, September 25, 2023
Homeசெய்திகள்ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு 2023| Jallikattu Rules in Tamil Nadu

ஜல்லிக்கட்டு விதிமுறைகள் வெளியீடு 2023| Jallikattu Rules in Tamil Nadu

Jallikattu Rules and Regulations

2023 ஆம் ஆண்டு தை திருநாளையொட்டி தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது (jallikattu rules in tamil).

Jallikattu Rules in Tamil Nadu
Jallikattu Rules in Tamil Nadu

Jallikattu Game Rules By Government Updated:

ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அலங்காநல்லூர் அவனியாபுரம் பாலமேட்டில் ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது (jallikattu game rules). இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அரசு விதித்த கட்டுப்பாடுகள் பற்றி இப்பதிவில் காணலாம்.

Jallikattu History: ஜல்லிக்கட்டு என்பது 2,000 ஆண்டுகள் பழமையான காளைகளை அடக்கும் விளையாட்டு ஆகும், இதில் போட்டியாளர்கள் காளையை அடக்கி பரிசுக்காக முயற்சி செய்கிறார்கள், அதில் அவர்கள் தோல்வியுற்றால், காளையின் உரிமையாளர் பரிசை வெல்வார். தமிழ்நாட்டின் மதுரை, திருச்சிராப்பள்ளி, தேனி, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் பகுதி என்று அழைக்கப்படும் இது போற்றப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டி தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டாக கருதப்படுகிறது இதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் சென்னையில் மெரினா கடற்கரையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பொதுமக்கள் என பலர் இரவு பகல் பாராமல் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி இதற்கு அனுமதி பெற்றனர். இது மிகப்பெரிய பேசும் பொருளாக மாறியது.

அதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கான தடையினை மத்திய அரசு பிறப்பித்து அனுமதி வழங்கியது. அதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்ட திட்டத்தின்படி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

Also Read –> Tamil Nadu Government Public Holidays 2023 | தமிழக அரசு விடுமுறை நாட்கள் 2023

Jallikattu in English: ஜல்லிக்கட்டு –> “Bull Taming”

அந்த கட்டுப்பாட்டுகளின் படி ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு பல்வேறு பெயர்கள் உள்ளன ஏறுதழுவுதல், மஞ்சுவிரட்டு, ஏறு கோள், மாடு பிடித்தல் என்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது.

ஏறு தழுவுதல் முல்லை நில மக்களின் அடையாளமாக கருதப்படுகிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் அரசால் விதிக்கப்பட்டுள்ளது. அந்த ஆனையின்படி 2017 ஆம் ஆண்டினை தொடர்ந்து தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தைத்திருநாளையொட்டி ஜனவரி மாதம் முதல் மே மாதம் வரை போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் காளைகளுக்கு எந்த ஒரு துன்புறுத்தலும் ஏற்படுத்தாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்துவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகளை கடைப்பிடித்து பின்பற்ற வேண்டும் என உத்தரவிட கோரி ஆணையில் அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான குழுக்கள்:

  • ஜல்லிக்கட்டு விதிமுறைகள்: ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியரிடம் இருந்து விழாக்கான முன் அனுமதி பெறாத விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்க கூடாது.
  • கால்நடை வதை தடுப்பு விதிகளை பின்பற்றி போட்டிகளை நடத்துபவர்களுக்கு மட்டுமே அனுமதிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் போட்டிக்கான ஒரு குழுக்களை அமைத்து ஆன்லைன் மூலமாகவும் தங்களின் பதிவை தக்க சான்றிதழ்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
  • போட்டிகளை நடத்துவதற்கு முன்பாக ஜல்லிக்கட்டு குழுக்களை அமைக்க வேண்டும்.
  • காளைகளை வளர்க்கின்றவர்களுடன் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கூட்டம் அமைக்க வேண்டும்.
  • காளைகளுக்கு தேவையற்ற வலிகளையோ, துன்புறுத்தலையோ ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் அவற்றின் பாதுகாப்பை தெரிவிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியின் வழிகாட்டு நெறிமுறைகள்:

ஜல்லிக்கட்டு போட்டியின் வழிகாட்டு நெறிமுறைகள்
  • Jallikattu Rules : ஜல்லிக்கட்டு காளைகளுக்கு எந்த உடல் நலக்குறைவும் ஏற்படவில்லை எந்தவிதமான போதைப்பொருள் ஆட்படவில்லை என்று நிபுணர்களின் ஆய்வின்படி மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • மாநில அளவிலான ஜல்லிக்கட்டு கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்கும் இடத்தில் கண்காணிப்புக்காக அரசு அதிகாரிகளை நேரில் சென்று கண்காணிக்க உத்தரவிட்டுள்ளனர்.
  • ஜல்லிக்கட்டு நடைபெறும் முக்கிய பகுதியில் கேமராக்களை பொருத்த வேண்டும்.
  • மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருவாய்த்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, காவல்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை தீயணைப்பு துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டு அரசு விதித்த விதிகளின்படி விளையாட்டு நடப்பதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என கூறியுள்ளனர்.
  • கொரோனா பரவல் சற்று குறைந்துள்ள நிலையிலும் போட்டிகளை நடத்தும் போது கொரோனா பரவல் கட்டுப்பாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவித்துள்ளனர்.
  • போட்டியில் பங்கேற்கும் காளையின் உரிமையாளர் மற்றும் அவருடன் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதி
  • போட்டிக்கு மூன்று நாட்களுக்கு முன்பு காளை மற்றும் அவர்கள் இரண்டு பேரின் பெயரை பதிவு செய்திருக்க வேண்டும்.
  • மாடுபிடி வீரர்களும் அவர்களது பெயரை முன்பே விழா குழுவின் கொடுத்து அனுமதி பெற வேண்டும்.
  • காளை பாதுகாப்பாக உணர காளையின் உரிமையாளர் அருகிலேயே நின்று கொண்டிருக்க வேண்டும்.
  • அவர்கள் இரண்டு பேருமே இரண்டு கொரோனா தடுப்பூசிகளை கட்டாயமாக செலுத்திருக்க வேண்டும்.
  • போட்டி நடக்க இருப்பதற்கு முன்பு இரண்டு நாட்களுக்குள் கொரோனாக்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனையை எடுத்து அதற்கான சான்றிதழையும் விழா கமிட்டியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அவர்கள் இரண்டு பேருக்கும் மாவட்ட நிர்வாகம் அடையாள அட்டை வழங்கும் அதன்படி செயல்பட வேண்டும் என அறிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மற்றும் தடுப்புகள்:

  • Jallikattu Safety Precautions in Tamil Nadu: காளைகள் ஓடும் பகுதியில் இருந்து அந்த காளையின் உரிமையாளர் காளையை பெற்றுக் கொள்ளும் இடம் வரை 8 அடி உயர தடுப்புகளை அமைக்க வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் அந்த இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து கிணறுகளும் மூடப்பட வேண்டும்.
  • ஜல்லிக்கட்டு நடக்கும் போது கால்நடை மருத்துவ குழு மற்றும் வாடிவாசல் மேலாண்மை குழுக்கள் மருத்துவக்குழு அவசரகால குழு போன்ற அனைத்து குழுக்களையும் பணியில் இருக்க உத்தரவிட்டுள்ளனர்.
  • மேலும் கால்நடை ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட வேண்டும் என அறிவித்துள்ளனர்.
  • இது போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாமல் ஜல்லிக்கட்டு விளையாட்டினை நடத்த உத்தரவிட்டுள்ளனர்.

FAQ’s on Jallikattu:

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு என்றால் என்ன?

ஜல்லிக்கட்டு என்பது காளைகளை அடக்கும் போட்டிமற்றும் தமிழ்நாட்டின் கிராமங்களில் மிகப்பெரிய விளையாட்டாகும், இது அறுவடை காலத்திற்குப் பிறகு நடத்தப்படுகிறது. வெற்றி பெறும் காளை, அதன் உரிமையாளர் மற்றும் காளைகளை அடக்கும் வீரர்களுக்கு அந்தந்த கிராமங்களில் வெற்றிமுடி சூட்டி கொண்டாடப்படும்.

ஜல்லிக்கட்டு விதிகள் என்ன?

பொதுவாக, பங்கேற்பாளர்கள் காளையின் கூம்பில் மட்டுமே பிடிக்க வேண்டும். சில சமையத்தில் அவர்கள் காளையின் கழுத்து, கொம்புகள் அல்லது வாலைப் பிடித்தால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். பிராந்தியத்தைப் பொறுத்து விளையாட்டுக்கு பல இலக்குகள் இருக்கலாம். சில பதிப்புகளில், போட்டியாளர்கள் 30 வினாடிகள் அல்லது 15 மீட்டர்கள் (49 அடி) காளையின் கூம்பைப் பிடிக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற இடம் எது?

தமிழகத்தின் மதுரை பாலமேடு பகுதியில் 700 காளைகள் மற்றும் 300 காளை மாடுபிடி வீரர்களுடன் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்வு தொடங்குகிறது. பிரமோத் மாதவ்: உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு தமிழகத்தின் மதுரை பாலமேடு பகுதியில் 700 காளைகள் மற்றும் 300 காளைகளை அடக்கும் வீரர்களுடன் தொடங்குகிறது.

ஜல்லிக்கட்டின் ராஜா யார்?

சுவாரஸ்யமாக, புலிக்குளம் காளைகள் ஜல்லிக்கட்டுக்கு ‘ராஜா’ என்று கூறுவர்கள்.

ஜல்லிக்கட்டுக்கான ஆங்கிலப் பெயர் என்ன?

Jallikattu in English: ஜல்லிக்கட்டு –> “Bull Taming”

ஜல்லிக்கட்டுக்கு எவ்வளவு பழையது?

ஜல்லிக்கட்டு என்பது 2,000 ஆண்டுகள் பழமையான காளைகளை அடக்கும் விளையாட்டு ஆகும், இதில் போட்டியாளர்கள் காளையை அடக்கி பரிசுக்காக முயற்சி செய்கிறார்கள், அதில் அவர்கள் தோல்வியுற்றால், காளையின் உரிமையாளர் பரிசை வெல்வார். தமிழ்நாட்டின் மதுரை, திருச்சிராப்பள்ளி, தேனி, புதுக்கோட்டை மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுப் பகுதி என்று அழைக்கப்படும் இது போற்றப்படுகிறது.

ஜல்லிக்கட்டில் காளைகள் பாதிக்கப்படுமா?

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகும், காளைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

ஜல்லிக்கட்டில் நான் எப்படி பங்கேற்க முடியும்?

ஜல்லிக்கட்டு ஆன்லைன் பதிவு 2023: வழிகாட்டுதல்கள், விதிகள் படி-
விளையாட்டுக்காக கால்நடைகளை பதிவு செய்யும் காளை உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள், அத்துடன், ஆர்டி-பிசிஆர் சோதனையில் நெகடிவ் அறிக்கையைத் தவிர, முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழை நிகழ்வுக்கு குறைந்தது 48 மணிநேரத்திற்கு முன் சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments