ஹாய் மக்களே! முன்பெல்லாம் மக்கள் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் பெறுவரத்திற்கு மிகவும் பெரிய வழிமுறைகளை பின்பற்றவேண்டி இருந்தது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அப்ளை செய்து அதை கையில் பெறுவதற்குள் போதும் போதுமென்றே ஆகிவிடும். ஆனால் இனி அந்த கவலை இல்லை. ஏனெனில், இனி தமிழக மக்கள் தனக்குறிதான பிறப்பு, இறப்பு சான்றிதழ் குறித்த அனைத்து விவரங்களையும் இணையதளத்தில் பதிவிட்டு சான்றிதழை (Download Birth and Death Certificate Online in Tamil Nadu) பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் இப்பொழுது பிறப்பு, இறப்பு தேதி குறித்தான அனைத்து விவரங்களையும் ஆன்லைனில் பதிவிட்டு சான்றிதழை டவுன்லோட் செய்துகொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
மேலும், எந்தவிதமான செலவும் இல்லாமல் எப்படி ஆன்லைன் வழியாகவே பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழை (டெத் அண்ட் பிரத் செர்டிபிகேட்) பதிவிறக்கம் செய்வது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
Steps to Apply for Birth and Death Certificate Online
Pirappu Irappu Certificate Online : பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை (Birth and Death Certificate Online) ஆன்லைன் வழியாக பதிவிறக்கம் செய்வதில் இரண்டு வழிமுறைகள் உள்ளன.
- முறை 1: சென்னையில் உள்ள மக்கள் –> https://chennaicorporation.gov.in/gcc/online-services/birth-certificate/ என்கிற இணையதள அட்ரஸ் மூலமாக சான்றிதழை எளிமையாக டவ்ன்லோடு செய்துகொள்ளலாம்.
- முறை 1: மற்ற நகர்ப்புறம் மற்றும் பிற பகுதிகளில் வசிப்பவர்களுக்கான வெப் அட்ரஸ் –> https://www.etownpanchayat.com/publicservices/Birth/Birthsearch.aspx என்கிற இணையதள அட்ரஸ் மூலமாக சான்றிதழை எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
Also Read –> தமிழ்நாட்டில் அவசர உதவி எண்கள் – Emergency Numbers in Tamil Nadu
பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான வழிமுறை:
- How to apply Birth Certificate Online: முதலில் இந்த வெப் அட்ரஸ் பக்கத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழ் தேடுதல் (Search) என்கிற பகுதியை கிளிக் செய்யவேண்டும்,
- பின்பு, பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி போன்ற அனைத்து விவரங்களையும் பதிவு செய்யகொள்ள வேண்டும்.
- பின், செர்டிபிகேட் எந்த மொழியில் வேண்டும் என்பதை கிளிக் செய்து Generate எனும் பட்டனை கிளிக் செய்துவிட்டால் செர்டிபிகேட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இறப்புச் சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான வழிமுறை:
- How to apply Death Certificate Online: முதலில் இந்த வெப் அட்ரஸ் பக்கத்திற்கு சென்று பிறப்பு சான்றிதழ் தேடுதல் (Search) என்கிற பகுதியை கிளிக் செய்யவேண்டும்,
- பின்பு, பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பாலினம், பிறந்த தேதி, இறந்த தேதி போன்ற அனைத்து விவரங்களையும் ரெஜிஸ்டர் செய்யகொள்ள வேண்டும்.
- பின், செர்டிபிகேட் எந்த மொழியில் வேண்டும் என்பதை கிளிக் செய்து Generate எனும் பட்டனை கிளிக் செய்துவிட்டால் செர்டிபிகேட் எளிமையாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்❤️.
FAQs
தமிழ்நாட்டில் பிறப்புச் சான்றிதழை ஆன்லைனில் தேடுவதற்கான படிகள்
1: டவுன் மற்றும் பஞ்சாயத்துகளின் இயக்குநரகத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.
2: பிறப்புச் சான்றிதழில் கிளிக் செய்யவும்.
3: பிறப்புச் சான்றிதழ் தேடலில் கிளிக் செய்யவும்.
5: பின்பு Generate என்பதைக் கிளிக் செய்யவும்.
தமிழ்நாட்டில் இறப்புச் சான்றிதழை ஆன்லைனில் தேடுவதற்கான படிகள்
1: டவுன் மற்றும் பஞ்சாயத்துகளின் இயக்குநரகத்தின் இணையதளத்தைப் பார்வையிடவும்.
2: இறப்புச் சான்றிதழில் கிளிக் செய்யவும்.
3: இறப்புச் சான்றிதழ் தேடலில் கிளிக் செய்யவும்.
5: பின்பு Generate என்பதைக் கிளிக் செய்யவும்.
1907 ஆம் ஆண்டில், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணியகம் (Census Bureau) தரவுகளை சேகரிக்கத் தொடங்கிய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, மத்திய அரசு முதலில் ஒரு நிலையான பிறப்புச் சான்றிதழ் விண்ணப்பப் படிவத்தை உருவாக்கியது.
கடைசி ஆறு இலக்கங்கள், பொதுவாக பிறந்த ஆண்டைப் பொறுத்து தனித்துவமான வரிசை எண்ணாகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆவண எண் மேல் வலது மூலையில் அமைந்து இருக்கும். இருப்பினும், மேல் இடது மூலையில் எண்ணைக் காட்டக்கூடிய விதிவிலக்குகள் அமைந்து இருக்கும்.
பிறந்த இடம் கிராமப்புறமாக இருந்தால், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும், பிறந்த இடம் நகர்ப்புறமாக இருந்தால், நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும், பிறப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பம் கொடுக்கவும், நிகழ்வு பதிவு செய்யப்பட்டிருந்தால், சம்பந்தப்பட்ட அலுவலகம் சான்றிதழ் வழங்கும், இல்லை என்றால், சம்பந்தப்பட்ட அலுவலகம் நான்-அவைலபிலிட்டி சான்றிதழை வழங்கும்.