வாழைப்பழம் உலகளவில் மிகவும் பிரபலமான பழங்களில் ஒன்றாகும். அவை ஆரோக்கியத்தில் பாதுகாப்பு தாக்கத்தை ஏற்படுத்தும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டிருக்கின்றன. “முசா அக்குமினாட்டா மற்றும் மூசா பால்பிசியானா” (Musa acuminata, Musa balbisiana) என அறிவியல் பூர்வமாக பெயரிடப்பட்டது. வாழைப்பழம் வெப்பமண்டலங்களில் வளர்க்கப்படுகிறது, மேலும் அந்த பகுதிகளில் இது மிகவும் பரவலாக நுகரப்படுகிறது என்றாலும், அதன் சுவை, ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் தன்மைக்காக இது உலகளவில் மதிப்பிடப்படுகிறது.

கேவன்டிஷ், அல்லது இனிப்பு, வாழைப்பழங்கள் பொதுவாக புதியதாக உண்ணப்படுகின்றன, இருப்பினும் அவை வறுத்த அல்லது பிசைந்து மற்றும் துண்டுகள் அல்லது புட்டுகளில் குளிர்விக்கப்படலாம். மஃபின்கள், கேக்குகள் அல்லது ரொட்டிகளை சுவைக்கவும் அவை பயன்படுத்தப்படலாம். வாழைப்பழங்கள், வெப்பமண்டல பகுதிகளில் பிரதான உணவு ஆதாரமாக பரவலாக வளர்க்கப்படுகின்றன; அவை பழுத்த அல்லது முதிர்ச்சியடையாத போது சமைக்கப்படுகின்றன. ஒரு பழுத்த பழத்தில் 22 சதவீதம் கார்போஹைட்ரேட் உள்ளது மற்றும் உணவு நார்ச்சத்து, பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் வைட்டமின்கள் பி6 மற்றும் சி ஆகியவை அதிகமாக உள்ளது.
வாழைப்பழம் நன்மைகள்:
- Benefits of Banana: முக்கனியில ஒன்னு வாழைப்பழம் சில பேர் வாழைப்பழம் சாப்பிட மாட்டாங்க. ஆனா அதுல எவ்ளோ எனர்ஜி (energy) இருக்குன்னு நிறைய பேருக்கு தெரியவில்லை.
- விளையாட்டு வீரர்களுக்கு காலை உணவாக எடுத்துக்க சொல்றாங்க. அந்த அளவுக்கு இதுல எனர்ஜி இருக்கு.
- தினமும் வாழைப்பழமும் சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கும்.
- ரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்ய உதவுகிறது.
- ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை பராமரிக்கவும் உதவுகிறது.
- இத்தகைய வாழைப்பதை கொண்டு பலவகை உணவுகள் தயாரிக்க படுகின்றன. இப்பதிவில் வாழைப்பழத்தை பயன்படுத்தி எளிமையான வாழைப்பழம் கேக் செய்வது எப்படியென்று பார்க்கலாம்.
Also Read–>கருப்பு கவுனி அரிசி பயன்கள் – Karuppu Kavuni Rice Benefits in Tamil
பனானா கேக் (Banana cake Recipe in Tamil)
தேவைப்படும் பொருள்:
- வாழைப்பழம் -2 ,
- மைதா -1 cup,
- உப்பு -1 சிட்டிகை,
- பேக்கிங் சோடா -1/2 டீஸ்பூன்,
- நாட்டு சக்கரை -1/2 cup,
- பட்ட பவுடர்(cinamon powder),
- தயிர் -(3 to 4 )டேபிள் ஸ்பூன்,
- நெய் – 1/2 cup,
- முட்டை -1

Banana cake செய்முறை:
- Banana cake seivadhu eppadi: பனானா எஸ்சென்ஸ் கொஞ்சம் சேர்த்துக்கோங்க.
- வாழைப்பழம் இரண்டு மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- ஒரு பௌல்ல நெய் எடுத்துக்கோங்க, அது கூட நாட்டுச்சர்க்கரை சேர்த்து நல்ல கலக்கிக்கோங்க
- அப்புறம் முட்டை சேர்த்துக்கோங்க, அது கூட பட்ட பவுடர் (cinamon powder)
- பனானா எசென்ஸ், அத்துடன் அரைச்சு வச்ச வாழைப்பழம், சிறிதளவு உப்பு சேர்த்துட்டு, அது கூட மைதா சேர்த்து, பேக்கிங் சோடா கொஞ்சம் போட்டு நல்லா கலக்கிக்கோங்க.
- எல்லாத்தையுமே நல்லா மிக்ஸ் பண்ணி, குக்கர்லையே (cooker)
கேக் பண்ணிடலாம். - கேக் tray இருந்தா பண்ணிக்கலாம் அப்படி இல்லனாலும் நம்ம வீட்ல இருக்கிற பாத்திரத்தில் கூட பண்ணிக்கலாம்.
- குக்கர்ல அந்த கேக் வேகுற அளவுக்கு தண்ணி கொஞ்சம் நிரப்பிக்கிட்டு
- அதில் ஏதாவது ஒரு ஸ்டாண்ட் மாதிரி வைத்து, அந்த ஸ்டாண்டுக்கு மேல கேக் tray வச்சுக்கலாம்.
- குக்கரை க்ளோஸ் பண்ணிக்கோங்க, விசில் எல்லாம் போட வேணாம்.
- ஒரு 15 நிமிஷம் நல்லா வேகட்டும் கொஞ்சம் ஹை ஃப்ளேம்ல இருக்கட்டும்.
- 15 நிமிஷம் கழிச்சு எடுத்து பாருங்க நல்லா புசுபுசுன்னு வாழைப்பழம் கேக் சூப்பரா ரெடியாயிடும்.
Also Read–>கற்றாழை பயன்கள் – Aloe Vera Gel Uses in Tamil
மேலும் இதுபோன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்