நீங்கள் தூக்கம் பற்றி உணராத உண்மைகள்
- தூக்கம் என்பது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம். அதை பற்றிய முக்கியமான சில தகவலை நாம் அறிந்து கொள்ளலாம்! (Sleeping Facts)

தூக்கம் ஒரு வரம்
- உண்மையில் தூக்கம் ஒரு வியாதி அல்ல அது ஒரு வரம். ஆம்! நம் வாழ்வில் மூன்றில் ஒரு பகுதியை தூக்கத்தில்தான் செலவிடுகிறோம். உடலுக்கும்,மனதுக்கும் ஓய்வையும், மகிழ்ச்சியைவும் தரக்கூடியது தூக்கம். ஒரு மனிதன் தன் வாழ் நாளில் 25 வருடத்தை தூக்கத்தில் தான் செலவிடுகிறான் (Facts of sleeping in Tamil).
இரவில் தூக்கம்
- இரவில் நாம் தூங்கும்போது தான் பல வேலைகள் நம் உடலில் நடக்கிறது. உதாரணமாக எலும்புகள் வலுப்படுதல்,வளர்ச்சிதை மாற்றங்கள், காயங்கள் விரைவாக ஆறுவது போன்று மேலும் பல செயல்கள் நாம் தூங்கும்போது தான் நடக்கிறது. ஆனால் நாம் தூங்காமல் இருந்தால் மேல் குறிப்பிட்ட பல செயல்கள் தடுக்கப்படுகிறது இதனால் நம் உடலையும் அது பாதிக்கிறது.

- ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 6-8 மணி நேர தூக்கம் என்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆய்வின் படி குறைந்த தூக்கம் உடையவர்களுக்கு உணவு பழக்கம் என்பது முற்றிலும் மாறுபட்ட ஒன்றாக மாறிவிடும். சரியான உணவு நேரம் என்ற ஒன்று அவர்களிடத்தில் இருக்காது இதனால் பல பாதிப்புகள் உடலில் ஏற்படும். எப்போதும் அவர்களின் மனநிலை சமநிலையில் இல்லாமல் தடுமாறும்.
Read–> மழை புயல் காலங்களில் முன்னெச்சரிக்கையாக இருப்பது எப்படி?
தூக்கமின்மையின் காரணம்
தூக்கமின்மை இரண்டு காரணங்களால் ஏற்படுகிறது
முதல் காரணம்: இரவில் தூங்காமல் அதிக நேரம் அலைபேசி, மடிக்கணினி மற்றும் திரைகளை பார்ப்பது தான். இரவில் அதிக நேரம் திரைகளை பார்ப்பதால் அதில் இருந்து வெளியேறும் ஊதா கதிர்கள் கண்களை பாதிக்கும் அது மட்டுமல்லாமல் சூரியனில் இருந்தும் இதே ஊதா கதிர்கள் வெளியேறுகிறது.
இதனால் நமது மூளை திரையில் இருந்து வெளியே வரும் ஊதா கதிர்களை பகல் என்றே நினைக்கும் இதனால் தூக்கத்தை தூண்டும் மெலடோனின் சுரக்காமல் இருக்கும். இதுவே பழக்கமானால் நமது உடலுக்கு தூக்கம் என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் (Thookam inmaiyin karanam).

இரண்டாவது காரணம்: தற்போதுள்ள ஆண்களும் பெண்களும் தனது பள்ளி கல்லூரி முடிந்த பின் பல பேர் விளையாட்டு மற்றும் ஆரோகியதிற்கு உடற்பயிற்ச்சி என்று செய்து முடித்த பிறகு அப்படியே அந்த நாளை முடிக்காமல் இரவில் சினிமா மற்றும் இரவில் ஊர் சுத்துவது போன்ற பழக்கம் அதிகரித்துள்ளது. இதனால் அவர்கள் சராசரியாக 11 மணிக்கு தூங்கி காலை 8 மணிக்கு எழுகின்றனர்.
இதனால் அவர்கள் பள்ளி மற்றும் கல்லூரிக்கு சரியான சமயத்தில் செல்ல முடிவதில்லை இது அவர்களுக்கு பல பின் விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று உணர்ந்து மூளை அவர்களை காலை விரைவாகவே எழ வேண்டும் என்ற ஒரு பயத்தை மனதில் ஏற்படுத்திவிடுகிறது. இது ஒரு நாள் என்றால் பரவாயில்லை ஆனால் இதுவே தொடர்கதை ஆனால் உடலில் மெலடோனின் சுரப்பு குறைந்து தூக்கம் இழந்து காணப்படுவீர்கள் (Insomnia causes).
மகிழ்விற்கு தூக்கமும் வழிகாட்டும்!…
- மனிதனுக்கு ஆறுதலையும்,ஊக்கத்தையும்,உற்சாகத்தையும் அளிக்கக்கூடியது தூக்கம். இரவில் தூங்கும்முன் அதாவது 30 நிமிடம் முன் திரைகளை அனைத்துவிட்டு தூங்க முயலுங்கள். மூளைக்கும் உடலுக்கும் அளிக்கும் ஓய்வே பல நோய்களுக்கு முற்று புள்ளி வைக்கும். மிகவும் ஆழ்ந்த தூக்கம் உடையவர்களே மிகவும் மகிழ்ச்சியான மனநிலை உடையவர்களாக உள்ளனர். மேலும் அதிக விழிப்புணர்வுடனும் மன அழுத்தம் போன்றவற்றை எதிர்த்து போராடும் மனநிலையும் உண்டாகிறது.
Also Read–> திருமணத்தடுப்பு சட்டம் | Child Marriage Act in India – Tamil
மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்.