Sunday, December 3, 2023
Homeசமையல் குறிப்புரவா அல்வா இப்படி செஞ்சி சாப்பிட்டுப்பாருங்க!| Rava Halwa Recipe in Tamil

ரவா அல்வா இப்படி செஞ்சி சாப்பிட்டுப்பாருங்க!| Rava Halwa Recipe in Tamil

ஈஸியான ரவைல அல்வா

ரவைல கேசரி பண்ணி சாப்பிட்டு இருக்கோம் ஆனால் ரவைல அல்வா செஞ்சு சாப்பிட்டு இருப்போமா? ரவை அல்வா என்பது ருசியான சுவையுடன் கூடிய பிரபலமான இந்திய இனிப்பாகும், வட இந்தியாவில், இது பிரபலமாக சுஜி ஹல்வா (சூஜி ஹல்வா) என்று அழைக்கப்படுகிறது. தென்னிந்தியாவில் இது ரவா அல்வா என்று அழைக்கப்படுகிறது (rava halwa recipe in tamil).

Rava Halwa Recipe in Tamil
ஈஸியான ரவைல அல்வா

ரவா அல்வா பொதுவாக விநாயக சதுர்த்தி, வரலக்ஷ்மி பூஜை, நவராத்திரி, தீபாவளி, ராம நவமி, கன்யா பூஜை, மகர சங்கராந்தி, சாய் குருவர் போன்றவற்றின் போது நைவேத்யம் அல்லது பிரசாதமாக கடவுளுக்கு வழங்கப்படுகிறது (bombay rava halwa recipe in tamil).

வழக்கம் போல ரவாவை வைத்துசெய்தும் அல்வாவை சற்று ருசிகவும் பார்ப்பதற்கும் கண்களை கவரும் வண்ணம் இருப்பது போல் எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம் (tasty rava halwa recipe).

இதோ எப்படி ஈஸியா ரவைல அல்வா செய்றதுன்னு பார்ப்போம் (easy rava halwa recipe).

Rava halwa ingredients தேவையான பொருட்கள்:

  • ரவை – 1 கப்
  • நெய் – ½ கப் ( 100 g )
  • சீனி – 1¼ கப்
  • ஏலக்காய் பவுடர் – கால் டீஸ்பூன் வாசனைக்காக சிறிதளவு
  • தேவைப்பட்டா உங்களுக்கு புடிச்ச நட்ஸ் எதுனாலும் சேர்த்துக்கலாம்
  • கேசரி பவுடர்

Also Read–> சுவையான அசோகா அல்வா செய்வது எப்படி? | Ashoka Halwa Recipe in Tamil

செய்முறை (How to Make Rava Halwa?):

  • ஒரு கப் ரவை எடுத்துக்கோங்க ரவையை வறுக்க தேவை இல்ல
Rava Halwa Recipe in Tamil
Rava Halwa Recipe in Tamil
  • கொஞ்சமா தண்ணி ஊத்தி பிசைங்க நீங்க பிசைஞ்சுட்டே இருக்கணும் ஃபர்ஸ்ட் சேராது ஒரு 1min நிமிஷம் நல்லா பெசஞ்சுக்கோங்க ஒரு சப்பாத்தி மாவு அளவுக்கு வந்துடும்
Rava Halwa Recipe in Tamil
Rava Halwa Recipe in Tamil
  • அப்புறம் ரெண்டு கப் 2 cup தண்ணீரில் அந்த மாவை ஊறவைங்க நல்லா ஃபுல் மாவு ஊறுற அளவுக்கு தண்ணி ஊத்தி ரெண்டு கப் தண்ணில ஊற வச்சுக்கோங்க
  • ரெண்டு மணி நேரம் 2 hours நல்ல ஊறட்டும்
  • ஊறுனதுக்கு அப்புறமா எப்பவும் நம்ம அல்வாக்கு எப்படி பால் எடுப்போமோ அதேபோல மாவ நல்லா தண்ணில கரைச்சு ஃபில்டர் பண்ணிக்கோங்க பால் வரும்
  • அப்புறம் கொஞ்சம் மாவு இருக்கும், அதையும் தண்ணி ஊத்தி நல்லா பிசைஞ்சீங்கன்னா பால் வரும் பால் வரைக்கும் எடுத்துக்கலாம் ஒரு மூன்று தடவைக்கு மேல செய்யாதீங்க அப்புறம் கொஞ்சம் தண்ணியா வரும் பாலு அதனால மூணு தடவ போதும்.
  • ஒரு துணி எடுத்து அந்த துணியில அந்த பால வடிகட்டிக்கோங்க ஏன்னா அதுல ஒன்னு ரெண்டு ரவை இருந்தா வரதுக்கு வாய்ப்பு இருக்கு வடிகட்டினீங்கன்னா ரெண்டேமுக்கால் கப் பால் வரும்
Rava Halwa Recipe in Tamil
Rava Halwa Recipe in Tamil
  • இப்போ ஒரு பேன்ல நம்ம எடுத்து வச்சிருக்க பால அதுல ஊத்திக்கோங்க லோ ஃப்ளேம்ல கலந்து விட்டுகிட்டே இருங்க
  • ஒரு 5 நிமிஷம் நல்லா கலந்து விட்டுட்டே இருந்தீங்கன்னா அது கொஞ்சம் திக்காகுற மாதிரி தெரியும்
  • ஒண்ணே கால் 1¼கப் சீனி ஆட் பண்ணுங்க
  • சீனி ஆட் பண்ணதும் கொஞ்சம் தண்ணியா இருக்கிற மாதிரி தெரியும் நல்லா கிண்டி விட்டுகிட்டே இருந்தீங்கன்னா அந்த திக்னஸ் வந்துடும் ஒரு பேஸ்ட் ஸ்டேஜுக்கு வந்துடும்
  • இப்பதான் நெய் ஆட் பண்ணனும் அரக்கப் நெய்ல (100 g ) ஃபர்ஸ்ட் கொஞ்சமா ஒரு ஸ்பூன் போட்டு கிண்டி விடுங்க அந்த நெய் நல்லா கலந்து விட்டதுக்கு அப்புறம் எல்லா நெய்யும் சேர்த்து கலந்து விட்டுக்கலாம்
  • அடுத்து கலர் ஆட் பண்ணிக்கலாம்
  • இப்போ கால் டீஸ்பூன் ஏலக்காய் பவுடர் சேர்த்து கலந்துவிட்டு ஸ்டவ் ஆப் பண்ணிடலாம்.
  • சூடா இருக்கும்போது நம்மளால அல்வாவா பீஸ் போட முடியாது ஒரு கிண்ணத்துல கொஞ்சம் நெய் தடவி விட்டு அதுல அந்த அல்வாவை சேர்த்துக்கோங்க கொஞ்சம் வார்னதும் பீஸ் போட்டிங்கனா நல்லா வரும் அவ்வளவுதாங்க ரவை அல்வா ரெடி!!!
ரவை அல்வா
ரவை அல்வா ரெடி

குறிப்புகள்:

  • தூள் உணவு வண்ணங்களுடன் ஒப்பிடும்போது ஜெல் நிறங்கள் மிகவும் விலை உயர்ந்தவை வேணுமென்றால் இதையும் பயன் படுத்தலாம், தூள் புட் வண்ணங்களும் பயன்படுத்தப்படலாம்.
  • முந்திரி பருப்புடன் கூடுதலாக மற்ற உலர்ந்த பழங்களையும் சேர்க்கலாம்.
  • விருப்பப்பட்டால் மேலும் நெய் சேர்த்துக்கொள்ளலாம்.

Also Read–> சுவையான மசாலா டீ செய்வது எப்படி? | Masala Tea Recipe in Tamil

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments