முருங்கை இலைகள் அல்லது முருங்கை கீரை அல்லது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், புரதங்கள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, சி, பி3, பி2, இரும்பு மற்றும் மெக்னீசியம் ஆகிய சாதுக்களுக்கு வளமான ஆதாரங்களாகும். இந்த வளமான தாது (minerals) மற்றும் வைட்டமின் உள்ளடக்கம் முருங்கை இலைகளுக்கு அதன் மருத்துவ மதிப்பை அளிக்கிறது.

முருங்கை இலை சூப் ரத்தத்தை சுத்தம் செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப் பையை வலுப்படுத்தும். ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். மஞ்சள் காமாலையை குணப்படுத்தும். தலைவலி, இடுப்பு வலி, வாத மூட்டு வலி, உடல் வலி, பித்தம், கை கால் அசதி யாவும் நீங்கும். உடலில் வலி ஏற்படும் போதும், உடல் நிலை சரியில்லை என நீங்கள் நினைக்கும் போதும் முருங்கைக்கீரையில் செய்த சூப்பை குடிக்கலாம்.
Also Read: முருங்கை கீரை பயன்கள் – Murungai Keerai Benefits in Tamil
நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி?
முருங்கைக்கீரை சூப் செய்வது எப்படி? – கீரை வகைகளிலே பல சத்துக்கள் மற்றும் நன்மைகள் இருப்பது “முருங்கைக்கீரையில்” தான்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை சூப் குடித்து வந்தால் கெட்ட கொழுப்புகள் நீங்கி உடல் எடை குறையும்.
முருங்கை சூப் குடிப்பதனால் “மலட்டுத்தன்மை” மற்றும் “உடல் சோர்வு” நீங்கும்
முருங்கைக்கீரை சூப் recipe? பார்க்கலாம் வாங்க!
சூப் செய்வதற்கு தேவையான பொருட்கள்:
- முருங்கைக்கீரை – 200 கிராம்
- தக்காளி – 1
- பூண்டு பல்லு – 10
- சின்ன வெங்காயம் – 10
- மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
- தேவையான அளவு உப்பு
- சோம்பு – 1 டீஸ்பூன்
முருங்கைக்கீரை சூப் செய்முறை
- ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் தண்ணீர் சுட வைக்கவும்.
பின்பு முருங்கைக் கீரையை காம்புடன் போடவும்
நறுக்கிய தக்காளி, பூண்டு ,வெங்காயம் இவை மூன்றையும் கீரையுடன் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும். - ஐந்து நிமிடம் கொதித்த உடன் சோம்பு, மிளகுத்தூள் ,மஞ்சள் தூள் ,தேவையான அளவு உப்பு இவை அனைத்தையும் மீண்டும் ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி விடவும்.
- சிறிது நேரம் ஆற வைத்த பிறகு வெதவெதப்பான சூட்டில் வடிகட்டி கொள்ளவும்.
சிறு பிள்ளைகளுக்கு 100 ml மற்றும் பெரியவர்களுக்கு 200ml என்று தினமும் காலை வெறும் வயிற்றில் குடிப்பதனால் நமக்கு பல நன்மைகள் தரும் அதில் இரும்பு சத்து இருப்பதனால் எலும்புக்கு “வலிமை” சேர்க்கின்றது.
மேலும் இது போன்ற மருத்துவ குறிப்புகளை தெரிந்து கொள்ள okchennai.com ஐ follow செய்யவும்