Monday, September 25, 2023
Homeசமையல் குறிப்புசுவையான மசாலா டீ செய்வது எப்படி? | Masala Tea Recipe in Tamil

சுவையான மசாலா டீ செய்வது எப்படி? | Masala Tea Recipe in Tamil

Indian Masala Tea Recipe

காலையில எழுந்ததும் பல் தேய்க்காதவங்கள கூட பார்க்க முடியும் ஆனா டீ குடிக்காதவங்கள பாக்கவே முடியாது அந்த அளவுக்கு டீ எல்லாருடைய வாழ்க்கையிலும் ஒரு பகுதியாக இருக்கு. காலை நேர பரபரப்பில் தேநீறும் பரபரக்கிறது என்னையும் கொஞ்சம் சுவைத்து போ என்று.

How to make Masala Tea
How to make Masala Tea

அப்படி பட்ட டீயில் சற்று மசாலாக்களை சேர்த்து குடித்தால் எப்படி இருக்கும். நினைப்பதற்கே நன்றாக இருக்கிறதே!. அவ்வகையில் மசாலா டீ எப்படி செய்யலாம் என்று இப்பதிவில் பார்ப்போம் (How to make Masala Tea).

இந்திய மசாலா டீ தயாரிப்பதன் ரகசியம் என்ன? கண்டிப்பாக அதன் மசாலா, நிச்சயமாக!

டீ மசாலா (tea masala), அல்லது தேயிலை மசாலா, இந்திய வாசனை திரவியங்களின் (Indian spices) கலவையாகும். ஒவ்வொரு இந்தியக் குடும்பமும் டீ தயாரிப்பதில் தனித்தனியாக தனக்கென ஒரு ரெசிபியை கொண்டுள்ளது, இன்று, எனது குடும்பத்தின் ரகசிய செய்முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சாய் மசாலா /டீ மசாலா என்றால் என்ன?
சாய் மசாலா /மசாலா டீ என்பது ஒரு கப் டீ தயாரிக்கும் போது நீங்கள் பயன்படுத்தும் மசாலாப் பொருட்களைக் குறிக்கிறது (chai masala tea recipe).

Home made masala tea recipe
Home made masala tea recipe

இந்தக் கலவையானது குடும்பத்தைப் பொறுத்து மாறுபடும் (masala tea powder recipe). ஆனால் பொதுவாக பச்சை ஏலக்காய், கிராம்பு, இலவங்கப்பட்டை மற்றும் இஞ்சி ஆகியவை அடங்கும். அரைத்த மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவதற்கு ஒரு டப்பாவில் தயார் நிலையில் வைத்திருப்பதை நான் பரிந்துரைக்கிறேன் (indian masala tea recipe).

ஒரு கப் டீ தயாரிக்க பல வழிகள் உள்ளன, ஆனால் எனது குடும்பத்தின் சாய் மசாலா செய்முறை சிறந்த ரெசிபியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன் (home made masala tea recipe).

மசாலா டீ செய்ய தேவையான பொருட்கள்:

Best Masala Tea Recipe செய்முறை:
Best Masala Tea Recipe செய்முறை:

Masala Tea Ingredients

  • பட்டை – 1 துண்டு
  • கிராம்பு – 2
  • ஏலக்காய் – 4
  • மிளகு – 5
  • இஞ்சி -1 துண்டு
  • டீ தூள் – 1 டேபிள் ஸ்பூன்
  • பால் – 1கப்
  • சீனி – 3 டேபிள்ஸ்பூன்

Best Masala Tea Recipe செய்முறை:

Masala Tea Recipe
Masala Tea Recipe
  1. முதல்ல நம்ம மசாலா டீ போடுறதுக்கான மசாலா எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

2.பட்ட ஒரு துண்டு,கிராம்பு 2, ஏலக்காய் 4, மிளகு இதெல்லாம் லைட்டா அப்படியே இடிச்சுக்கோங்க.

  1. அடுத்து இஞ்சி ஒரு துண்டு அதையும் இடிச்சு எடுத்து வச்சுக்கோங்க.
  2. அப்புறம் 1½ கப் தண்ணி சுட வச்சு அதுல நம்ம ரெடி பண்ணி வச்சிருக்க மசாலா போட்டுக்கோங்க.
  3. அப்புறம் உங்களுக்கு புடிச்ச டீத்தூள் எதுனாலும் ஒரு (1)ஸ்பூன் போட்டுக்கலாம் 2 to 3 நிமிஷம் கொதிக்க வச்சுக்கோங்க.
  4. ஒரு கப் பால் எடுத்துக்கலாம் டீ பொறுத்த வரைக்கும் கொஞ்சம் தண்ணியா இருந்தா நல்லா இருக்கும் அதனால ஒரு கப் பாலுக்கு 1½ கப் தண்ணீர் எடுத்துக்கோங்க
  5. மூணு(3) ஸ்பூன் சீனி போட்டுக்கோங்க.
  6. பால் நல்லா பொங்கி வரட்டும் வந்ததும் ஸ்டவ் ஆஃப் பண்ணிக்கலாம்.
  7. ஒரு (1) நிமிஷம் அப்படியே வடிகட்டாம இருக்கட்டும் அப்பதான் நல்லா மசாலா எல்லாம் அதில் இறங்கும்.
  8. ஒரு நிமிஷம் ( 1min ) கழிச்சு வடிகட்டிக்கோங்க.
    நல்ல நுரை வர போல ஒரு ஆத்த ஆத்தி குடிச்சீங்கன்னா ஆஹா! வேற லெவலா இருக்கும்.

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments