Sunday, December 3, 2023
Homeசமையல் குறிப்புகறிவேப்பிலை மருத்துவ பயன்கள் - Karuveppillai Benefits in Tamil

கறிவேப்பிலை மருத்துவ பயன்கள் – Karuveppillai Benefits in Tamil

கறிவேப்பிலை “முர்ரேயா கொயினிகி” (Murraya koenigii) என்று அறிவியல் பூர்வமாக பெயரிடப்பட்டது, இது “ருடேசி” குடும்பத்தைச் சேர்ந்தது. இது ஒரு இயற்கை மருத்துவ தாவரமாக கருதப்படுகிறது. தெற்காசியா இந்த தாவரத்தின் தாயகமாகும், மேலும் இது இலங்கை, பங்களாதேஷ், சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகிறது. இந்தியாவில், இது இமயமலையின் அடிப்பகுதியில், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் அஸ்ஸாமில் காணப்படுகிறது.

Benefits of Curry Leaves

Karuvepillai மருத்துவ குணங்கள்

  • Health Benefits of Curry Leaves: கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கும், ஜீரண சக்தியை மேம்படுத்துவதற்கும் பயன்படுகிறது என்று பல ஆராய்ச்சிகளில் கூறப்பட்டுள்ளது (கறிவேப்பிலை பயன்கள் – Uses of Curry Leaves).
  • கறிவேப்பிலை நாம் தினமும் சாப்பிடுவதனால் நம் உடம்பில் ரத்தத்தில் உள்ளசர்க்கரை நோயைகட்டுக்குள் வைக்க பெரிதும் உதவுகிறது.
  • கறிவேப்பிலையில் இரும்புச்சத்து, கால்சியம்
    விட்டமின், பாஸ்பரஸ், கார்போஹைட்ரேட் ஆகியவை உள்ளடங்கி இருப்பதால் இருதய செயல்பாட்டை மேம்படுத்தும்.
  • முடி வளர்ச்சி மேம்பட பெரிதும் உதவுகிறது. முடி உதிர்தலை கட்டுப்படுத்தும்.
  • எடை குறைப்பதில் பெரும்பங்கு கொண்டுள்ளது (Curry Leaves Benefits in Tamil).

Also Read–> கற்றாழை ஜெல்லின் பயன்கள் – Aloe Vera Gel Uses in Tamil

Also Read–> முருங்கை கீரை பயன்கள் – Murungai Keerai Benefits in Tamil

கறிவேப்பிலை ஜூஸ் செய்முறை

Curry leaves Juice

Curry Leaves Juice Recipe in Tamil: 100 g கறிவேப்பிலை, அதனுடன் 100 ml தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டி தினமும் இந்த ஜூஸ் குடிப்பதன் மூலம் உடம்பில் உள்ள தேவையற்ற (கொழுப்புகளை) வெளியேற்றி தொப்பையை குறைக்க உதவுகிறது.

கறிவேப்பிலை சிம்பிள் ரெசிபி

  • (Simple and Quick recipe): கறிவேப்பிலையுடன், 2 பேரிச்சம் பழத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள “சிவப்பு அணுக்களின்” எண்ணிக்கையை அதிகரிக்கும் இவ்வாறு அதிகரிப்பதன் மூலம் நம் உடம்பில் உள்ள ரத்த சோகையை சரி செய்யலாம்.
  • கறிவேப்பிலை தினமும் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உள்ள (கெட்ட கொழுப்புகளை நீக்கி நல்ல கொழுப்புகளை) அதிகரித்து, இதய நோய் வராமல் பாதுகாக்கிறது.

Also Read–> முருங்கை கீரை சூப் – Murungai Keerai Soup Recipe in Tamil

கறிவேப்பிலை பழம்

Curry berries/Karuvepillai Fruit: கறிவேப்பிலை மரத்துல பழமா? ஆமாங்க நம்மள நிறைய பேருக்கு கருவேப்பிலை மரத்துல பழம் இருக்குமான்றதே தெரியாது.

Karuvepillai Palam

ஆனா அந்த பழத்தை நம்ம சாப்பிடறதுனால நம்ம உடம்புக்கு என்னென்ன மகத்துவம்னு தெரிஞ்சுதுனா இனிமே நீங்க அந்த பழத்தை மிஸ் பண்ணவே மாட்டீங்க. அந்த பழத்தை சாப்பிடுவதால் நமக்கு என்ன நன்மைன்னு பார்க்கலாம்.

கறிவேப்பிலை பழத்தின் நன்மைகள்

  • இந்த பழத்தை சாப்பிடறதுனால கேன்சர் வராம நம்ம நம்மள பாத்துக்கலாம்.
  • அது மட்டும் இல்லாம கேன்சர் வந்தவங்க கூட இந்த பழத்தை சாப்பிட்டா அதோட வீரியம் கட்டுப்படுத்தலாம் என்று நம் முன்னோர் சொல்லி இருக்காங்க (Karuvepillai Fruit Benefits).
  • உடம்புல நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் அதனால நம்ம நோய் தொற்றிலிருந்து நம்மள பாதுகாக்கலாம்.
  • மூளை வளர்ச்சியை மேம்படுத்த பெரிதும் உதவுகிறது.

இந்த சிறிய பழத்துல எவ்ளோ நன்மைகள் என்று பார்த்தீர்களா இனிமே இந்த பழத்தை பார்த்தீங்கன்னா கண்டிப்பா சாப்பிடாமல் இருக்காதீங்க (Curry berries health Benefits).

மேலும் இது போன்ற மருத்துவ தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

FAQs

கறிவேப்பிலை முடியை மீண்டும் வளர்க்குமா?

முடி வளர்ச்சியில் தலையிடக்கூடிய இறந்த மயிர்க்கால்களை அகற்றவும் இலைகள் உதவும். இருப்பினும், கறிவேப்பிலை அல்லது அவற்றின் துணைப் பொருட்களில் ஏதேனும் முடி உதிர்வதை நிறுத்தலாம் அல்லது முடி வளர்ச்சியை மேம்படுத்தலாம் என்பதற்கு உறுதியான ஆதாரம் இல்லை.

கறிவேப்பிலை இரத்தத்தை சுத்தப்படுத்துமா?

இது இரத்த சோகையை தடுக்கிறது.
பொதுவாக, இரும்புச்சத்து நிறைந்த மூலங்கள் உடலில் உறிஞ்சப்படுவதற்கு ஃபோலிக் அமிலத்தை உட்கொள்ள வேண்டும். கறிவேப்பிலையில் உள்ள ஃபோலிக் அமிலத்தின் அதிக உள்ளடக்கம் அதையும் கவனித்துக்கொள்கிறது. கறிவேப்பிலை ஒரு சக்திவாய்ந்த இரத்த சுத்திகரிப்பாளராகவும் செயல்படுகிறது.

கறிவேப்பிலையை யார் சாப்பிடக்கூடாது?

இந்த மூலிகையில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், இதை அதிகமாக உட்கொள்வது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். இது மக்களுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் அமிலத்தன்மையை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. ஒரே நேரத்தில் 15 க்கும் மேற்பட்ட பச்சை கறிவேப்பிலை சாப்பிடுவது சிறந்தது.

RELATED ARTICLES

Most Popular

Recent Comments