Friday, June 9, 2023
Homeசமையல் குறிப்புசுவையான அசோகா அல்வா செய்வது எப்படி? | Ashoka Halwa Recipe in Tamil

சுவையான அசோகா அல்வா செய்வது எப்படி? | Ashoka Halwa Recipe in Tamil

பாசிப்பருப்பு அல்வா செய்வது எப்படி?

அல்வானு சொன்னாலே நாக்குல அதோட சுவை சாப்பிடாமலே வந்துடுங்க. அப்படிப்பட்ட அல்வாள நம்ம இன்னைக்கு செய்ய போற அல்வா அசோகா அல்வா.

அசோகா அல்வா எங்க பேமஸ் தெரியுமா நம்ம திருவையாறு (Ashoka Halwa Famous in Thiruvaiyaru). அசோகா அல்வா செய்றதுக்கு கம்மியான நேரமும் குறைவான பொருட்கள் தாங்க தேவைப்படும்.

Ashoka Halwa Recipe in Tamil
பாசிப்பருப்பு அல்வா

அசோகா ஹல்வா ரெசிபி மிகவும் எளிதானது ஆனால் முதல் முறையாக அதை செய்வோருக்கு சிறிய சவாலான வேலையாக இருக்கும். அடுத்து இந்த ஹல்வா பளபளப்பான தோற்றத்துடன் மிருதுவாக இருக்க நெய்யின் அளவு சற்று அதிகம் தேவை. முதல் முறையாக செய்பவராக இருந்தால், செய்முறை மற்றும் டிப்ஸ் பிரிவில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொய்ண்ட்ஸ்களையும் நன்கு படிக்க வேண்டும்.

அசோகா அல்வா செய்ய தேவையான பொருட்கள்:

அப்படிப்பட்ட சுவையான அசோகா அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம் அதுக்கு தேவையான பொருட்கள் (ashoka halwa ingredients in tamil):

ashoka halwa ingredients in tamil
ashoka halwa ingredients in tamil

Ashoka Halwa Ingredients

  • நெய் – 1½ கப்
  • முந்திரிப் பருப்பு – தேவையான அளவு
  • வேக வைத்த பாசிப்பயிறு – 2 கப்
  • கோதுமை மாவு – 2 டேபிள் ஸ்பூன்
  • சீனி – ஒரு(1) கப்
  • குங்குமப்பூ – கட்டாயம் அல்ல வீட்டில் இருந்தால் சிறிதளவு
  • ஏலக்காய் பவுடர் – தேவையான அளவு

செய்முறை (How to Make Ashoka Halwa in Tamil?):

  1. முழு பாசிப்பயிறு எடுத்துக்கலாம் அப்படி இல்லன்னா தோல் நீக்கிய பாசி பயறு இருக்கும் இல்லையா அதை வேகவைத்து அரைத்து எடுத்துக்கலாம். நல்லா பேஸ்ட் மாதிரி அரைச்சு எடுத்துக்கோங்க.
  2. நெய் கொஞ்சம் எடுத்துக்கோங்க நெய் சூடானதும் தேவையான அளவு முந்திரி பருப்பு போட்டு வறுத்து எடுத்துக்கோங்க
  3. முந்திரிப் பருப்பு பொன்னிறமா வந்ததும் அதை தனியா எடுத்து வச்சுட்டு
  4. முந்திரி பருப்பு வறுத்த நெய் இருக்கு இல்லையா அது கூட வேகவைத்த பாசி பயிர அரைச்சு வச்சிருக்கோம்ல அதை சேர்த்து வதக்கி க்கோங்க
  5. அடுத்து ரெண்டு டேபிள் ஸ்பூன் கோதுமை மாவு சேர்த்துக்கோங்க கோதுமை மாவு சேர்க்கிறதுனால நல்லா வளவளன்னு இருக்கும் ஒரு நிமிஷம் நல்லா வேகட்டும் இப்ப கொஞ்சமா நெய் சேர்த்து அப்படியே நல்லா வதக்கிக்கோங்க
  6. 5 to 10 நிமிஷம் அப்படியே வதக்கிக்கிட்டே இருங்க
  7. (2) ரெண்டு கப்பு பாசிப்பயிர் எடுத்திருக்கேன் அதனால ஒரு கப் சீனி சேர்த்துக்கலாம்.
  8. கலர் தேவைப்பட்டா குங்குமப்பூ ஊற வச்சு சேர்த்துக்கலாம் எந்த ஒரு ஆர்டிபிசியல் ஆன பவுடர் சேர்க்காமல் இயற்கையான குங்குமப்பூ சேர்த்துக்கலாம்
  9. கொஞ்சமா அப்படியே வாசனைக்காக ஏலக்காய் பவுடர் லைட்டா தூவிக்கோங்க அப்புறம் நம்ம வறுத்து வச்ச முந்திரி சேர்த்துட்டு கொஞ்சமா நெய் சேர்த்துக்கிட்டு அப்படியே நல்லா கலந்துக்கோங்க.

Also Read–> லஞ்ச் பாக்ஸ் ஐடியாஸ் | Indian Lunch Box Ideas in Tamil

குறிப்பு (Tips for making Ashoka Halwa)

  1. நெய்யின் அளவைக் குறைக்கலாம் ஆனால் அல்வா அவ்வளவு பளபளப்பாக இருக்காது.
  1. பருப்பை வறுத்து சாப்பிடுவது சுவையை அதிகரிக்கிறது மற்றும் ஹல்வாவை ஒட்டாமல் செய்கிறது.
Ashoka Halwa Thiruvaiyaru
சூடான சுவையான அசோகா அல்வா

தித்திக்குதே……
தித்திக்குதே…….

சூடான சுவையான அசோகா அல்வா ரெடி!!!

திருவையாறு அசோகா அல்வா அங்க எப்படி கூப்பிடுறாங்கன்னா திருவையாறு அசோக என அழைக்கப்படுகிறது (Ashoka Halwa Thiruvaiyaru).

Also Read–> சுவையான மசாலா டீ செய்வது எப்படி? | Masala Tea Recipe in Tamil

மேலும் இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள okchennai.com follow செய்யுங்கள்.

FAQs for Ashoka Halwa

அசோகா அல்வா எதனால் ஆனது?

அசோகா ஹல்வா முதன்மையாக பருப்பு, கோதுமை மாவு மற்றும் குங்குமப்பூ உணவு வண்ணத்தில் தயாரிக்கப்படுகிறது, ஆனால் நீங்கள் எப்போதும் உங்கள் விருப்பப்படி உலர்ந்த பழங்கள் மற்றும் கொட்டைகள் சேர்க்கலாம்.

என் ஹல்வா ஏன் கடினமாக உள்ளது?

போதுமான அளவு நெய் அல்லது தண்ணீர் சேர்க்கப்படாவிட்டால், குளிர்ந்த பிறகு ஹல்வா கடினமாகிவிடும். மீண்டும் சூடாக்கி, விளிம்புகளைச் சுற்றி எண்ணெய் இல்லை எனில் அதிக நெய்யை சேர்க்கவும்.

கடின ஹல்வாவை எவ்வாறு சரிசெய்வது?

சில சமயம் ஹல்வாவை அதிகமாக வேகவைத்து, நெய் சேர்த்தால் போதாதென்று ஹல்வா கெட்டியாக இருக்கும். அந்த வழக்கில். மேலும் நெய் சேர்த்து மிகக் குறைந்த தீயில் கிளறிக்கொண்டே இருக்கவும். அல்வா மென்மையாகும்.

அசோகா ஹல்வாவுக்கு பிரபலமான நகரம் எது?

திருவையாறு
அசோக அல்வா தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவையாறு ஆண்டவர் அல்வா கடையில் விற்கப்படும் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்றாகும். திருவையாறில் ஓட்டல் நடத்தி வந்த ராமையர் கண்டுபிடித்த அசோக அல்வா.Thiruvaiyaru Ashoka Halwa

RELATED ARTICLES

Most Popular

Recent Comments