ஹாய் மக்களே! இது okchennai.com இந்த பதிவில் நமக்கு பயனுள்ள தகவல் ஒன்றை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். இத்தகவல் முக்கியமாக பெண்களுக்கு 100% ரிசல்ட் தரக்கூடியதாக இருக்கும், அதனால் இப்பதிவை முழுமையாக தொடர்ந்து படிக்கவும்.

பொதுவாகவே பெண்கள் முக்கியமான இரண்டு காரணங்களுக்கு மிகவும் கவலை அடைகின்றனர். முதல் முகப்பரு மற்றொன்று தலைமுடி உதிர்தல். இதனை சரி செய்வதற்கு நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தக்கூடிய அரிசி கழுவிய நீர் (Rice water) போதுமானது.
பொதுவாக நாம் அரிசி கழுவிய தண்ணீரை (Rice water) ஒரு பொருட்டாக எண்ணாமல் அந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுவோம் ஆனால் இந்த பதிவை கண்ட பின்னர் நீங்கள் அதனை கீழே ஊற்ற மாட்டீர்கள். ஏனென்றால், ரைஸ் வாட்டர்ரின் பயனோ ஏராளம்.
அரிசி கழுவிய நீர் எவ்வாறெல்லாம் நமக்கு பயன்படுகிறது என்பதை பார்க்கலாம்:
அரிசி கழுவிய நீர்/Rice water-ன் நன்மைகள்:
- ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் (Anti-oxidants)
- வைட்டமின்-B (Vitamin-B)
- வைட்டமின்-E (Vitamin-E)
- மினெரல்ஸ் (Minerals)
முதலில் “முகத்திற்கு” பயன்படும் முறையைப் பற்றி பார்க்கலாம் ;
பெண்களை பொறுத்த வரைக்கும், என்னதான் Beauty parlor க்கு போயி அழகானாலும் வீட்டில் இருக்கும் போதும் தன்னோட அழகை பராமரிப்பதற்கு வீட்டில் இருக்குற பொருளை கொண்டே எதாவது ட்ரை பண்ணிட்டே இருப்பாங்க. அந்த மாதிரியான பெண்களுக்காக அரிசி கழுவிய நீரை (Rice water) கொண்டு எப்படி சருமத்தை பராமரிக்கலாம் என்று இப்பதிவில் பார்க்கலாம்.

- அரிசி கழுவிய நீரினை முகத்தில் பூசி வந்தால் பருக்களும் (Pimples), கரும்புள்ளிகளும் (Blackheads) நீங்கும். முகத்திற்கு ஒரு சிறந்த டோனர் ஆகா அமைகிறது. இதனால் முகம் பளபளப்பாக இருக்கும்.
- அரிசி கழுவிய நீரை மேக்கப் போடுவதற்கு முன்பு ஸ்ப்ரே பாட்டில் மூலம் முகத்தில் அடித்துக் கொண்டால் எந்தவிதமான தோல் பிரச்சனைகளும் வராது.
- அரிசி கழுவிய நீரை தினமும் ஸ்ப்ரே பாட்டில் மூலம் முகத்தில் அடித்துக் கொண்டால் முகத்துளைகளை (Facial pores) மூடி, வெண்புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளை (Whiteheads and Blackheads) அடியோடு நீக்கி, முகத்தை பொலிவடைய செய்கிறது.
- வெயிலினால் முகத்தில் ஏற்படுகிற கருமையை நீக்க: ரைஸ் வாட்டர் அதாவது வீட்டில் அருசி கழுவிய நீரை 2 அல்லது 3 டீ ஸ்பூனுடன் 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் வாரத்திற்கு 2 நாட்கள் அப்ளை செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் கருமை அறவே நீங்கி, ஒரு இயற்கையான sun screen-னாக பயன் படுகிறது.
- ரைஸ் வாட்டர் சீரம் – ரைஸ் வாட்டர் 1 டீ ஸ்பூன், அலோ வேரா ஜெல் 1/2 டீ ஸ்பூன், அல்மோன்ட் ஆயில் 1/2 டீ ஸ்பூன் சேர்த்து தினமும் இரவு முகத்தில் அப்ளை செய்வதன் மூலம் முகத்தின் PH-லெவல் சீராகவும், பளபளப்பாக இருக்க உதவுகிறது. இந்த ரைஸ் வாட்டர் சீரம்-ஐ ஒரு சிறிய box-ல், பிரிட்ஜில் வைத்து 7 நாட்களுக்கு பயன் படுத்தலாம்.
அரிசி கழுவிய நீர் நன்மைகள்:
பொதுவாக அனைத்து பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் நீளமான முடி வேண்டும், முடி உதிர்வு முற்றிலும் நீங்க வேண்டும் என்று ஆசை இருக்கும். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் மற்றும் ஆண்களுக்கும் ஏற்படும் முடி உதிர்தல் பிரச்சனைகள் அதிகமாகவே காணப்படுகிறது. இதற்கு காரணம் அதிக “மன அழுத்தமும்” ஒன்று, இதனை சரி செய்வதற்கு அரிசி கழுவிய நீரை பயன்படுத்தலாம்.
அரிசி கழுவிய நீரை வீணாக்காமல் அதனை கொண்டு முடியை சுத்தம் செய்தால் முடி பாதிக்கப்படுவது குறைகிறது என ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதாவது, அரிசி கழுவிய தண்ணீரில் ஏராளமான வைட்டமின், மினெரல்ஸ் இருக்கிறது.

- அரிசி கழுவிய நீரை முடியில் தேய்த்து பத்து நிமிடங்கள் ஊறவைத்து குளிப்பதன் மூலம் முடி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளரும்.
- அரிசி கழுவிய நீரினை தலைமுடிக்கு பயன்படுத்துவதன் மூலம் தலைமுடியின் சிதைவுகளை தவிர்க்கலாம்.
- கூந்தலில் ஏற்படக்கூடிய வறட்சியையும் தடுக்கலாம். இதனால் பொடுகு தொல்லை முற்றிலும் நீங்கும்.
- தலைமுடிக்கு கண்டிஷனர் போடுவதற்கு பதிலாக இதனை பயன் படுத்தலாம். இதனால் எந்த வித கெமிக்கல் இல்லாமல் முடியை சீராக பராமரிக்கலாம்.
- நீங்கள் இதனைப் பயன்படுத்தி வருவதன் மூலம் நீங்கள் இழந்த முடியை திரும்ப பெறலாம்.
ஆகையால் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு, இந்த அரிசி கழுவிய தண்ணீரை (Rice Water) வீணாக்காமல் அதை பயன் படுத்தி அதன் நன்மைகளை பெற்றிடுங்கள்.
மேலும் இது போன்ற அழகு குறிப்புகளை தெரிந்து கொள்ள okchennai.com-ஐ follow செய்யவும்.