Friday, June 9, 2023
Homeஅழகு குறிப்புகள்கற்றாழை பயன்கள் - Aloe Vera Gel Uses in Tamil

கற்றாழை பயன்கள் – Aloe Vera Gel Uses in Tamil

சோற்றுக் கற்றாழைக்கு பல பெயர்கள் உள்ளன கன்னி ,குமரி, ஆலோ வேரா என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது. கற்றாழை நமது சருமத்தை பொலிவோடு வைத்திருக்க உதவுவது மட்டுமல்லாமல் நம்மை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பல வழிகளில் உதவுகிறது. இந்த பதிவில் கற்றாழையால் நமக்கு ஏற்படக்கூடிய மருத்துவ நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Aloe Vera - கற்றாழை ஜெல்

கற்றாழையின் பயன்கள் (Aloe Vera Gel Benefits):

  • அழகு பொருட்கள் மருந்து பொருட்கள் தயாரிக்க கற்றாழை பெரிதும் பயன்படுகிறது.
  • முகத்திலிருந்து உள்ளங்கால் வரை பயன்படுத்தும் மூலிகை கற்றாழை.
  • பேசியல் செய்து சருமத்தை பொலிவாக்குவதை விட இயற்கையாகவே பொலிவைத் தருகிறது கற்றாழை.
  • இவை கண்,உதடு, கூந்தல் பிரச்சனை,சரும பிரச்சனை அனைத்திற்கும் தீர்வு காண கற்றாழை உதவுகிறது.
  • கற்றாழை உள்ளே இருக்கும் சதை பகுதியான ஜெல்லை எடுத்து அதை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.
  • வெயில் காலங்களில் சூரியனின் வெப்ப கதிர்கள் நம் மீது நேரடியாக படுவதால் நமக்கு சருமம் பாதிக்கப்படுகிறது.

முகத்தில் ஏற்படும் முகச்சுருக்கத்தை நீக்கும் Aloe Vera Gel Cleansing (Cleansing using Aloe Vera Gel):

  • கற்றாழை பயன்படுத்தி முகத்திற்கு கிளன்சிங் செய்ய வேண்டும்.
  • அதற்கு ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் இரண்டு ஸ்பூன் ஆலுவேரா ஜெல் எடுத்துக் கொள்ளுங்கள்.
  • அதனுடன் 2 spoon காய்ச்சாத பால் இவை இரண்டையும் நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள் பின்பு இதனை முகத்தில் அப்ளை செய்து கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் நன்றாக அப்ளை செய்யுங்கள்.
  • 10 முதல் 15 நிமிடம் வரை முகத்தில் இருக்கட்டும் இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும்.

கருவளையம் நீங்க கற்றாழை (Aloe Vera Gel to Reduce Dark Circles):

பயன்படுத்தும் முறை:

முதலில் ஆலோவேரா ஜெல் அதனுடன் மஞ்சள் சிறிதளவு மற்றும் காய்ச்சாத பால் இவை மூன்றையும் கலந்து போட்டு வருவதன் மூலம் கருவளையம் நீங்கும்.

கற்றாழை பயன்படுத்தி முகம் புத்துணர்ச்சி பெற (Aloe Vera Gel for Face):

Aloe Vera Gel for Face- கற்றாழை ஜெல்

கற்றாழையில் உள்ள உள்ள சதைப்பகுதியை எடுத்துக்கோங்க அதனுடன் 2 ஸ்பூன் water இரண்டையும் சேர்த்து நல்லா மிக்ஸி ஜாரில் போட்டு அரைச்சிக்கோங்க அந்த ஜெல்ல ஐஸ் கியூப் ட்ரேயில் ஃபில் பண்ணி பிரிட்ஜில் வச்சிட்டு ஐஸ்கியூப்பா ஆனதும் வெளியில் எடுத்து நேரடியா அந்த ஐஸ் கட்டிய பயன்படுத்தால் காட்டன் துணியில் வைத்து பயன்படுத்த வேண்டும்.

முடி வளர்ச்சிக்கு கற்றாழை (Aloe Vera for Hair Growth):

Aloe vera for Hair- கற்றாழை ஜெல்
  • முடி உதிர்வு, இள நரை, பொடுகு, வறட்சியான கூந்தல், கூந்தலின் வளர்ச்சியின்மை ஆகிய அணைத்து பிரச்னைக்கும் கற்றாழையில் உள்ள ஆன்ட்டிஆக்சிடென்ட் (anti-oxidant) இறந்த செல்களை நீக்கி புதிய முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
  • கற்றாழையில் ஆன்டிபாக்டீரியல் இருப்பதனால் தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்கும்.
  • மேலும் தலையில் ஏற்படும் வழுக்கை பிரச்சனையை நீக்கும்.

Also Read: முருங்கை கீரை பயன்கள் – Murungai Keerai Benefits in Tamil

கற்றாழையின் மருத்துவ குணங்கள் (Health Benefits of Aloe Vera Gel):

  • அந்த காலத்தில் காயம் ஏற்பட்ட இடத்தில் கற்றாழை பயன்படுத்தி காயங்களை சரி செய்வர்.
  • காயம் ஏற்பட்ட இடத்தில் ரத்த ஓட்டத்தை அதிகமாக்கி புண் சீக்கிரமாக ஆறிவிடும்.

கற்றாழை ஜெல்லை உட்கொள்ளலாமா?

  • கற்றாழை ஜெல்லை வாரத்தில் இருமுறை ஒரு ஸ்பூன் உடம்பிற்கு உட்கொள்ளலாம்.
  • முக்கியமாக காலை நேரத்தில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதனால் செரிமான பிரச்சனையை சரி செய்யும்.
  • கற்றாழையை நீர் மோருடன் கலந்து குடிப்பதால் வயிற்றுப்புண் உடல் சூடு முற்றிலும் நீங்கும். லிவர் கிட்னி செயலை மேம்படுத்த கற்றாழை பெரிதும் உதவுகிறது.
  • கற்றாழையில் 75 க்கு மேற்பட்ட கலவைகள் இருக்கின்றன. விட்டமின் என்சைம்ஸ் மினரல்ஸ் ஆன்டிபாக்டீரியல் இருப்பதனால் ரத்த ஓட்டம் உடம்பில் அதிகரிக்கிறது.

மேலும் இது போன்ற மருத்துவ குறிப்புகளை தெரிந்துகொள்ள okchennai.com ஐ ஃபாலோ செய்யுங்கள்

Also Read: முருங்கை கீரை சூப் – Murungai Keerai Soup Recipe in Tamil

RELATED ARTICLES

Most Popular

Recent Comments